இப்ப இந்தியாவில இந்த மிஷன பத்தி தெரியாதவங்களே இருக்க மாட்டாங்க. சின்ன குழந்தைய கேட்டா கூட என்ன நடந்துச்சுனு சொல்லும். கவல படாதிங்க. மறுபடியும் செய்தில வர மாறியே திருப்பி திருப்பி சொல்ல மாட்டேன். ஆனாலும் சொல்லனும்ல. ஷார்ட்டா கிரிஸ்ப்பா முடிச்சறேன்.
நா முன்ன சொன்ன மாதிரி 3 components இருக்கு சந்திரயான்ல. Orbiter – Lander – Rover.
Orbiter – பறக்கும் இயந்திரம்.
நிலா மேல வட்டம் போடும். இதோட ஆயுட் காலம் 1 வருடம். அதை வெற்றிகரமாக நாம விண்ணில் செலுத்தியாச்சு.
Lander – அந்த orbiter ல இருந்து ஒரு நிலாவுல கால் பதிக்கிற ஒரு குட்டி பெரிய பையன். இவனுக்கு நடக்க தெரியாது. அதனால இவன அழகா நிற்க வைக்கனும். அந்த இடத்துல தான் நமக்கு ஒரு சின்ன சறுக்கல் ஆயிடுச்சு. பிளான் பன்ன இடத்தில இவன இறக்க முடியல. பாதை மாறி போயி, சிக்னல் கட் ஆகி இப்ப எந்த நிலைமைல இருக்கானே தெரியாம தொலவி வராங்க. இப்போ 2 நாளுக்கு முன்னாடி கூட NASA
வோட LRO ( Lunar Reconnaissance Orbiter) நம்ம லேண்டர் இறங்கவிருப்பதாக மார்க் பன்னி இருந்த இடத்தை படம் பிடித்து அனுப்பியது. ஆனால் அங்கயும் லேண்டர் லேண்ட் ஆனதிற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
Rover – இது லேண்டரோட பிள்ளை. 6 சக்கர ரிமோட் கார். லேண்டர் லேண்ட் ஆனோனே இந்த ரோவர இறக்கி விடும். இந்த ரோவர்ல 2 முக்கியமான கருவி பொருத்தியிருந்தாங்க.
- APIXS ( Alpha Particle Induced X ray Spectroscope)
- LIBS (
Laser Induced Breakdown Spectroscope)
இது லேசரை அங்குள்ள மண் மீது அடித்து அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷனை ரெக்கார்ட்
செய்து லேண்டர் க்கு அனுப்பும், அங்க இருந்து
orbiter வழியாக Indian Deep Space Network க்கு அனுப்பும். இதான் மொத்த ப்ளான். இத 8 வழி சாலைல போனா சீக்கரமா போய்ட்ற மாறி நேராக லேண்டர்ல இருந்தே
Deep Space Network க்கு அனுப்புற ஆப்ஷனும் வச்சிருந்தாங்க.
இப்போ நா இந்த இடத்தில அறிவியல விளக்க போறதில்ல, கொண்டாட போறேன். எப்பவுமே மீம்ஸ் மட்டுமே போட்டுட்டு இருந்த Social media கள்ல திடீர்னு சந்திரயான பத்தி பேச ஆரமிச்சாங்க. ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல கிட்டத்தட்ட எனக்கு தெரிஞ்சே 4000 பேருக்கு
மேல 4 மணி வரைக்கும் முழிச்சிருந்தாங்க. ஒவ்வொரு ISRO Updates அயும் 7 G வேகத்துல Spread பன்னாங்க. இஸ்ரோல 5 நிமிடம் கேமரா ஆப் செய்தோனே 2000 க்கும் மேற்ப்பட்ட டிவீட்ஸ்,
அதுவும் 2.30 மணிக்கு. அவன் அவன் பப்ளிக் பரிட்சை க்கு கூட அவ்ளோ நேரம் முழிச்சிருக்கமாட்டான். ஆனா அன்னைக்கு 4.30 வரைக்கும்
முழிச்சிருந்து எல்லா நியூஸ் சேனலுக்கும் பல்ப் கொடுத்தாங்க. ஏன்.. இத படிச்சிட்டு இருக்குற நீங்களே சொல்லுங்க, நா சொல்லி தான் உங்களுக்கு தெரியுமா?.. வெறும் சினிமாவிற்காகவும், கிரிகெட்டிற்காகவும் தூங்காம இருந்த கூட்டம், இன்னைக்கு அறிவியலுக்காகவும்,
நாட்டுகாகவும் தூங்கம இருந்தாங்க. இத விட ஒரு நாடு முன்னேறிய நாடு னு சொல்வதற்கு வேற என்ன தகுதி வேணும்????
நன்றி! வணக்கம்!
Comments
Post a Comment