ஊரடங்கு காலம் விவசாயிகளுக்கு வரமா? சாபமா?

       ன்றோ ஒருநாள் நம் பாட்டன் நம்மாழ்வார் பேசிய வரிகள் தான் நியாபகம் வருகிறது:

ஓடும் இரயில்களும், பறக்கும் விமானங்களும் ஒரு நாள் நிற்கலாம்.

விவசாயமும், விவசாய சார் தொழில்களும் ஒருநாளும் நிற்காது.

அதன் படியே, விவசாயம் பிரதான தொழில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொழில் என்பதைப் பற்றி இந்த இரண்டு ஆண்டுக் கொரோனா அனைவருக்கும் உணர்த்தியது.  அனைவரின் பார்வைக்கும் விவசாயம் அழகாகத் தெரிந்தது. ஆனால், விவசாயிக்கு தான் தெரியும் அது எத்தகைய வலிகள் உடையது என்று முன்பின் எதிர்பார்த்திராத இந்தக் கடையடைப்பு மற்றும் ஊரடங்கு விவசாயிகள் வாழ்க்கையில் எத்தனை பெரிய புயலாய் வந்து நின்றது என்பது பற்றி எவரேனும் சிந்தித்தது உண்டா?



  சாகுபடி செய்த எத்தனை பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் தோட்டத்திலேயே வீணாகப் போனது என்பது எல்லாம் விவசாயிகளின் கண்ணீர் கதைகளாகவே தொடர்ந்து;

  இது, ஒருபுறமிருக்க அதற்கும் மேலே முன் திட்டமிடுவதில் தெளிவின்றி நடந்த முன்னறிவிப்பின்றி நடந்த இந்த லாக்டவுன் நிறைய விவசாயப் பொருட்களைத் தேங்கிப் போகிற அளவுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கியது என்பதை எத்தனை பேர் அறிவார்கள்.

  உங்கள் பார்வைக்குக் காய்கறிகளும் பழங்களும் எளிதாக வந்து கிடைத்துவிடுகிறது.... அதனால் விவசாயிகளுக்கு அசல் கூடக் கிடைக்கவில்லை என்பதைப் பற்றி எவரேனும் சிந்தித்தது உண்டா?

  ஊரடங்கை காரணம் காட்டி எத்தனை புரோக்கர்கள் (இடைத்தரகர்கள்)கொள்ளை இலாபம் சம்பாதித்தார்கள் தெரியுமா?

  இத்தனை கட்டுப்பாடுகளை மீறி அந்தப் பொருளை இந்த ஊடரங்கு காலத்திலும் உற்பத்தி செய்து உங்கள் கைகளில் கிடைக்க ஏற்பாடு செய்வது என்பது அத்தனை சாதாரண விஷயம் கிடையாது அதை அவ்வளவு எளிதாக ஈஸி என்று நாம் கடந்து விட முடியாது. இடுபொருட்களான விதைகள் களைக்கொல்லி பூச்சிக்கொல்லி உரத்தின் விலை மட்டும் கடந்த இரண்டு வருடத்தில் மட்டுமே 24% அதிகரித்திருக்கிறது.

  ஆனால்,  விளைபொருள் விலை ஏறிய பாடு இல்லை.

  அரசு இடுபொருட்கள் மானியங்கள் எல்லாம் பெயரளவுக்கு மட்டுமே கொடுக்கும் பொருட்களின் தரம் என்ன என்பதை என்னைக்காவது சோதித்துப் பாருங்கள் தெரியும்.  விவசாயி தானே எங்குக் கேட்க போகிறான்,  என்று அடிமைகளாக நடத்தும் பொதுமக்கள். போதாக்குறைக்குப் பூச்சி மருந்து கடைகள் திறக்கப்படும் நேரம் குறைக்கப் பட்ட காரணித்தால், விலைவாசி அவரவர் வைத்தது தான். விளைஞ்ச பொருட்கள் பாதி விற்பனைக்குப் போகல... முன்னவாவது கமிஷன் மண்டி இருக்கும் அதுக்கு வண்டி வாடகை ,சுங்கவரினு கட்டி ஆட்டோல ஏத்திட்டு மார்க்கெட்ல போயி.... ஏதோ போற வெலைக்காவது வித்துடுவோம். ஆனா, இப்ப அப்படி இல்லை லோக்கல் மார்க்கெட் ஏதும் திறந்த பாடில்லை. காட்டுக்கு வந்து புரோக்கர்கள் வைக்கறது தான் விலை.

  அடிமாட்டு விலைக்கு விளை பொருளை விக்க வேண்டிய கட்டாயம் இருக்கு இப்போ..... ஏதோ விற்றா சரின்னு தள்ளி விட வேண்டியதாயிற்று எங்க பொழப்பு.

  ஊரடங்கு உத்தரவுக்கு அப்பறம் காய்கறிகள் விலை ஏறியதாகச் சொல்கிறார்கள்.ஆனால்,விளைவித்த எங்களுக்குத் தான் தெரியும் அது இடைத்தரகர்கள் ஏற்றிய விலை என்று.

உண்மைய சொன்னா இந்த லாக் டவுன் சாபம் தான்.என்று மாறுமோ ! இந்தக் குலம் காக்கும் குடியானவனின் நிலை.இருக்கும் கோவனமாவது மிஞ்சுமா என்று தெரியவில்லை

தக்காளி விலை ஏறிவிட்டது ,

வெங்காயம் விலை ஏறிவிட்டது ,

பருப்பு விலை ஏறிவிட்டது ,

பால் விலை ஏறிவிட்டது ,

பொதுமக்களின் தினசரி குமுறல் ...

 

நான் தெரியாமல் கேட்கிறேன் !!!!

 

என் மகனை என்ஜினீர் ஆக்குவேன் ,

என் மகனை டாக்டர் ஆக்குவேன் ,

என் மகனை கலெக்டர் ஆக்குவேன் ,

என் மகனை வக்கீல் ஆக்குவேன்,எனக் கூறும் பெற்றோர்கள்.... தன் மகனை வேளாண்துறை வல்லுனராக்குவேன்....

தன் மகனை நல்ல விவசாயி ஆக்குவேன் என்று,எந்த தாய் தந்தையும் நினைப்பது இல்லை.

 

COLGATE விலை ஏராளம்....

HAMAM SHOP விலை ஏராளம்.....

PEPSI விலை ஏராளம்.....

CINEMA TICKET விலை ஏராளம்.....

KFC CHICKEN விலை ஏராளம்.....

THALAPAAKATU BRIYANI விலை ஏராளம்...

GOLD விலை ஏராளம்....

DIAMOND விலை ஏராளம்.....

  எத்தனை பேர் இதற்காக வீதியில் இறங்கி போராட வருவீர்கள்?

 

  6 மாதம், 1 வருடம் , தண்ணீர் இல்லாமல் எத்தனையோ செலவு செய்து, வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு அறுவடை செய்து, கொஞ்சம் கூட லாபம் இல்லாமல் ஒரு பொருளை விற்க விவசாயி மட்டும் என்ன விதி விலக்கா?

  விவசாயி மட்டும் என்ன REMOTE CONTROLலயா அரிசியும், பருப்பும் உருவாக்குகிறான். இல்லை JAVA, C++, PHP PROGRAMல உருவாக்கி கோடி கணக்கில் சம்பாதிக்கிறார்களா?

வாழ விடுங்கள்....

விவசாயிகளையும்.......

விவசாயத்தையும்!!!....

 

- இவன் அ சரத்குமார்

 


Comments