ஏறிச்செல்லும் நீ.....
ஏறிமுடியாமற் போகும் போது.....
ஏறியே ஆகவேண்டும் எனும் எண்ணத்தை விட்டுவிடாதே,
ஏனென்றால்
"எண்ணம்போல் தான் வாழ்க்கை"
தமிழகம் கண்டெடுத்த தங்கம் இவர். இவரை சாதனைக்கு நேராய் அழைத்துச் சென்றதும்
ஒரு பெண்மணி தான். அவர் இவரின் தாய் சரோஜா. ஆம், இவருக்கு இரண்டு வயதாகும் போதே இவரின்
தந்தை குடும்பத்தை விட்டுவிட்டு வேறொரு பெண்மணியுடன் சென்றுவிட்டார். இவரின் குடும்பச்
சூழ்நிலையோ அரைவயிற்றுக் கஞ்சிக்குக் கூட வழியற்ற நிலை. இவரின் தாய் சரோஜா இத்தகைய
வறுமையிலும் தன் மகனை படிக்க வைத்தார். இவருக்கு நேர்ந்த விபத்தில் இவரின் வலது கால்
துண்டிக்கப் பட்டது. ஒரு நாள் தான் படிக்கும் பள்ளியில் விளையாட்டு நேரங்களில் மற்ற
மாணவர்கள் விளையாட்டு ஆசிரியரின் மேற்பார்வையில் உயரம் தண்டும் பயிற்சியை மேற்கொண்டு
இருந்தனர். இதை பார்த்த இவர் தானும் உயரம் தாண்ட வேண்டும் என எண்ணினார்.ஆனால் இவர்
மாற்றுத்திறனாளி என்பதால் தன்னை ஏளனம் செய்வர் என பள்ளி முடிந்து எல்லோரும் சென்ற பிறகு
தனியாக உயரம் தாண்டுவார். இதை பார்த்த இவரின் விளையாட்டு ஆசிரியர் இவரை அழைத்து பயிற்சி
கொடுக்க ஆரம்பித்தார். இந்த முயற்சி தான் இவரின் சாதனைக்கு அடிகோலாக அமைந்தது. இவர்தான்
நம் தமிழகத்தை சேர்ந்த தங்கவேலு மாரியப்பன்.
முடியாது என்பது முயலாத வரையில் முயன்றால் எல்லாம் முடியும்........
Comments
Post a Comment