வாழ்க்கையின் காரணம் - FORREST GUMP

 


திரில்லர் வகைச் சினிமாக்களுக்கு ஈர்க்கப்பட்ட நான், ஒரு மாறுதலுக்காக "Feel good" வகைச் சினிமாவின் பக்கம் செல்ல நேர்ந்தது.

சற்று ஓய்வெடுத்து கூகிள் பண்ணி சிறந்த படத்தைத் தேர்வு செய்ய முற்பட்ட நேரத்தில் ரொம்பக் காலமாக watchlist பட்டியலில் இருந்த படங்களின் சத்தம் கேட்டது. அதை ஆராய்ந்த போதுதான் இந்த "Forrest gump" திரைப்படம் கண்ணில் பட்டது.

Forrest gump என்கிற சிறுவன் தன் அம்மாவுடன் அலபாமாவில் வசித்து வருகிறான். அவனுக்கு IQ (நுண்ணறிவு) சற்று குறைவு. Autism spectrum disorder. அதனால் சமூகத்தால் சற்றே தள்ளி நிற்க வைக்கப்படுகிறான். ஒரு வழியாக அவனைப் பள்ளியில் சேர்க்க, அவன் அங்கேயும் அனைவரின் கண்களுக்கும் அந்நியமாகவே படுகிறான். ஒருத்தியின் கண்களுக்குத் தவிர. அவள் தான் ஜெனி. அவளுடன் நட்பாகிறான். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகின்றனர். இப்படியாக அவன் வாழ்க்கை செல்ல, வாழந்து வந்ததும் என்னென்ன மாற்றங்கள் வருகிறது? அவன் வாழ்வில் என்னென்ன நிகழ்கிறது? என்று அவன் வாழ்வோடு நாமும் சேர்ந்து பயணிக்கும் பயணம் தான் இந்த "Forrest gump".



1986 ஆம் ஆண்டு Wiston groom எழுதிய "Forrest gump" என்ற நாவலின் அடிப்படியில் Robert zemeckis அதே பெயரில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் 1994ஆம் ஆண்டு வெளியானது. சில படங்கள் பார்க்கும் போது நெஞ்சம் சிலிர்க்க வைக்கும், அதை நினைத்து மனது சிலாகித்து அசைபோட வைக்கும். அதோடு நில்லாமல், நம்மிடம் அது பேசும். இவை அனைத்தையுமே இந்தப் படம் தந்தது.

Forrest gump கதாபாத்திரத்தில் Tom hanks நடித்திருந்தார். ஒப்பற்ற உன்னதமான நடிகன். அந்த கதாபாத்திரத்தின் வெகுளித்தனத்தையும், புத்திசாலித்தனத்தையும் அதே நேரத்தில் உணர்ச்சிகளையும் நமக்கு அழகாகக் கடத்தியிருந்தார். அவரது அம்மாவிடம் பேசும்போது, Bubba மற்றும் Lieutenant Dan உடனான நட்பு, ஜெனி உடனான அளவற்ற காதல் என அனைத்து காட்சிகளின் இவரது நடிப்பு அபாரமாக இருந்தது. என் பிள்ளை எந்த விதத்திலும் மற்றவருக்குச் சளைத்தவன் அல்ல என அவனுக்காக அவனது தாய் மெனக்கெடும் போதும், நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லும்போதும் நாமே கூறுவது போல இருந்தது. Robin wright ஏற்று நடித்திருந்த ஜெனி கதாபாத்திரம் மனதில் நிற்கிறது. சிறுவயதில் அப்பாவின் தகாத வளர்ப்பை விட்டு வெளியேறி, வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் குழப்பத்தில் இருந்து, இறுதியில் அவளது அன்பு எங்கே இருக்கிறது என உணர்ந்து Forrestயிடம் வரும் தருணம் அந்தக் கதாபாத்திரத்தின் வலியை உணர முடிகிறது.

ஏதும் முன்யோசனையின்றி மிலிட்டரியில் சேர்ந்த Forrest gump உடன் நட்புடன் பழகும் Bubba (Benjamin Buford Blue), முழுபொழுதும் இறாலை (shrimp company) பற்றியே பேசிக்கொண்டிருக்கும் அவரது கதாபாத்திரம் ஏதோ நெருங்கிய நண்பனிடம் பழகுவது போலே தான் தோன்றியது. வியட்நாம் போரில் சாக நேர்ந்த Lieutenant Danயை காப்பாற்றி, உடல் ஊனமானது என மனம் வெம்பி நிற்பது, பின்னர் மனம் மாற்றம் அடைவது, அதன்பின் forrest gump உடன் சேர்ந்து வேலை செய்து வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வது என அவரது கதாபாத்திரம் நமக்கே ஓர் நம்பிக்கையைக் கொடுத்தது.

