எண்ணங்கள் 2- சுஜித்தா

நேர்மறை எண்ணங்களோடு மீண்டும் எங்கள் இதழை இனிமையோடு படிக்க வந்திருக்கம் அத்துனை வாசகர்களுக்கும் என் இனிய வணக்கங்கள்.உங்கள் நல்ல மனதில் நல்ல எண்ணங்களை வளர்ப்பதற்கான வழிமுறைகள்:
 வலிமையையும் பலத்தையும் உங்களுக்குள் தேடுங்கள்:
       ஆங்கிலத்தில் ஒரு அழகான பழமொழி உண்டு.
Look of your bright side.உங்களுக்குள் இருக்கும் திறமையையும் நல்ல பழக்கவழக்கங்களையும் தேடி வளர்த்து கொள்ளுங்கள்.அது உங்கள் வாழ்க்கையை மென்மேலும் அழகாக்கும்.உங்கள் திறமையை நீங்கள் வளர்த்துகொள்வதன்மூலம் உங்களுக்குள் இருக்கும் நேர்மறை எண்ணங்களும் நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.உங்கள் முகம் மலர்ச்சியோடு
காணப்படும்.எந்த வித ஒப்பனையும் (makeup) இல்லாமல் உங்கள் முகம் அழகாக இருக்கும்.இதை வைத்துதான் பெரியவர்கள் சொன்னார்கள்போல "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்று.அழகு என்பது வடிவத்திலோ உருவத்திலோ நிறத்திலோ இல்லை தோன்றும் எண்ணங்களிலும் சிந்நித்து செய்யும் செயலிலும் பேசும் வார்த்தைகளிலும் உள்ளது
நல்ல நட்பும் நல்ல
நண்பர்களும் ஒரு மனிதனுக்கு பூலோகத்தில் கிடைத்த அமிர்தமே....
     ஒரு மனிதன் தனது நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள நல்ல சுற்றுச்சூழல் மிகவும் அவசியம்.அப்படி ஒரு சூழலை நண்பர்களால் மட்டுமே அமைத்து தர முடியும்.அந்த நண்பர்களும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் வாழ்க்கை சுவாரஸ்யம் குறையாமல் உதட்டில் சிரிப்போடு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துபோகும்.
  வாழ்க்கை அழகாக
   நேர்மறை எண்ணங்கள் உருவாக
      தன்னம்பிக்கையோடும்
 தன்மேல் நம்பிக்கையோடும்
வாழ்க்கை பயணம் தொடர
எங்களின் நாங்களை தொடருங்கள்
அதுவரை உங்களிடமிருந்து
விடைபெற்று கொள்வது உங்களின் அன்பு ககோதரி

Comments

  1. நேர்மறை உள்ளங்களைப் பற்றி கூரிய பாசமிகு சுஜித்தாவுக்கு ❤️இந்த நண்பனின் பாராட்டுகள்😍🤩🤩

    ReplyDelete

Post a Comment