இந்திய நாட்டில் பல நூறு வகையான நாட்டு மாடுகள் உள்ளன .நமது நாட்டில்
பால் அதிகம் தருகின்ற காரணத்தால் அனைவரும் ஜெர்சி (jersy)HF(Holestien ferriasian)போன்ற
அயல் நாட்டு மாடுகளை வளர்த்து அதன் பாலை பயன் படுத்தி வருகின்றனர்.இது நமது அடையாளமான
நாட்டு மாட்டினங்களை அழிவிற்கு வழி வகுக்கிறது. ஒவ்வொரு நாட்டு மாட்டிற்கும் ஒவ்வொரு
பயன் உள்ளது. ஏ2 பால் (A2 Milk) என்பது A2 வகை பீட்டா கேசின் அதிகம் கொண்ட பசுவின்
பால் ஆகும். பீட்டா கேசின் என்பது பசுவின் பாலில் உள்ள ஒரு முக்கிய புரதம்.இதில்
A1 மற்றும் A2 என இரு வகைகள் உண்டு. A1 வகை
பீட்டா கேசின் ஐரோப்பியப் பசுக்களின் பாலிலும் A2 வகை பீட்டா கேசின் இந்தியத் துணைக்கண்டப்
பசுக்களின் பாலில் அதிகம் காணப்படுகிறது.
பீட்டா கேசின் புரதச்சங்கிலியில் 67 ஆம் இடத்தில்
புரோலின் (proline)இருந்தால் அது A1 என்றும் ஹிஸ்டிடின்(Histidine)இருந்தால் அது
A2 வகை என்றும் அழைக்கப்படும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பசுவினங்களில் ஏற்பட்ட
மரபணுத் திடீர்மாற்றத்தின் விளைவாக இந்த இரு பிரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவியாலர் நம்புகின்றனர்.
நமது நாட்டு மாடுகள் பற்றி விரிவாக காண்போம்.
இதில்
நமது வீரத்திற்கே அடையாளமாய் விளங்கும் காங்கேயம் மாட்டின் பால் உண்டால் அதை போலவே
மாடாய் உழைக்கும் சக்தி பெருகும். காங்கேயம் பசுவை வைத்தே ஏர் உழுவார்கள். அதிகம் பால்
தராது அதை வைத்து என்ன செய்வது என்று சிலர் கூறுவர்.அதற்கு கிர் ,சிந்து, காங்கிரஜ்,
தார்பர்கர்,ராத்தி,ஒங்கோல், என்று பல வகை பால் தரும் மாடுகளும் உள்ளன.இவை பால் தருவதில்
அயல் நாட்டு மாடுகளுக்கு சலைத்தவை அல்ல .இதில் ஒவோன்றுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு
உள்ளது.
கிர் மாடுகள் இது குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்
காடுகளில் தோன்றியவை . அரசர்கள் ஆண்ட காலத்தில் இந்த மாட்டினங்கள் தரும் பாலை அரசர்
மட்டுமே குடிக்க வேண்டும் வெறி சாதாரண மக்கள் யாரும் இதை உண்ண கூடாது என்று சட்டம்
இருந்தது.இதன் கிர் மாடுகள் சற்று முரட்டு தனம் கொண்டவை அதனால் அதன் பாலை குடித்தல்
நாமும் முரடாய் அடங்காத காளை போல் வாழலாம் என்பது அன்று வாழ்ந்த அரசர் கூற்று.
தார்பார்கர் மாடுகள் தார் பாலைவனப் பகுதிகளில்
காணப்படுபவை.இது வெயில் ,மழை ,பனி போன்று எவ்வித
சூழ்நிலைக்கும் ஏற்றவாறு வாழத்தெறிந்தவை.இதன் பாலை அருந்துவதால் நமக்கும் நோய் எதிர்ப்புச்
சக்திகள் உண்டாகும். இதன் பாலின் கொழுப்பு சத்து எடை அதிகரிக்க உதவும்.
இராத்தி என்னும் வகை இது கருப்பு வெள்ளை புள்ளிகளுடன்
கொம்புகள் அற்று (HF)மாடுகள் போல் தோற்றம் அளித்தாலும் முதுகில் திமில் வித்தியாசம்
காட்டிக்கொடுக்கும்.இது குழந்தைகளுக்கு ஏற்றவை இதன் பாலில் குழந்தைகளுக்கு தேவையான
அனைத்து ஊட்டங்களும் இருக்கும். ஓங்கோல் மாடுகள் "இதன் பெருமை என்னவென்று சொல்வது.?"
நமது ஊரில் சிவன் கோவில்களில் காணப்படும் நந்தி தேவர் உருவத்தை ஒற்று இது கம்பீரமாக
இருக்கும்.இதன் பாலில் தெய்வீக அம்சம் உள்ளது என்று பலர் நம்புபவர்.இதன் பால் நெய்
எடுக்க வாட்டமானவை.இதன் பாலில் இருந்து எடுக்கும் நெய்க்கு தனி சுவை தான்.
காங்கிரஜ் இது பயமுறுத்தும் தோற்றம் கொண்டவை ஆனாலும்
மிகவும் சாதுவாணது.இதை யாரும் பார்த்ததில்லை என என்ன வேண்டாம் பாகுபலி படத்தில் நீண்ட
கொம்புகள் கொண்ட மாடுகளை காட்சி படுத்தி இருப்பார்கள் அதுவே காங்கரஜ் மாடுகள்.இது மிகவும்
பழமை வாய்ந்த மாட்டிணங்கள்.இது சிந்து சமவெளி நாகரிகம் தொட்டே மனிதர்களிடம் ஒட்டி ஒன்றி
வாழ்ந்த இனம் .
நமது நாட்டு மாட்டினங்களில் குறிப்பிட்டுள்ளது
வெகு குறைவு. இது போல் புளிகுலம்,மயிலை, கராம்பசு,உம்பலசேரி,அழுக்கு மரயான்,கருமரயான்,கள்ளை
காளை,காரிக்காளை,குட்டசிலம்பன்,கூடுக்கொம்பன்,ஏறுவாலன்,படலைக்கொம்பன்,பட்டிக்காலை என்று
பல மாட்டினங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு அழிந்து வருகின்றன. நாட்டு மாடுகளை காப்போம்
என்று முடிக்கிறேன்.
Gud work man...👍
ReplyDeleteநல்ல ்தகவல்கள், ஆங்காங்கே சிறு பிழைகள் உள்ளது. திருத்திகொள்ளவும். மேலும் வளர வாழ்த்துக்கள்.
ReplyDelete