காலம்

காதடைத்த காரு, வண்டி சத்தமெல்லாம், காணாமல் போனதென்ன!

கானம் பாடும் வானம் பாடி பறவையெல்லாம், 

காதலிக்கும் இசையும் கேட்டதென்ன!!!...

அன்றாட கூலி வாங்கி சோறு திண்ணும், ஏழை வீட்டில் 

அடுப்படி எரிவதெங்கே? 

புத்தகம் வாங்க 

பணமில்லா பிள்ளைகளும், 

புது இணையவழி கல்வி பயில்வதெங்கே?..... 

முன்பின் தெரியாத யாருக்கோ, முன்களப்பணியாளரும்  

உயிரை அளித்ததெப்படி? 

இதுவரை காணாத யுத்தமாய் இருப்பினும், 

இணைந்து போராடினால் 

கொரோனா இருப்பதெப்படி?.....

பாரம்பரிய மருத்துவமும், பாட்டிவைத்தியமும், 

பலமாக்கும் 

நமக்கிங்கே,பயம் ஏன்? 

வதந்திகளைப் பரப்பி விட்டு, வாய்க்கிழிய பேசிவிட்டு, 

தடுப்பூசி போடாமல் இருப்பதும்,ஏன்?... 

இயற்கை தன்னை புதுப்பிக்க; இந்நிலைமாறி ,

நல்லநிலையை வரவேற்க... இல்லத்திலேயே தன்னலம் காப்போம், இக்கொரோனாவை வேரோடு அழிப்போம்!!!...

- பரமேஸ்வரி


Comments