நீண்ட வருடங்களுக்கு முன்பு ..........., மதுராந்தகம் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு பிராமனப் பெண், ராதிகா. இவள் மண்ணுலகத்தை அடைந்த இரண்டு மாதங்கள் கடந்து அவளது தகப்பனார் , சீனிவாச ஐயர் விண்ணுலகத்தை அடைந்தார். அவரது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தார்கள். பிறகு சற்று சிரமத்துடன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார்கள் .
அக்காலத்திலேயே, ராதிகாவின் தாயார் , வசுந்தராம்பாள் முக்கிய சேவிகாவாக பணியாற்றினாள். இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்தே ராதிகாவிற்கு அனைத்து வசதியையும் கொடுத்தாள். ஆனாலும் ராதிகாவுக்கு அவளது தாயாரைவிட தங்கம்பாட்டி(வசுந்தராம்பாளின் தாயார்) என்றால் மிகவும் பிடிக்கும் . ஏனெனில் , வசுந்தராம்பாளின் பணியின் காரணத்தினால் தன் மகளைச் சரியாக கவனிக்க இயலவில்லை..... இக்காரணத்தினால், ராதிகாவிற்கு தங்கம்பாட்டிதான் நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்தாள். இப்படியே நாட்கள் கடந்தன....
ஒருநாள் ராதிகா, "பாட்டி....பாட்டி......." என அழைத்தாள். உடனே தங்கம்பாட்டி, "என்னடிமா ... ? சொல்லு..." எனக் கூறினாள்.ராதிகா பாட்டியிடம் தான் ஹிந்திமொழி கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினாள். ராதிகாவிற்கு ஹிந்திமொழியின் மீது இருந்த ஆர்வம் தெரிந்ததும் பாட்டி அவளை ஹிந்திவகுப்பில் சேர்த்தாள். இப்படியே ராதிகா ஹிந்திமொழி,சமஸ்கிருதம்,நாட்டியக்கலை,தட்டச்சு,சுருக்கெழுத்து என பலவிதமான கல்விகளையும் கற்றுக்கொண்டாள். இது மட்டுமல்லாமல் ராதிகா தனது வகுப்பறையிலும் நல்ல புத்திசாலியான மாணவி எனப் பெயர்பெற்றாள். அவள் பத்தாம் வகுப்பின் அரசுத் தேர்விலும் மாவட்ட அளவிள் முதலிடம் பிடித்தாள். இதைக் கேட்டதும் தங்கம்பாட்டி,மற்றும் ராதிகாவின் உறவினர்களும் ஆசிரியர்களும் அவளைப் பாராட்டினர். இப்படி சில நாட்கள் கடந்து,....... ஒரு நாள் ராதிகாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அம்பிகாமாமி,"தங்கம்பாட்டி......தங்கம்பாட்டி...." எனக் கூச்சலிட்டுக் கத்தினாள் . சத்தம் கேட்டதும் பாட்டி வெளியே வந்து ,"ஏன்டிமா சத்தம் போட்ற...? என்ன ஆச்சு..?" எனக் கேட்டாள்.
உடனே அம்பிகாமாமி பாட்டியிடம் ,"உங்க ஆத்துப் பொண்ணு ராதிகா நம்ம சந்நிதியில் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என நோக்குத் தெரியுமோ தெரியாதோ...? எனக் கூறினாள். இதைக் கேட்டதும் பாட்டிக்கு திக்கென்று ஆனது.....திக்.. திக்...திக்....
-பயணம் தொடரும்🙏🏻🙏🏻🙏🏻.
Nice way of writing Sara.. . Keep writing. .. Ur Naangal team is good and more informative with good concepts keep doing. ...all the best Sara...keep writing
ReplyDeleteNice story Sara . Expecting more...
ReplyDeleteSuper
ReplyDeleteSuper story good luck
ReplyDeleteMachaaa semma story..tempting to read more
ReplyDelete