லாக்டவுன் வாசிகள் - பகுதி 1

 என் வாழ்க்கையில எவ்வளவோ இக்கட்டான சூழ்நிலைய சந்திச்சிருக்கேன், ஒரு தடவை கூட பயந்ததில்ல. ஆனா இன்னைக்கி நெஞ்செலும்ப உடச்சிகிட்டு ஹார்ட்டு வெளிய வந்து விழுந்துரும் போல. இருக்குற டென்ஷன்ல சுத்தி நிக்கிரவங்க வேற அவன் செத்துட்டான் இவன் போயிட்டான்னு கதை பேசுறாங்க-  "இலவச கரோனா பரிசோதனை மையம்". சாதனா ஆஸ்பத்திரியில இருக்கா, சக்தி அவ வயித்துகுல்ல இருக்கா, அவங்கள டிஸ்சார்ஜ் செஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு பரிசோதனை செஞ்சிட்டு வாங்கன்னு டாக்டர் சொல்லிட்டாரு. கரோனா நெகடிவ்னு வரனும், கும்பிடாத சாமி எல்லாம் வேண்டிட்டு இருக்கான். கல்யாணம் பண்ற அப்போ இப்படி எல்லாம் ஒரு நோய் வரும்னு தெரியல, தெரிஞ்சு இருந்தா இன்னும் கொஞ்ச நாள் பொருமையா இருந்துருப்போம். பரிசோதனை ரிசல்ட் நாளைக்கு கெடச்சிரும்னு சொன்னாங்க. அடுத்த நாள் பரிசோதனை ரிசல்ட் பேப்பர்லாம் எடுத்துட்டு டாக்டர பார்க்க போறேன். 



"மிஸ்டர்,  உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு அம்மாவும் குழந்தையும் ஆரோக்கியமா இருக்காங்க, சந்தோஷம் தான?". சந்தோசமா இருக்காதா பின்ன, ஆனா பார்க்க விடமாட்ராங்களே. கரோனாவ கொன்னுட்டு ......... அத என்னால கொல்ல முடியாது ஆனா அவ்ளோ கோவம் வருது. "டாக்டர் இந்தாங்க பரிசோதனை ரிசல்ட்டு வந்துருச்சு". "என்னப்பா இத்தனை பேப்பர் இருக்கு?". இருக்காதா பின்ன என் அம்மா, அப்பா, அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா, பக்கத்து வீட்டுக்காரன், எதிர் வீட்டுக்காரனு எல்லாத்தையும் பரிசோதனை பண்ண வச்சிட்டன்ல. என் பொண்ணு என் கைல, சாதனாவோட அரவணைப்புல, சொந்த பந்தத்தோட அன்புக்கு நடுவுல இருக்குறதுக்கு பதிலா இந்த கண்ணாடிக் கூண்டுக்குள்ள இருக்கா. கரோனா இந்த உலகத்தையே புரட்டி போட்டு இருக்கலாம், ஆனா என் சக்திகாக இந்த உலகத்த நான் புரட்டனும், பாதுகாப்பா பாத்துக்கணும். "மிஸ்டர், சிவா பரிசோதனைக்கு எல்லாத்தையும் கூட்டிட்டு போன மாறி தடுப்பூசி போடவும் கூட்டிட்டு போங்க ". சொல்லமுடியாது ஊரையே தடுப்பூசி போட வச்சாலும் வைப்பன்.   என்  சக்திகாக...!

- செசாந்த் அகமொழியன்

Comments