மாட்டுக்கறி இந்தியாவில் பெரும் உயிர்களை பறித்து இருக்கிறது.மாட்டுக்கறியின் பின்னால் ஒரு பெரும் அரசியல் முன்வைக்கிறது பாஜக,ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் மாட்டு பாதுகாவலர்கள் என்று சொல்லி எண்ணற்ற சிறுபான்மை மக்களை இன்றும் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர்.இது ஒருபுறமிருக்க தங்களது பலத்தை பெருக்கிக் கொள்வதற்காக அந்நிய நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யக்கூடியவர்கள் பாஜக,ஆர்.எஸ்.எஸ் இல் இருக்கும் அரசியல்வாதிகள்.அதைவிட மிக கேவலமானது மாட்டுக்கும், மாட்டின் சிறுநீருக்கும் ஒரு கதை விடுவார்கள் பாருங்கள் அதுதான் நகைச்சுவை தரக்கூடியது.வெளிநாடுகளைப் பொருத்தவரையில் இரண்டு உணவு முறைதான் இருக்கிறது.ஒன்று சைவம் , இன்னொன்று அசைவம்.இந்தியாவைப் பொருத்தவரையில் மூன்று உணவுமுறைப் பழக்கம் உள்ளது.சைவம், அசைவம், மாட்டுக்கறி சாப்பிடும்முறை .
மாட்டுக்கறி என்பது வெளிநாடுகளில் கோழி,ஆட்டுக்கறியைவிட முதலிடம் பெற்றுள்ளது.இதை யாரும் அறிவதில்லை.ஆனால் உலக நாடுகளில் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.மாடுகளை கறிக்காக கொல்லக்கூடாது என்று சொல்பவர்கள் ஆண்டொன்றுக்கு 24லட்சம் டன் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறார்கள்.65,000கோடியை அந்நிய செலவாணியாகத் தருகிறார்கள்.இருந்தும் இந்த நாடு மட்டும்தான் சொந்த நாட்டு மக்களை மாட்டுக்கறி தின்காதே என்று சொல்கிறது.அண்மையில் குஜராத்தில் மாடுகளை கறிக்காக வாங்கினாலோ,விற்றாலோ ஆயுள்தண்டனை என்று சட்டத்தை வகுத்துள்ளது.மாட்டின் மீது மட்டும்தான் கருணை உள்ளது.மனிதர்கள் மீது ஏன் கருணை இல்லை.இவர்களின் நோக்கம் இந்தியா முழுவதும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு தம் மதத்தை மட்டும் பரப்புவது.2000ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனருக்கு 24மணிநேர உணவாக இருந்தது மாட்டுக்கறி மட்டும்தான்.புத்தர் இதை எதிர்த்து போராடினார்.விவசாய நிலங்களுக்கு தேவையான அளவு மாடுகளை உபயோகித்துக்கொண்டு பிறகு உண்பதற்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.மேலும் இந்த செயலை இந்த மாடுகளின் மீது பரிதாபத்தில் செய்யவில்லை.விவசாயிகளின் வேலையை குறைப்பதற்காக செய்தார்.2000ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயக் குடும்பங்களுக்கு அடிமையாக்கப்பட்டிருந்தனர்.வெட்டியான் வேலை மற்றும் தோட்டு என்று சொல்வார்கள்,இந்த இரண்டு வேலையும் மாறி மாறி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்.அந்த மக்களுக்கு விவசாய மக்கள் இறந்த மாடுகளை கொடுக்க பசியின், வறுமையின் காரணமாக உண்ணத் தொடங்கினார்கள்.இது தற்போது உணவாக வந்து நிற்கிறது.உணவு,உடை, இருப்பிடம் இவை மூன்றும் தனிமனித சுதந்திரம்.இதை யாராலும் தடை செய்ய முடியாது.உணவில் தீண்டாமை பார்க்கும் இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது.பாஜக,2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது என்று தெரிந்தவுடன் அடுத்த 1மணிநேரத்திற்குள் ஒரு இஸ்லாமிய நண்பர் மகாராஷ்டிராவில் அடித்துக் கொலை செய்யப்படுகிறார்.ஏனென்றால் அவர் மாட்டுக்கறி தின்றார் என்று.
என் வாழ்க்கையில் நடந்தது,
என் நண்பர்கள் 14பேர் உணவு அருந்தும் பொழுது இரு நண்பர்கள் மாட்டுக்கறி உணவை சாப்பிடுகின்றனர்.இதைக் கண்டு ஒரு நண்பர் சொல்கிறார் மாடு புனிதம் என்று, இன்னொரு நண்பர் சொல்கிறார் என் வீட்டில் மாடு தெய்வமாக பார்க்கிறார்கள் என்று.இந்த மாட்டுக்காக பல நூற்றுக்கணக்கில் மனிதர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் அது பாவம் இல்லையா என்று கேட்க நினைத்தேன். ஆனால் கேட்க முடியவில்லை.அனைவரும் ஒட்டுண்ணியாகத்தான் வாழ்கிறோம்.ஒரு உயிரைக் கொன்றுதான் இன்னொரு உயிர் வாழ முடியும்.இது மனித இயல்பு.இதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நன்றி!!!

Comments
Post a Comment