கான்ட்ராக்டர் நேசமணி பற்றி நம் எல்லாருக்கும் தெரியும். அவர் தலையில் சுத்தியல் போட்டு அவரை இந்த நிலைமைக்கு ஆளானதுக்கு பின்னால் பெரிய அரசியல் ஒன்று உள்ளது. அந்த அரசியலை நீங்கள் தெரிந்துக்கொள்ள கான்ட்ராக்டர் நேசமணியின் நண்பர் தோழர் முகிலனைப் பற்றி எல்லாரும் அறிந்துக் கொள்ளவேண்டும்.
சென்ற வருடம் மே மாதம்
22ஆம் தேதி வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை எதிர்த்து தூத்துக்குடி
மக்கள் போராட்டத்தின் நூறாவது நாளில் தமிழக போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பதிமூன்று
பேர் உயிரிழந்தனர். அது கலவரத்தில் புகுந்த அந்நிய சக்திகள் அந்த போராட்டத்தை கலவரமாக
மாற்றியது என்று சாதித்தது. ஆனால் இயற்கை வளங்கள் பாதுகாப்பு போராட்டங்கள் நடத்திவரும்
தோழர் முகிலன் பல ஆதாரங்களுடன் அந்த கவவரத்தை தூண்டியதே போலீசார் தான் என்று வாதிட்டார்.
மேலும் அந்த ஆதாரங்களை யூடியூப்பில் வெளியிட்டார். அதில் தெளிவாக ஒரு மர்ம கும்பல்
போராட்ட களத்தில் உலாவுவது தெரிந்து. அந்த வீடியோ பதிவை வெளியிட்ட சில மணிநேரத்தில்
அவரை காணவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை அவரை காணவில்லை. அவரை போலீசாரோ அல்லது அரசியல்
சக்திகளோ கடத்தியிருக்களாம் என்று கூறுகின்றனர். அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா
என்றுகூட தெரியவில்லை.
அவர் மீது இருக்கும் இந்த கோபமும் வெறியும்தான் அவர் நண்பர் கான்ட்ராக்டர்
நேசமணி மீதும் வெளிப்பட்டு அவரை சுத்தியல் கொண்டு தாக்க அவர் அண்ணன் மகனையே தூண்டியுள்ளனர்
என்று மக்கள் சந்தேகத்தில் உள்ளனர்.
இந்த பிரச்சினையில் இரண்டாவது பாதிப்பை சந்தித்த நேசமணியை
#pray_for_nesamani என்று அவருக்காக உலக அளவில் பிராத்தனை செய்த நம் மக்கள் ஆளே காணாமல்போன தோழர் முகிலனை ஏனோ மறந்துவிட்டனர். அதை நினைவுப்படுத்த
வேண்டியதுநம் கடமை.
கான்ட்ராக்டர் நேசமணி மேலும் தாக்கப்படாமல் இருக்கவும் அவரின் பாதுகாப்பை
உறுதி செய்யவும் நாம் தோழர் முகிலனை வெளிய கொண்டுவர வேண்டும். அப்போது தான் ஸ்டெர்லைட்
தொடர்பாகவும் சுத்தியல் தொடர்பாகவும் உண்மைகள் விளங்கும். அதனால் அனைவரும் பகிர்வோம்...
#search_for_mugilan
Superb concept must creat #search for MUGILAN.and we must support those guys who will put complaints to search MUGILAN.
ReplyDeleteSuper...nesamani made me read this...and finally I came to know about the reality #search for mugilan
ReplyDeleteவாழ்த்துக்கள் 😍
ReplyDeleteஅருமை சகோதரர்களே வாழ்த்துக்கள்
ReplyDelete