100 நாள் வேலையும் விவசாயமும்

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் [Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)].

இந்த திட்டம் பார்த்தீங்க அப்படின்னா போன காங்கிரஸ் ஆட்சில மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்தியா முழுமைக்கும் இருக்கக்கூடிய வேலைவாய்ப்பற்ற குடும்பங்களுக்கு ஒரு நித்திய ஆதாரமா வழங்கக்கூடிய ஒரு அமைப்பா இந்த அமைப்பு இருந்துச்சு. அன்றாடங்காய்ச்சி என்று சொல்லக்கூடிய விவசாயிகள் தினக் கூலிகள் அவங்களுக்கெல்லாம் இந்தத் திட்டம் இன்னமும் வரப்பிரசாதம்தான். ஆனால் வட மாநிலமான உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு இது ஒத்துப்போகும். ஆனால், தமிழ்நாடு மாறி மாநிலங்களில் பாத்தீங்கன்னா ஆல்ரெடி நம்ம தன்னிறைவு அடைஞ்சிட்டோம். அதுக்கப்புறமும் இந்த மாதிரி திட்டங்களோடு விளைவுகள் பெரிதும் விவசாயத்தைப் பாதித்தது அப்படிங்கறது தான் நிதர்சனமான உண்மை.



நம்மில் எத்தனை பேருக்கு விவசாயத்தைப் பற்றிக் கவலைப்படவும், விவசாயத்தில் ஆட்கள் கூலி ஏறி போச்சு தகவலை பத்தி கவலைப்படவும் நேரம் இருக்கு. ஆமாங்க காலம் மாறிப்போச்சு விலைவாசி அதிகமா விக்குது. அதனால், ஆட்களுக்குக் கூலி ஏறிப்போச்சு அப்படினா அதுவும் சரிதான். அதுவும் ஒரு பக்கம் உண்மைதான் இரண்டு வருஷம் முன்னாடி நூறு ரூபாய்க்கு வேலைக்கு வந்து போகும் பெண்களுக்கு எல்லாம் இன்னைக்கு 300 ரூபா சம்பள ஆயிப்போச்சு.... காலம் மாறிப் போச்சு அதனால சம்பள ஏறிப்போச்சு. ஆனால் அது மட்டுமே நிதர்சனமான உண்மை இல்லைங்க. ஒரு புறத்தில் அதே பெண்களெல்லாம் உழைப்பை சுரண்டரோம் என நினைக்கவேண்டாம். 100 ரூபாய்க்கு இங்க வேலைக்கு வந்த பெண்கள் எல்லாம் அப்போவே 150 ரூபாய்க்கு வந்து இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைக்குப் போனாங்க. வேலைக்குப் போறதெல்லாம் பெரிய விஷயம் இல்லைங்க. அங்க போய் வேலை பார்க்கிறார்களா?... அப்படிங்கிறது தான் பெரிய விஷயம். உங்களுக்கே தெரியும் விவசாய வேலை அப்படின்னா, விவசாயக் கூலிவேலை அப்படின்னா எவ்வளவு கஷ்டம் அப்படின்னு. 100 நாள் வேலை போய் உடல் உழைப்பு மட்டும்தான் அப்படிங்கற பேர்ல இயந்திரங்கள் இல்லாத சும்மா கொஞ்ச நேரம் வந்து குத்தவைத்து வேலை செஞ்சுட்டு மத்த நேரம் பூரா வெட்டியாக ஊர் கதை பேசி இருக்கிறத முழுநேரம் போல இருக்கு. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான. சரி இப்ப எதுக்கு அவங்கள சொல்லிட்டு இருக்க? அப்படின்னு சொல்ல வேண்டாம்.

100 நாள் வேலை திட்டம் சார்ந்த அடிப்படைத் தகவல்கள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டம் என்பது DEMAND DRIVEN SCHEME இந்திய நாட்டில் வசிக்கக் கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை கருத்துரிமை, சொத்துரிமை வாழ்வதற்கான உரிமை போன்று தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டமும் ஒரு அடிப்படை உரிமை.

1. 100 நாள் வேலை திட்டத்தில் யாரெல்லாம் வேலை செய்யலாம்?

ஒரு ஊராட்சியில் வசிக்கக்கூடிய வாக்குரிமை பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், உடல் உழைப்பைத் தர தயாராக இருக்கின்ற யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

2. 100 நாள் வேலை திட்ட அட்டை எப்படிப் பெறுவது?

