வணக்கம் நண்பர்களே, நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். நாம் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
நாம் ஒரு கதை மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம். வினோத், விவேக் என்ற இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். வினோத் என்பவர் சோப் உற்பத்தி தொழில் செய்யலாம் என்று இருக்கிறார், அவர் அந்த சோப் நிறுவனத்திற்கு ராஜ் சோப் என்று பெயர் வைத்துவிட்டார். அதற்கு அவருக்கு 10 லட்சம் தேவைப்படுகிறது, ஆனால் அவரிடம் 6 லட்சம் தான் உள்ளது. இதை பற்றி அவர் நண்பர் விவேக்கிடம் கூறுகிறார் அதற்கு அவர் நண்பர் "நானும் உன்னுடன் பார்ட்னராக சேர்ந்து கொள்கிறேன், அதற்கு அந்த தொழிலுக்கு தேவைப்படக்கூடிய மீதி 4 லட்சம் நான் தருகிறேன்". இப்போது 10 லட்சம் இருக்கிறது தொழில் ஆரம்பிப்பதற்கு. ராஜ் சோப் நிறுவன முதலீட்டில் 40% அதாவது 10 இலட்சத்தில் 4 லட்சம் விவேக் கொடுத்து இருக்கிறார், அதனால் அவர் 40% ஷேர் வைத்துள்ளார் மீதி 60% வினோத் வைத்திருக்கிறார். ஒரு வருடத்திற்கு பிறகு சோப்பு உற்பத்தி தொழிலில் (ராஜ் சோப்) ஒரு லட்சம் லாபம் வருகிறது. அதை எப்படி இரு நண்பர்கள் பிரித்துக் கொள்வார்கள்? லாபம் ஒரு லட்சத்தில் 40% அதாவது 40,000 INR விவேக்கும், 60% அதாவது 60,000INR வினோத்துக்கும் சென்றுவிடும்.
இதே போல் தான் இந்தியாவில் பல நிறுவனங்களுக்கு பணம் தேவைப்படுகிறது, தொழில் தொடங்குவதற்கும், தொழிலை விரிவுபடுத்துவதற்கும், அதற்காக நம் இந்திய அரசாங்கம் SEBI-Stock Exchange Board of India என்ற நிறுவனத்தை நிறுவி உதவுகிறது. நாம் மற்ற நிறுவனங்களுக்கு பணத்தைக் கொடுத்து உதவுவதற்கும் நாம் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆவதற்கும் NSE- National Stock Exchange மற்றும் BSE- Bombay Stock Exchange என்ற இரண்டு பங்கு வாங்குவதற்கும், விற்பதற்கும் பெரிய ஆன்லைன் பங்கு வணிகத்தை நிறுவியிருக்கிறார்கள். இதைதான் ஷேர் மார்க்கெட் என்று கூறுவோம். நாம் இந்தப் பதிவில் ஷேர், ஷேர் மார்க்கெட் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்த்தோம். இதைப்போல சுவாரசியமான தகவல்களை பின்வரும் மாத இதழ்களில் பார்ப்போம்.
Comments
Post a Comment