ஆசியாவின் அத்திப்பட்டி பாலஸ்தீன் !!!

 

            சிட்டிசன்   படத்தில் வரைபடத்திலே  இல்லாமல் அழிக்கப்பட்ட       அத்திப்பட்டியாக, பாலஸ்தீன் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகிறதென்றால்,   அது மிகையாகாது!!!...

    ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பும் மற்ற 138 நாடுகளும் பாலஸ்தீனை சுதந்திர நாடாக ஆதரித்த போதும் அமெரிக்காவும், ஐரோப்பாவும், GOOGLE, APPLE போன்ற அமெரிக்க நிறுவனங்களும் பாலஸ்தீனை ஒரு பொருட்டாகக் கருதாதது ஏன்? 2016 ஆம் ஆண்டில் பாலஸ்தீனை உலக வரைபடத்திலிருந்தே   நீக்கியது ஆச்சரியத்தின்   விளிம்பிற்கே அழைத்துச்செல்கிறது.

  Suez கால்வாயின் பாதுகாவலன் என்றழைக்கப்பட்ட பாலஸ்தீனின் இன்றைய அவலமான நிலைக்குக் காரணம் அறிய நாம் ஒரு நூற்றாண்டு வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.



“KUTTY FLASHBACK- எல்லாரும் கொஞ்சம் மேல பாருங்க......

  ஆண்டாண்டு காலமாகப் பாலஸ்தீன் வஞ்சிக்கப்பட்ட தேசமாகவே இருக்கிறது. புத்தகப்பை சுமக்க வேண்டிய குழந்தைகள் குளுக்கோஸ் பாட்டில்களோடு அலைகின்றனர். மழலைகளைத் தூக்கி மகிழ வேண்டிய பெற்றோர்கள் கைக்கால்கள் இழந்து கிடக்கின்றனர். பள்ளிக்கூடங்களில் சாக்பீஸ் சிதறல்களுக்குப் பதிலாகக் கட்டிடங்களே சிதறிக் கிடக்கின்றன. வீதியில் ஒப்பாறியும் ஓலமுமே காணக்கிடக்கின்றன. இவை, 1938ல் ஹரிஜன் பத்திரிக்கையில் காந்தியடிகள் எழுதியவை.

  கிரேக்கம், ரோம் உள்ளிட்ட பல்வேறு ஆட்சியாளர்களைக் கடந்து சிலுவை யுத்தம் போன்ற வரலாற்று யுத்தங்களைக் கடந்து துருக்கியின் ஓட்டமனிடம் இருந்து முதலாம் உலகப் போரின் இறுதியில் பிரிட்டனுக்குக் கைமாறியது.இத்தகைய,பாலஸ்தீனின் தலைநகரான ஜெருசேலம் புகழ்பெற்ற நகரம். மசூதியும், மாதா கோவிலும், யூதர்கள் கோவிலும் அங்கே ஒருசேர அமைந்திருந்தது. எளிமையாகப் புரியும்படி சொல்லவேண்டுமானால் இந்தியாவின் அயோத்தி நகரமே பாலஸ்தீனின் ஜெருசேலம்.

  அமெரிக்க ஐரோப்பா போன்ற நாடுகளில் செல்வ செழிப்புமிக்கப் பதவியில் இருந்த யூதர்களுக்குத் தங்களுக்கெனத் தாய்நாடு இல்லையே என்ற எண்ணம் ஆழமாக அவர்கள் மனதில் பதிந்து வருத்திக்கொண்டிருந்தது.

  முன்னரே 1896ல் "இறைவனால் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம்" என்ற கொள்கையோடு பாலஸ்தீனை கைப்பற்ற Theodre Harshal என்பவர் ஜியோனிச அமைப்பை தொடங்கி இருந்தார். அவர்கள் பிரிட்டனை பகடையாக்கி எட்டுத்திக்கிலிருந்தும் பாலஸ்தீனில் அகதிகளாக அடைக்கலம் தேடி பாலஸ்தீன் புகுந்தனர்.

1919-1938 காலக்கட்டத்தில் பல லட்ச யூதர்கள் பாலஸ்தீனில் குடியேறினர். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனிநாடு கேட்டதுபோல் அவர்கள் அங்கே இஸ்ரேல் எனும் தனிநாடு கோரிக்கை வைத்தனர். 1949இல் UN portion plan படி Aurthor Balbor உடன்படிக்கையில் இஸ்ரேல் தனிநாடாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு இன்றுவரை நடந்து வரும் யுத்தங்களிற்கு அன்றே வித்துப் போட்டது பிரிட்டன் அரசாங்கம்.