படத்தில் forrest கடந்து வந்த பாதைகளை எண்ணி மனம் நெகிழ்கிறது. பல காட்சிகள் வரலாற்றுப் பின்னணியில் பிணைத்து சொல்லியிருப்பார்கள். உதாரணத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி John F. Kennedyயை Forrest gump சந்திக்கும் காட்சி. CGI மூலம் ஒன்றிணைத்திருப்பார்கள். சில வரலாற்று நிகழ்வுகளும் நடந்திருக்கும். அதில் சில முக்கியமான விஷயங்கள் "Klu Klux Klan" என்னும் மேலாக்கவாதிய தீவிரவாத படையின் நிறுவர் Nathan Belford forrestயின் பெயரை தான் Forrest என்று வைத்திருப்பார் அவனது அம்மா. அதேபோல் "Black panther party" நிகழ்வு கறுப்பினத்தவர்க்கு எதிராக நடக்கும் இனவெறியார்களை எதிர்த்து போராடிய ஒரு அமைப்பாக இருக்கும். வியாட்நாம் போர் (1955-1975), வியட்நாம் போருக்கு எதிரொலியாக இருந்த "Hippe movement", John lennon படுகொலை, watergate ஊழல் மூலம் ஜனாதிபதி Nixonயின் ராஜினாமா, ping-pong அரசியல் சாதுரியம், smiely டீ-ஷர்ட் எனப் படம் நெடுக நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.

படத்தின் மூன்று தூண்கள் அதன் வசனங்களும், ஒளிப்பதிவு மற்றும் இசையும் தான். ஒவ்வொரு காட்சிகளின் ஆழத்தை இசை உணரவைக்க, காட்சியமைப்பு நம்மை உள்ளே சென்று அமர வைக்கும். சிறுவயதில் பாரஸ்ட் -ஜெனி விளையாடும் காட்சிகள், பாரஸ்ட் தன் இயலாமை மறந்து ஓடும் காட்சி, வியாட்நாம் இரவுகள், அனைத்திற்கும் மேலே அந்தப் பறவையின் இறகு என அனைத்தும் ஓவியம் போலே நம் நெஞ்சில் பதியும். படத்தின் முக்கியமான வசனங்கள்,

"My mama always said, Life is a box of chocolates, you never know what you're gonna get".

"You have to do the best with what god gave you".

"What is destiny mama? you're gonna have to figure that out for yourself".

"Mama said, dying was a part of life. I sure wish it wasn't".

"Run, Forrest ! run !".

இதுமட்டுமல்லாது இன்னும் நிறைய வசனங்கள் இருக்கிறது. ஜெனியை பார்த்து தன் மகன் நல்ல அறிவார்த்தவானாக இருக்கிறானா ? எனக் கேட்கும் காட்சி மனதை உருக செய்தது.இறுதியில் அனைத்து துன்பத்தையும் தாங்கி நின்று,சிறு Forrestயை பள்ளிக்கு வழியனுப்பி வைக்கும்போது நாமும் பிரியாவிடை கொடுக்க நேரிட்டது. Forrest gump அம்மா சொல்வது போல் "வாழ்க்கை ஒரு சாக்லட்க்கள் நிறைந்த பெட்டி"தான் அதற்குள் நமக்கு என்ன இருக்கிறது எனத் தெரியாது. அதை நாம் திறந்து பார்த்து தான் கண்டுபிடிக்க வேண்டும் அது சுவையானதா இல்லை கசப்பானதா என்று. நம் எதிகாலத்தை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்க்கு இடையில் வரும் பிரச்னைகளுக்கு முன் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அது மறைந்து விடும். கடவுள் நமக்கான வாழக்கையைக் கொடுத்திருக்கிறார். அதை நாம் வாழ்ந்து பார்ப்பதே வாழ்வின் ஆகச்சிறந்த பயணம் ஆகும்.

Forrest gump உருவாக்கத்திற்குச் சில மனிதர்கள் காரணமாக இருந்தார்கள். Jimbo Meador என்பவர் தான் அந்தக் கதாபாத்திரத்தின் உண்மை மனிதர். Winston Groom தன் நண்பனான ஜிம்போவின் தன்மையைத் தான் கதாபாத்திர வடிவமைப்பில் வைத்திருந்தார். வியாட்நாம் போரில் வரும் ராணுவ வீரன் பகுதி Saamy lee davis என்னும் நிஜ ராணுவ வீரரின் நிகழ்வை தான் அடிப்படையாக வைத்திருக்கிறார் இயக்குனர் Robert Zemeckis.

இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்யில் Forrest gump கதாபாத்திரத்தில் அமீர் கான் நடிக்கிறார். "Bubba" வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகத் தகவல்கள் வந்தது. படத்தின் பெயர் "Laal singh chaddha".

அக்டோபர் 1994 ஆம் ஆண்டு Forrest gump, Shawshank redemption, Lion king, Pulp fiction and Jurrasic park என ஐந்து படங்களும் ஒரே நேரத்தில் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்தது. அதனை "Golden Month of Western cinema" என்றழைத்தனர்.

அதில் "Forrest Gump" அதிக வசூலையும், 6 ஆஸ்கார் அவார்ட்களையும் பெற்றது.

சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த திரைக்கதை (adapted screenplay), சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த விஷுவல் எபக்ட்ஸ்.




Comments