ஒவ்வொரு ஊராட்சியிலும் வசிக்கக்கூடிய நீங்கள் உங்களுக்கு 100 நாள் வேலை திட்ட அட்டை வேண்டும் என்றால், உங்களுடைய ஊராட்சி மன்ற செயலாளரையோ அல்லது ஊராட்சி மன்ற தலைவரையோ அனுகி வாய்மொழி வாயிலாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகக் கேட்டால் உங்களுக்கு 15 நாட்களுக்குள் 100 நாள் வேலை திட்ட அட்டை வழங்கப்பட வேண்டும் என்பது சட்ட விதி. அப்படி 15 நாட்களுக்கு மேல் வழங்கப்படாமல் இருப்பின் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 0.005% உங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் வேண்டும் என்கிறது நூறு நாள் வேலைத்திட்ட சட்ட விதிகள்.

3. 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு எத்தனை வேலை நாட்கள் வழங்கப்படும்?

நூறு நாள் வேலைத்திட்டத்தைப் பொருத்தவரை ஒரு குடும்பத்திற்கு மொத்தம் 100 வேலை நாட்கள் வழங்கப்படும். இது மாநில அரசாங்கங்களின் வழிகாட்டுதலின்படி கூட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டே தவிரக் குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் மத்திய அரசாங்கம் இந்தத் திட்டத்தின் குறைந்தபட்ச வேலை நாட்களாக 100 நாட்களை வகுத்து இருக்கிறது.

4. 100 நாள் வேலை திட்ட அட்டை இலவசமா?

நிச்சயம், 100 நாள் வேலை திட்ட அட்டை என்பது இலவசமாக வழங்கப்படுவது. இதனை எக்காரணம் கொண்டும் பணம் கொடுத்து வாங்காதீர்கள். யாராவது பணம் கொடுத்தால்தான் வேலை திட்ட அட்டை கிடைக்கும் என்று கூறினால் அவர்கள் மீது உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.

5. 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குப் பணி செய்யவும் மற்றும் பணிகளில் அவர்களுக்கு ஏதேனும் சலுகைகள் இருக்கிறதா?

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சலுகைகள் உண்டு. அவர்களுக்கு வேலை திட்ட அட்டை நீல நிறத்தில் வழங்கப்படும் அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவும். மேலும் அவர்களின் ஊனத்தின் சதவிகிதம் 40% சதவீதத்துக்கு மேல் இருந்தால் அவர்கள் குறைந்த பட்ச வேலை செய்தாலும் முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தத் திட்டத்தில் குறிப்பிட்டுயிருக்கிறது.

6. 100 நாள் வேலைத்திட்டத்தில் எதற்கெல்லாம் அனுமதி இல்லை?

100 நாள் வேலை திட்டத்தில்: 

ஒப்பந்ததாரர்கள் இல்லை.

பெரிய இயந்திரங்களுக்கு அனுமதி இல்லை.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படுகின்ற ஊதியத்தில் வேறுபாடுகள் இல்லை.

7. 100 நாள் வேலை திட்ட ஊதியம் குறித்து அடிப்படை தகவல்:

100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படக்கூடிய சம்பளம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவிக் கொண்டிருக்கின்றன. இந்த ஊதியம் எப்படி வழங்கப்படுகிறது என்றால் மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் துறை சார்ந்து வரைமுறை செய்து ஒவ்வொரு துறையிலும் வழங்கப்படுகின்ற குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. உதாரணமாக விவசாயத்துறை என்று எடுத்துக்கொண்டால் அதில் கூலி வேலை செய்பவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நூறு ரூபாய் என்று எடுத்துக் கொண்டால் அதிலும் குறைவாக ஊதியம் வழங்கக் கூடாது என்பது 100 நாள் வேலை திட்டத்தின் சட்ட விதி. அதன்படி தற்போது 100 நாள் வேலை திட்ட பணியில் இருப்பவர்களுக்கு 256 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நூறு நாள் வேலைத்திட்டத்தைப் பொறுத்தவரை கிராமசபை மற்றும் கிராம பஞ்சாயத்து மிகப்பெரிய பங்காற்ற கூடிய இடத்தில் இருக்கிறது. உங்கள் ஊராட்சியில் என்னென்ன வேலைகள் செய்யலாம், எந்த இடத்தில் செய்யலாம், எவ்வளவு ஊதியம் போன்றவற்றை நிர்ணயிக்கக் கூடிய உரிமை பொது மக்களாகிய உங்களுக்கும் நமக்கும் உண்டு. அதை நாம் பங்கேற்கக் கூடிய கிராம சபையிலேயே முடிவு எடுப்பார்கள் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

8. 100 நாள் வேலைத்திட்டத்தில் எந்தெந்த இடங்களிலெல்லாம் பணிகள் செய்யலாம்?

