கவிஞர்கள் பலவிதம்


கதையாய் சிலர் உரைப்பர் - மையக்

கருத்தாய் சிலர் உரைப்பர் ;

கண்டதைச்   சிலர் உரைப்பர்- வெறும்

கற்பனையைச்  சிலர் உரைப்பர்;

கல்விக்குச்  சிலர் உரைப்பர் - மனக் 

காதலுக்குச்  சிலர் உரைப்பர்;

கண்ணீர்மல்க சிலர் உரைப்பர்- கண்டக்

களிப்புகளைச்  சிலர் உரைப்பர் ;

கடல்போல்  சிலர் உரைப்பர் -சிறு 

கல் போல் சிலர் உரைப்பர்;

கம்பன் போல் சிலர் உரைப்பர்- மாயக் 

கண்ணன் போல் சிலர் உரைப்பர்;

கவிபோல் கவிஞர்களும் பலவிதம் !


- ஜே. டேவிட் 




Comments