  "நான் பல யூதர்களைக் கொன்றாலும் அவர்களில் சிலரை உயிரோடு விட்டுச்செல்கிறேன். யூதர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவதற்காக"

  இவை யூதர்கள் குறித்து ஹிட்லர் கூறியவை. இதற்கு ஏற்றார் போலவே யூதர்கள் பாலஸ்தீனியர்களின் மீது வன்முறையைத் தொடுக்க ஆரம்பித்தார்கள். 1948ல் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் துரத்தப்பட்டு 15,000க்கு மேற்பட்டோரை படுகொலை செய்தனர். இதன்பின் 1964ல் யாசர் அராஃபத் என்பவரால் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டது. காஜா (Gaza) பகுதியில் ஹமாஸ் (HAMAS) என்ற இயக்கமும் இஸ்ரேலுக்கு எதிராகத் தொடங்கப்பட்டது. அரபு நாடுகள் 1967ல் இஸ்ரேலை சுற்றி படைகளை நிறுத்திய போதும் இஸ்ரேல் அமெரிக்க ஐரோப்ப உதவியோடு எதிர்பாரா நேரத்தில் தனது முதல் அடியை எடுத்துவைத்தது. எகிப்து, ஜோர்டன், சிரியா நாடுகளின் விமானத்தடவாளங்களும் தகர்க்கப்பட்டது. முதன்முதலாக ஜோர்டானின் கட்டுப்பாட்டில் இருந்த ஜெருசலேம் இஸ்ரேலின் கைவசப்பட்டது. 78% பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமித்த இஸ்ரேல் அவர்களைத் துறத்தி வெளியேற்றியது.

  அப்போது, ஜெருசேலமை பொதுவான இடமாக(இஸ்ரேலுக்கும் அல்லாத பாலஸ்தீனுக்கும் அல்லாத ஆனால் இஸ்ரேல் காவலர்களின் கட்டுப்பாட்டில்) அறிவித்தனர். இதனால்,பெரியார் பாலஸ்தீன மக்களை அரேபிய திராவிடர்கள் என்று விமர்சித்தார்.

அன்று முதல் முஸ்லீம்களுக்கு எதிரான அநீதிகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மீண்டும் 2014ல் இஸ்ரேல் பாலஸ்தீனை தாக்கியதில் பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் தரைமட்டமாக்கப்பட்டது. அவர்களின் வெறி குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.

  "பாலஸ்தீனிய தாய்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. மாறாக நஞ்சுகளைப் பிறப்பிக்கின்றனர் " என்ற இஸ்ரேல் MP ஒருவரின் உரை யூதர்களின் மனசாட்சியற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு வெளிச்சப்படுத்திக்காட்டியது.



  கொரோனா காரணமாகச் சிறிதுகாலம் ஓய்வெடுத்த பாலஸ்தீன் மீண்டும் இந்தாண்டு இரத்த வெள்ளத்தில் மூழ்க நேரும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டோம்.

  வழக்கம்போல இரமலான் நோன்புக்காக அல்-அக்ஸா மசூதிக்கு வந்தவர்களைச் சுற்றிவளைத்த நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய காவலர்கள் பாலஸ்தீனிய முஸ்லீம்களை வெளியேற்ற முயன்றதே இன்றைய வன்முறைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாலஸ்தீனிய ஹமாஸ்(HAMAS) அமைப்பினர் அவர்களை வெளியேற பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லாமல் போனதால் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஏவுகனைகளோடு இஸ்ரேலை தாக்கத் துவங்கினர். பெறும் தொழில்நுட்பங்களை (Iron dome-ஏவுகனைகளை வானிலேயே செயலிழக்கச் செய்யும்) கொண்ட இஸ்ரேலுக்குப் பெரிய இழப்பு ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து எதிர் தாக்குதலுக்குத் தயாரானதோடு காஜா(Gaza)வை அதிதீவிரமாகத் தாக்கத்தொடங்கினர். இப்படியே தொடரும் வன்முறைகள் இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடுகளைத் திரும்பச் செய்வதால் இஸ்ரேல் அதிபர் பென்ஜமின்,11 நாட்களுக்குப் பிறகு 200க்கு மேற்பட்ட உயிரிழப்பிற்கு ஏகப்பட்ட பாதிப்புகளைப் பாலஸ்தீனத்திற்கு வழங்கிய பிறகு யுத்தத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.

இது, இன்றைய நாளின் முடிவு தான்.இந்த யுத்தத்தின் முடிவு தான். பாலஸ்தீனியர்களுக்குச் சிறிய ஓய்வு, அவ்வளவுதான். ஆனால்,இது நிரந்தரமல்ல. எந்நேரமும் பதட்டத்தோடும் பயத்தோடும் வாழும் பாலஸ்தீனிய மக்களுக்கும் குழந்தைகளுக்கும் விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும்.கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நகர்வோம்!!!...

- காவியன் தமிழன்

 

 

 

 

Comments