For every 10 years history keeping itself repeated, likewise the book ,"The Selfish Gene" is newer and updated version of Evolution superhit," On The Origin Of Species".
ஜீன் - DNA எனும் சுருளின் ஒரு சிறிய பகுதி ( a pair of nucleotides with traits is called Gene). அறிவியல் பதில் இல்லாத அல்லது இதுவரை கண்டுபிடிக்கபடாத சில விடயங்களை வைத்து," அதுதான் கடவுள், இதுதான் கடவுள்", என்று சொல்பவர்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் நாத்திகவாதிகள், அதில் எனக்குத் தெரிந்து சமகாலத்தில் ஒரு உட்சபட்ச நாத்திகவாதிதான் Richard Dawkins.
தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள ஒரு ஆதிக்கவாதி எப்படித் துப்பாக்கி மற்றும் இதர ஆயுதங்களைப் பயன்படுத்துகிறானோ, அதேபோல் தான்.ஜீன்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உடல்களை உருவாக்கி கொள்கின்றன. Technically, organisms are 'Gene machines'. இதில், மனிதனுக்கு மட்டும் எந்த விதிவிலக்கும் இல்லை. இந்த ஜீன்கள் வரக்கூடிய பிரச்சனைகளை முன்னரே அறிந்து கொள்பவை. அதனாலேயே ஆண், பெண் என்னும் இரு வேறுவிதமான அமைப்புகளை உருவாக்கிக்கொண்டன; அதன் மூலமே இந்தச் சுயநலமிக்க ஜீன்கள் தோன்றின எனலாம். அதற்கு மிகவும் உறுதுனையாக இருந்தது, "Natural selection". பல கடினமான சூழல்களைத் தாண்டி வரும் ஜீன்களைத் தப்பிப் பிழைக்க வழி செய்தது, Natural selection. ஆனால், அதை மட்டும் வைத்து, அவைகளால், நிலையாக இருந்துவிட முடியாது. அதையும் தாண்டி... இந்த ஜீன்கள் தாக்கு பிடித்தற்குக் காரணம், பிரதியெடுத்தலை (Replication) பயன்படுத்தியதே. இப்படி எடுக்கும் போது சரியாக இருக்கும் நேரத்தில் எதுவும் மாற்றம் ஏற்படாது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. இதனாலேயே, பல மரபியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. அப்படி நிகழும் மாற்றங்களும் பல நேரங்களில் தேவையின் அடிப்படையிலே உருவாகின்றன. அப்படி உருவான ஜீன்கள் இடத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டே இருந்தன, இருக்கின்றன. இப்படிப் பற்றாக்குறையிலிருந்த ஜீன்கள் பிரதியினால் அபரிமிதமாகி போட்டிகள் உருவாகின. அந்த விளைவே, "Selfish Gene". Asexual reproduction முறையை விட sexual reproduction முறையில் இது வலுப்பெற்றுக் கொண்டே இருந்தன. கடலில் தோன்றிய உயிரினங்கள், கரையைக் கைப்பற்றியதன் பின்னனியில் இவைகளே இருக்கின்றன. சொல்லப் போனால் உடல் என்பது ஜீன்களின் காலணி. உயிரோடு இருப்பதே கடினம்.... இதற்கு நடுவில், இவைகள் ஆதிக்கம் எனும் புதிய பரிணாமம் எடுக்கத் துவங்கின, தான் வாழ பிறர் மடியலாம் என்னும் கோட்பாட்டை அவைகள் உருவாக்கிக் கொண்டன. அதன் விளைவு, சரிசமம் இல்லாத போட்டி நிலவின. இதில், தோற்ற ஜீன்கள் பாடம் கற்றுக் கொண்டன(memory of past) முதன்முதலாக Altruism genes (பொதுநல ஜீன்கள்)உருவாகின. போட்டிக்காகச் சொந்த ஜீன்களை அழிக்கக் கூடாது என்பதை ஜீன்கள் உணர்ந்தன. ஜீன்கள் தங்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஜீன்களுடன் நட்புடன் நடந்து கொண்டதுடன் குடும்ப அமைப்பை எற்படுத்திக் கொண்டன. அதனால், ஏற்படும் பாதுகாப்பை உணர்ந்து அப்படியே வாழ ஆரம்பித்தன. பல உயிரினங்களை உருவாக்குவதன் மூலம் நிலைபெற்று இருக்க முடியும்.... எனும் தவறை செய்து, அதிலிருந்து தேவையான அளவை மட்டும் உருவாக்கின, ஜீன்கள். இதற்கு, "லாக் பிரின்சிபல்", என்று பெயர்.
அப்படி ஜீன்கள் உயிரினங்கள் சற்று குறைவாக உருவாகியதற்கு இன்னொரு காரணம், Blackmail hypothesis. காட்டில் கூடுகட்டி வாழ்ந்த பறவை இனங்களில் புதிதாக உருவான குஞ்சிகள் எழுப்பும் ஒலியில் அனைத்து ஜீன்களும் அழியும் அபாயம் இருந்ததால் முதலில் பொறிக்கும் குஞ்சி சகோதரர்களைக் கொன்றுவிடுவதன் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது. கால ஓட்டத்தில் அனைத்து உயிரினங்களும் குழு வாழ்க்கைக்கு மாறின; ஆரம்பத்தில் அனைத்து உயிரினமும் பெண் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்தன. (அறிவியலின்படி ஆண் இனப்பெருக்கத்திற்குத் தனியாகப் பிரித்து வைக்கப்பட்ட காப்புபிரிதி {Back-ups} மட்டுமே)இந்த முறை வரலாற்று பிழை மனிதர்களிடம் மட்டும் நடந்தது. பெண்களே தங்களுக்குக்கான துணையைத் தேர்தெடுத்தன. இதனால், பல தகுதிகளை ஆண்கள் வளர்த்துக் கொள்ளவேண்டியிருந்தன. இதனால், தன்னை ஒரு சூப்பர் ஹூரோ என மனிதன் முதன்முதலில் எண்ணிணான். இறுதியாக, தலைமை ஆண்களிடம் சென்றது. போர் முதன்முதலாகத் தன்னையும் தன்னைச் சார்ந்த ஜீன்களைக் கொண்டவர்கள் பாதுகாப்பிற்காக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மீம்கள் (memes)உருவாகின .
"Meme-replica" சுருக்கமாக நாம் எதைக் காப்பிச் செய்கிறோம் என்பதைப் பொருத்துதான் நம் ஜீன்கள் பரவுமா ? முடிவுருமா ? என்பது தீர்மானிக்கப்படும். ஆனால், நவீனகாலத்தில் ஜீன்களின் கடத்தும் வழிகளை மரபியலின்படி phenotype வழியாகவும் கடத்தலாம் என்பதை Dolly எனும் ஆட்டின் மூலம் நிறுவியதின் மூலம் ஜீன்கள் தங்களை, இன்னும் பலகாலம் வாழ வழிகண்டுபிடித்துக் கொண்டன.
Comments
Post a Comment