எல்லாவற்றிற்கும் ஒரு
காலமுண்டு.......
பிறக்க ஒரு காலமுண்டு;
இறக்க ஒரு காலமுண்டு.....
விதைக்க ஒரு காலமுண்டு;
அதை அறுக்க ஒரு காலமுண்டு...
காயப்படுத்த ஒரு காலமுண்டு;
அதை, குணமாக்க ஒரு
காலமுண்டு.....
பாழாக்க ஒரு காலமுண்டு;
அதை, சீராக்க ஒரு காலமுண்டு....
அழிக்க ஒரு காலமுண்டு;
அதை,கட்ட ஒரு காலமுண்டு.....
தூக்கியெறிய ஒரு காலமுண்டு;
அதை,தேட ஒரு காலமுண்டு.....
சண்டைப்போட ஒரு காலமுண்டு;
சமாதானம் செய்ய ஒரு
காலமுண்டு.....
மறக்க ஒரு காலமுண்டு;
விழிக்க ஒரு காலமுண்டு.....
பேச ஒரு காலமுண்டு;
அமைதியாய் இருக்க ஒரு
காலமுண்டு.....
அழ ஒரு காலமுண்டு;
சிரிக்க ஒரு காலமுண்டு...
இப்படி, எல்லாவற்றிற்கும் ஒரு
காலமுண்டு.....
இதற்கிடையில்
வருத்தப்படுவதினால்
யாருக்கு, என்ன பலன் உண்டு???
- பூமணி
Comments
Post a Comment