தற்பொழுது, கடந்தாண்டு GDP சதவிகிதம் வெளியானதையொட்டி, வரி வருவாய் கணக்குகளையும் அரசு வெளியிட்டது.
அந்தப் புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது கடந்த 4 ஆண்டுகளை விட மறைமுக வரியில் (Indirect Tax), அரசு வருவாயை பெருமளவில் ஈட்டியுள்ளது. இதையொட்டி, அப்படியே தொழில்நிறுவன வரியானது (Corporate Tax) கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது.
இதைப்பற்றிப் பார்க்குமுன், நம் நாட்டில் வசூலிக்கப்படும் வரிவிதிப்பை பற்றி ஒரு பார்வை பார்ப்போம்.
பொதுவாக எந்தவொரு நாட்டிலும் வரியை இரண்டு விதமாகப் பிரிப்பார்கள்.
1. நேர்முக வரி ( Direct Tax)
2. மறைமுக வரி ( Indirect Tax)
1.நேர்முக வரியானது வருவாயை பொருத்து வரி விதிக்கப்படும். இதைத் தான் Progressive Tax என்று அழைப்போம். அதாவது நான் இந்நாட்டில் ஈட்டும் வருவாயைப் பொருத்து இந்நாட்டிற்கு வரி கட்ட வேண்டும். Income Tax ஐ இதற்கு உதாரணமாக வைத்துக்கொள்ளலாம்.
2. மறைமுக வரியானது எனது வருவாயை கணக்கிலெடுக்காது, ஏழை பணக்காரன் ஆகிய இருவருக்கும் ஒரே வரி விதிக்கப்படும். இதை, Regressive Tax என்று அழைப்போம். இதற்குச் சிறந்த உதாரணம், GST. நான் குடிசை வீட்டில் இருந்தாலும், நான் வாங்கும் Shampooக்கு 5% GST வரி செலுத்த வேண்டும். மாளிகையில் வாழ்ந்தாலும் Shampooவிற்கு அதே 5% வரி தான் கட்டியாக வேண்டும்.
இப்போதைய, கணக்குப்படி பார்த்தால் Direct Taxலிருந்து 4.79%உம், Indirect Taxலிருந்து 5.48%உம் வருவாய் ஈட்டியுள்ளது.
இதில் 15 ஆண்டுகள் கழித்து நேர்முக வரியான direct taxஇல் அரசு இவ்வளவு குறைவாக வருவாய் ஈட்டியுள்ளது.
கார்ப்பரேட் டேக்ஸ் 10 வருடங்கள் காணாத அளவிற்குக் குறைந்துள்ளது. இது, கொரோனாவால் பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் ஏற்பட்ட எதிரொலி... என்று இதை ஒதுக்கிவிட முடியாது.
Pre Pandemic situationஇன் போதே இந்தியா கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை பெரும்பாலாக ரத்து செய்தது.(Corporate Tax cut).
தனியார் முதலீடுகளை (Private Investment) ஊக்குவித்து, அதில் வேலைவாய்ப்பையும், நாட்டின் உற்பத்தி அளவையும் பெருக்க அரசு இவ்வாறு செய்கிறது என்று வைத்துக் கொண்டால் கூட, பேன்டமிக்கின்(Pandemic) பிந்தைய நாட்களிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிகளை அரசு குறைத்துள்ளது.
ஏற்கனவே ஊரங்கடங்கில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், அந்த நேரத்தில் அரசு கார்ப்பரேட் வரியை விலக்குவது வண்டி சாவிக்கூடப் போடாமல் ஆக்சலேட்டரை அழுத்தி வண்டியை ஓடலயே என்று சொல்வதைப் போலத் தான் உள்ளது. இப்போது, கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து வரும் வரியை கட்(cut) செய்துவிட்டு, அதற்குக் காம்பன்ஸேட் (compensate) செய்ய மறைமுக வரியை கூட்டுகிறது.
கடந்த வருடம் மே மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்குக் கூட்டு கலால் வரி (additional excise duty) முறையே ₹2 மற்றும் ₹5/ லிட்டருக்கு அரசு ஏற்றியுள்ளது. பின் இந்தப் பட்ஜெட்டில் AIDC (Agricultural Infrastructure Development Cess) என்று மேலும் வேறு ஒரு வழியில் பெட்ரோல் டீசல் விலையைக் கூட்டியுள்ளது. இதில் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து வரிகளும் நேரடியாக ஒன்றிய அரசுக்குச் செல்லும் வரித்தொகையாகும்.
சாமானியனுக்குக் கிடைக்கும் பொருள்களில் குறைவான வரியை விதித்து, பணக்காரர்களிடமிருந்து கொஞ்சம் மிகுதியாய் வசூலித்து வரும் Progressive Tax தான் இன்று வரை அனைத்து வளர்ந்த நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் வாழும் இந்தியாவில் மட்டும் அப்படியே மாற்றாக ஏழைகளிடம் அதிகம் வசூலித்து, பணக்காரர்களிடமிருந்து குறைவான வரியை வசூலிக்கும் Regressive Taxation system பின்பற்றப்படுகிறது.
இதைத் தான், இப்போது K Shaped recovery என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது, K எனும் ஆங்கில alphabetஇல் மேலும் கீழுமாக உள்ள குறிகளைப் போல,
பணக்காரன் மேலும் பணக்காரனாகிட்டே போறான்,
ஏழை மேலும் ஏழையாகிட்டே போறான்.
Comments
Post a Comment