கீழடி - யவின் தமிழன்


"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றிய மூத்த குடி!"
அதாவது,மலைகளும் வயலும்
தோன்றுவதற்கு முன்பே
தமிழானது உருவாகிவிட்டது!!!....

நம் தமிழ்
பல்லாயிரம் ஆண்டுகள்
பழமையானது
என்பது
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
உண்மை என்றாலும்,
அதற்கான ஆதாரங்கள்
கிடைத்தபோதிலும்
அரசு அதனை
வெளிவிடத் தயாராக இல்லை!!!....

வடஇந்தியாவில்
தேர் ஒன்று கிடைத்ததற்கே
₹6000 கோடி ரூபாய் செலவில்
அருங்காட்சியம்
அமைக்க நிதி ஒதுக்கிய மத்திய அரசு,
2600 ஆண்டுகளுக்கு முன்பே
எழுத்தறிவுடன் உருவாகிய
தமிழ் இனத்துக்கு
நிதியாக வெறும்
₹55 இலட்சம் மட்டுமே
ஒதுக்கியுள்ளது.

மத்திய அரசாங்கம்
தமிழகத்தின் மீது கொண்ட
அக்கரையும் அன்பும்
சொல்லிதான் தெரியவேண்டும்
என்ற அவசியமில்லை.

அக்காலத்தில்
மனிதன் நாகரிகத்துடன்
இருந்திருப்பானா என்றெண்ணுகையிலே,
எழுத்தறிவே கொண்ட
ஒரு இனம்
வாழ்ந்துள்ளது.

முதல் கட்ட ஆய்வு
நடத்தியவரை
அரசு அசாமிற்கு
இடமாற்றியது,
பின்பு பல்வேறு
இன்னல்களுக்குப் பின்
ஐந்தாம் கட்ட ஆய்வு
நடத்தப்பட உள்ளது.

தாயக்கட்டைகள்,இரும்பு,
ஆபரணங்கள்,பானைகள்
போன்ற பல்வேறு
வரலாற்று ஆவணங்கள்
நமக்கு கிடைத்துள்ளன.
பானைகளில் "ஆதன்"
என்ற பெயர்
அதிகமாக எழுதப்பட்டுள்ளதாய்
கூறப்படுகிறது.

இத்தனை ஆவணங்கள்
கிடைத்தபோதிலும்
மத்திய அரசு
அகழ்வாராய்ச்சி நடத்த
நிதி ஒதுக்கியபாடில்லை.

கீழடியினை விட
பழமையான நாகரிகம்
தூத்துக்குடியில் உள்ள
ஆதிச்சநல்லூரில் உள்ளது.
இது சுமார்
3600 ஆண்டுகள்
பழமையானது எனக்
கூறப்படுகிறது.

இதற்கான ஆய்வுக்கட்டுரைகளை
நீதிமன்றம் வெளியிடக்
கூறிய பின்பும்
இதுவரை அரசு வெளியிடவில்லை.

இவை அனைத்தும்
உலக வரலாற்றையே
மாற்றக் கூடியவை.
அந்நிய நாட்டவன்
ஒரு பழம்பெரும் பொருள்
கிடைத்தாலே
அதனை பொக்கிஷமாய்
பாதுகாப்பான்.
ஆனால் நாமோ
சிஎஸ்கே'வா?எம்ஐ'யா?
தலயா?தளபதியா?
என்று சண்டைபோடவே
சரியாக உள்ளது.

தமிழன் வீரத்தால் அழிக்கப்படுதில்லை,
ஒவ்வொரு முறையும்
துரோகத்தாலே அழிக்கப்படுகிறான்.

அனைவரும்
ஒன்றிணைந்து
நம் அடையாளம் பெற
போராடுவோம்!!!...



Comments

  1. நீர் வாழ்க
    உமது தமிழ் வளர்க

    ReplyDelete
    Replies
    1. Namma mind'uh imsai Arasan padaththukku poghuthey😂😂😂

      Delete
  2. அருமை... 👏👏👏

    ReplyDelete
  3. தங்கள் எண்ணங்கள் சொல்லோடு நின்றுவிடாமல் செயலாக வளர வாழ்த்துக்கள்.....

    ReplyDelete

Post a Comment