உயிர்நீர் - செல்வகணபதி


பலதரப்பு பஞ்சாயத் தினாலே
   பக்கத்து வீட்டு எஜமானன்
      பருகும் நீர்தர மறுத்திடவே..

வகையாய் புகை அனுப்ப லாலும்
வெட்டியே மரம்பல கொன்ற தாலும்    வான்மேகம் பால்சுரப்பை நிறுத்திடவே

உயிர்நீராம் மண்ணுக்கு ஊற்றுநீரை
உறிஞ்சியே வழித்து துடைத்திட
ஆபத்து உயிர்க்கென் றெண்ணி  ஆழம்பல சென்று பதுங்கிடவே..

தண்நீர் பஞ்சம் தலைதூக்கியே
    தேடச்சோல்லி தூரம்  விரட்டுது!
இன்னல் பலதந்து நமைவாட்டியே
      இயற்கை யன்னை பாடம் புகட்டுது!!

ஆழி சூழ்ந்த இவ்வுலகில்
   அருந்த சொட்டு நீரில்லை
என்கிற புலம்பல் நம்மிடையே
    ஏற்படும் காலம் தூரமில்லை!

அணைகள் பலவும் கட்ட
  அடைத்து நீரை வைத்தால்
   அனைவர்தம் தேவை நிரையுமே..

அவரவர்தம் இல்லத் தினிலே
   ஆழக்குழி பலவும் பதித்து
அரிதாய் சொட்டும் மழைநீரை 
   அகப்படுத்த தேடல் குறையுமே..

உடல்சுகம் உயர்வென் றெண்ணா
  உயிர்ஊற நீர்தேவை உணர்ந்து
நன்முறை திட்டம்பல கொணர
   நீடூழி நாமும் வாழலாமே....


                                                    

Comments

  1. Nice Information..it's important for current situation

    ReplyDelete

Post a Comment