அவள் பெயர் விக்டோரியா - கவிஞர் பிரகாஷ்

ஏழாவது ப்ளோரில் இருந்து
அவள் இறங்கி கொண்டிருக்கும்போதே
அன்டர் க்ரவுண்டில்
அரை ட்ரவுசரோடு படுத்துக்
கொண்டிருக்கும் எங்களுக்கெல்லாம்
மூச்சு முட்டுகிற மாதிரி
ஒரு சென்ட்டு வாசனை வரும்!
முட்டிக்கு கீழே உடையணியாத
அவள் முகத்தை மொத்தமாக
அணிந்துகொண்ட ரோஸ்பவுடரை
விட அழகாகத்தான் இருந்தது
அவள் கருப்புநிறம், லூசு அவளுக்குத்தான் அது தெரியவே இல்லை..
காற்று வாங்குவதற்காக மொட்டை
மாடி செல்லும்போதெல்லாம்
இலவச இணைப்பாக அவள்
சிரிப்பையும் வாங்கிக்கொண்டு வந்த இரவுகளில் மட்டும் கனவில் வரும் நிலா கருப்பு கலரில் இருக்கும்!
ஹை ஹீல்ஸால் தடக் தடக்கென்று எங்களை கடந்து போகும்போதெல்லாம் இதயத்தில் பதிவாகும் 7 ரிக்டருக்கு அவளிடத்தில் நஷ்ட ஈடு கேட்பதற்குள், அந்த விக்டோரியா பிராண்ட் ப்ராவை எடுத்துக்கொண்டு (சாரி எப்பொழுதும் மாடியில் காயும்) காலிசெய்து கிளம்பிவிட்டாளாம்...
பேப்பரும் காபியும் எடுத்துக்கொண்டு மாடிக்கு
கவிதையெழுதப் போனவன்
அவளிருந்த வீட்டின் கதவில்
"மிஸ் யூ ப்ளாக் பியூட்டி"
என்று எழுதிவிட்டு வந்தேன்.
குறிப்பிடுவதற்கு தவறியதற்கோ
இல்லை குறிப்பெடுத்து
கொள்வதற்கோ கூடத்
தேவையில்லை
இப்படி முகத்திற்கு ஏற்றமாதிரி
பெயரைத் தேடிக்கொள்ளுகிற
ஒரு பெரியவேலையை
வைக்கமாலிருக்காவாவது நான்
பேர் கேட்டபின்னால்
அவள் காலி செய்திருக்கலாம்...


                               

Comments

  1. வாழ்த்த ஆரம்பித்தால் வார்த்தைகள் தீர்ந்து விடும்... மிகவும் அருமை....😍

    ReplyDelete
  2. வேற லெவல் நெறைய எழுது டா

    ReplyDelete
  3. Superb saga...Just the beginning da...u ll reach much higher levels...all the best...I'm very happy

    ReplyDelete
  4. All the best kavignarae....

    ReplyDelete
  5. கருப்பு நிறப் பேரழகால்
    கவர்ந் திழுக்க பட்டதாலோ
    கவிதையெழுத போனநீயும்
    காதல் வயப் பட்டாயோ..

    எரியும் தீயின் நிறஅழகை
    எட்டிப்பார்த்து ரசித்துவிட்டு
    ஏங்கவைத்த அவள்பெயர
    எப்படித்தான் விட்டாயோ.....

    ReplyDelete
  6. கருப்பு நிறப்
    பேரழகால்
    கவர்ந் திழுக்கப்
    பட்டதாலோ
    கவிதை எழுத
    போனநீயும்
    காதல் வயப்
    பட்டாயோ...

    எரியும் தீயின்
    நிறஅழகை
    எட்டிப் பார்த்து
    ரசித்துவிட்டு
    ஏங்க வைத்த
    அவள்பெயரை
    எப்படித்தான்
    விட்டாயோ...


    ReplyDelete
  7. அற்புதமான கோர்வை....ரசனையின் ராட்சத வெள்ளத்தில் மூழ்கி கவிதையின் தூண்டிலில் சிக்கவைக்கும் சொல்லாடல்!

    ReplyDelete

Post a Comment