பொது இடங்களில் : 

நீர் மேலாண்மை சார்ந்த பணிகள், புனரமைப்புச் சார்ந்த பணிகள் கால்நடை கொட்டகைகள் தடுப்பணைகள். சிறுபாசன பணிகள்

காடுகள் வளர்ப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

தனியார் இடங்களில் : 

ஒரு தனி நபருடைய நிலத்தை மேம்படுத்திக் கொடுத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

அரசு திட்டங்களில் : 

தேசிய வாழ்வாதாரத் திட்டம் மூலமாகக் கிராமத்திற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொள்ளலாம். அதில் மண்புழு உரம் தயாரித்தல், மகளிர் சுய உதவிக்குழு கட்டிடங்கள் சார்ந்த வேலைகள் போன்றவற்றைச் செய்து கொள்ளலாம்.

ஊரகக் கட்டுமான பணிகளில் :

இணைப்புச் சாலைகள், விளையாட்டு திடல், பஞ்சாயத்துக் கட்டிடங்கள், மகளிர் சுய உதவிக்குழு கட்டிடங்கள்.

உணவு பாதுகாப்புக் கிடங்குகள் கிராம சேவை மைய கட்டிடம்,

அங்கன்வாடி கட்டிடம் போன்றவற்றில் எல்லாம் 100 நாள் வேலை ஆட்கள் மூலமாகப் பணிகளை மேற்கொள்ளலாம்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் விவசாயத்தை எப்படிப் பாதித்தது?

இந்தத் திட்டம் வந்தப்போ முதல்ல 100 ரூபாய்- 110 ரூபாய்க்கு வேலைக்குப் போன பெண் விவசாயிகள் எல்லாம் பஸ் மூலமே கூட்டிட்டு போய், 180 ரூபாய் சம்பளம் அப்படிடங்கிறப்போ எல்லாரும் அங்க போய்ட்டாங்க. ஊர் விவசாய வேலை செய்வதற்கு அவ்வளவு ஆள் பற்றாக்குறை இருந்துச்சு. வேலையாட்கள் டிமான்ட் பண்ண ஆரம்பிச்சாங்க. ஒன்று சம்பளம் ரெண்டா குடுங்க. இங்க 4மணி நேரம் தான் குடுக்கற சம்பளத்திற்கு வேலை பார்ப்போம் அப்படினு சொல்ல ஆரம்பிச்சாங்க.

ஒரு பக்கம் உற்பத்தி பொருட்களோட விலை ரொம்ப அதிகம். இன்னொரு பக்கம் வேலையால் கிடைக்கல. கூலி இரண்டு மடங்கு சரி ஓகே எல்லாம் கொடுத்தாலும் அறுவடை பண்ற பொருளோட விலை நல்ல விலை கிடைத்தது என்றால் ஈஸியா சமாளித்துவிடலாம் என நினைத்து ஒவ்வொரு விவசாயியும் விவசாயம் செய்து கொண்டுதான் இருக்கிறான்.

இன்னும் எத்தனையோ ஊர்களில் கிராமசபை கூட்டங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டம் நிறைவேற்றி பண்ணதா செய்யறாங்க. ஆனா இங்கே இருக்கக்கூடிய அரசு அதைச் சார்ந்த அரசியல்வாதிகளோ அது சார்ந்த அரசு துறை சார்ந்த அதற்கு முன்னெடுப்பை செய்ததா இன்னும் எந்த அறிவிப்பும் தெரியல.

இன்னும் பல ஊர்களில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை ஐம்பது ஐம்பது அப்படிங்கற கூலி அடிப்படையில் விவசாயிகளுக்கும் பஞ்சாயத்திற்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுத் தோட்ட வேலைகளுக்கும் காட்டு வேலைகளுக்கும் பணி செய்ய ஆட்கள் அமர்த்தப்படுகிறார்கள். அந்த மாதிரி இந்தத் திட்டத்தை இன்னைக்கு இருக்கக்கூடிய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து கிராமப்புறங்களிலும் கிராமசபை கூட்டங்கள் போட்டு இந்தத் திட்டத்தை விவசாயத்திற்குச் சரி பாதி பயன்படுத்த வேண்டும் அப்படினு ஒரு நடவடிக்கை எடுத்தால்தான்... விவசாயிகளுக்கு ஒரு வழி பிறக்கும்.

விவசாயிங்க நாங்களும் மனுஷங்கதானே எல்லாத் தொழிலும் நல்ல ஓடிட்டு இருக்கு நாங்க மட்டும் நட்டத்தில் விவசாயம் பண்ணியிருக்க. பொண்டாட்டி புள்ளங்களுக்குக் கேக்கறத வாங்கிக் கொடுக்க முடியாமல் தவிக்கற விவசாயிகளுக்குத் தான் தெரியும். விவசாயம் எத்தகைய வலியது என்று.



Comments