காற்றில்
சுத்த காற்றெங்க?
வருகிறேன்! ஒளிந்து கொள்ளச் சொல்லும் சூரியன்! எட்டிப் பார்த்து ஓடிவிடும் மழைமேகம்! தேடச் சொல்லி
விட்டு மறைந்துகொள்ளும் நீராதாரம்!
கோடைச்சூழலில் நாம் விளையாடுவதை
இயற்கையும் சேர்ந்து விளையாடுகிறது.
இயற்கைக்கும் நமக்குமான போலிஸ் திருடன் ஆட்டத்தில், திருடர்களாகிய
நம்மை தேடிவந்தும், தேடச் சொல்லியும் தண்டிக்கிறது இயற்கை.
நாம் இயற்கை மீது செலுத்திய ஆதிக்கத்தின் பலனே இயற்கைச் சீற்றங்களும்,
சுற்றுச்சூழல் சீர்கேடும்.
உதாரணமாக, தென் ஆப்பிரிக்காவின்
கேப்டவுன் "ஜூரோ டே"வை (ஒரு சொட்டு நீர் இல்லை) எட்டிவிட்டது.
டெல்லியில் காற்றுமாசு அதன் எல்லையை தொட்டுவிட்டது.மேலும் பல்வேறு சூழ்நிலை மாற்றங்களையும்
அதற்கான தீர்வுகளையும் நாம் கண்களாலும்,இணையத்திலும் கண்டு
தெரிந்து கொள்கிறோம்.தெரிந்தென்ன பயன்? தெளிய வேண்டுமல்லவா?
இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசின்
கையில்தான் உள்ளது என வினவலாம்.
நம் அரசுக்கு, பலகோடியில் சிலையை நிறுவி சூரியனை மறைத்து வெப்பத்தை குறைக்கலாம் என திட்டம் தீட்ட மட்டுமே
தெரியும். அரசினை நம்பியிருத்தல் அம்மனமாய் நிற்பதற்குச் சமம்.
இயற்கையை கொளையடித்து நாம் வாழ்க்கை வெள்ளை பக்கங்களாய் வெறிச்சோடி
போக வெகு காலமில்லை.கண்போல் காக்க வேணாடிய வளங்களை தொடர்ந்து களவு செய்தால் காலம் நம்மை விரைவில் நரகத்திற்கு கடத்திவிடும்.பாதுகாப்பு,
மறுசுழற்சி, மறுஉருவாக்கம் மூலமே சூழ்நிலை மாற்றத்தை நிலைபடுத்த முடியும்.எதிர்கலம்
உதிரமால் இருக்க
இன்றிலிருந்தே உரமிடுவோம்.
A single person needs to understand tis . Nice concept
ReplyDelete