புதியதில் சொக்கி,
துரிதத்தை விருந்தாக்கி;
மருந்துகளைப் பரிமாறி,
நோய்களை சொந்தமாக்கி
தனிமையே பந்தமாக்கி;
சுயநலத்தின் சுழற்சியில்,
உற்ற உறவுகளையும் ஒதுக்கி,
உணர்வுகளை உருக்குலைத்து;
மனமற்ற மனிதனாய் வலம்வந்த,
இந்த நவீனம்.
பழையதை துளைத்தெடுத்து,
இலைதழைகளை தேடிப்பிடித்து,
உயிர்ப்பிழைக்க நாளும் வேண்டி;
தனிமையில் துணைத்தேடி,
சொந்தத்திடம் மண்டியிட்டு,
உயிரற்ற செய்கையை உயிர்ப்பித்து
மன்னிப்பு வேண்டுகிறது,
இந்தக் கொரோனா.
தீயதிலும் நல்லதாக
மறதியின் நினைவுத்தூண்டலாக
இருபதில் மூவாயிரத்தின்
ஆட்சிக்காலமே,
இந்தக் கொரோனாக்காலம்.
விலக்கி விலகியதில்
விழித்தெழுவோம் மனிதனாக!!!..
- கீர்த்திகா
Comments
Post a Comment