வணக்கம்,
நாங்கள் ஆண்டு மலர் 2025க்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. இந்த இதழ் அச்சு இதழாக வெளிவரும். ஒவ்வொரு வருடம் போல இந்த வருடமும் சிறப்பான முறையில் இதழை கொண்டு வர முயற்சி செய்கிறோம். அதற்காக கீழ் காணும் தலைப்புகளில் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
🌀கட்டுரைகள்
1. நவீன உலகில் அன்பின் பங்கு
2. உலக அரசியல்: எதார்த்தங்களும் எதிர்பார்ப்புகளும்
3. உங்களை பாதித்த ஒரு புத்தகம் அல்லது எழுத்தாளர்
4. தமிழரின் ஏதாவது ஒரு கலை/பண்பாட்டு முறை/ வரலாற்று நிகழ்வு/ வாழ்வியல் சிந்தனை குறித்த கட்டுரை
5. வானியல் முதல் உயிரியல் வரை அறிவியல்
6. கிரிக்கெட் அல்லாத விளையாட்டுகளில் இந்தியா
7. தமிழக அரசியல் கோணல்கள்
8. உங்களை பாதித்த ஒரு சினிமா
9. வரலாற்றின் வழியில் இந்தியா
10. நவீன யுகத்தில் மன அழுத்தம் / அத்துமீறியதா டிஜிட்டல் யுகம்?
🌀கவிதைகள்
1. வலியின் ருசி
2. காற்றின் வழியே கானகத்தின் மூச்சு
3. ஆன்டிராய்டு அன்பு
4. காற்றெங்கும் போர் நெடி
5. நாம்
6. மலக்குரல்
7. கடவுளின் கால் மனிதர்கள்
8. ஆதாம் புத்தனாகி இருந்தால்?
9. மா
10. பெருஞ்சதிக் கனவு
🌀சிறுகதைகள்:
உங்கள் சுய தலைப்புகளில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
🌀ஓவியங்கள்:
இயற்கை காட்சி/ புகழ் பெற்ற மனிதர்கள்/ நவீன ஓவியங்கள்
🟡படைப்புகளை ஜூலை 23ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் : naangalmagazine@gmail.com
🟡படைப்புகள் Word Document வடிவில் அனுப்பவும். PDF வடிவிலோ, கையால் எழுதப்பட்டவை ஏற்றுக்கொள்ளப்படாது. ஓவியங்களை JPEG/JPG வடிவில் அனுப்பவும்.
🟡(படைப்புடன் சேர்த்து உங்கள் பெயர், ஊர், மாவட்டம், கைப்பேசி எண் குறிப்பிடவும்)
🔔சந்தேகங்களுக்கு :
சிவக்குமார் சியாமளாரவி
தலைமை ஆசிரியர்
நாங்கள் மின்னிதழ்
7397580689
Comments
Post a Comment