தலைப்பு - ராட்சசன்

கவிதை எழுதியாச்சு ஆனால்
    தலைப்பு இன்னும் வைக்கவில்லையே!
என்ன தலைப்பு வைப்பது?
    முதல் சொல்லை வைக்கலாமா?
கடைசி சொல்லை வைக்கலாமா?
    வேண்டாம் மையத்தில்
இருந்து எடுக்கலாம் - ஆனால்
    கவிதைக்கு எடுப்பாய் இல்லை
கவிதையின் பொருளை தலைப்பாக
    வைக்கலாம். அதுவே சரி
தலைப்பை பற்றிய கவிதைக்கு
    நல்ல தலைப்பு
தலைப்பு தான்.

Comments

Post a Comment