சாலுமரதா
திம்மக்கா ஆலமர திம்மக்கா என்றழைக்கப்படும் 106 வயதுடைய சுற்றுசூழலியல் ஆர்வலர்.
எங்கயோ கேள்விப்பட்ட பெயராச்சேன்னு யோசிக்கிறீங்களா?
கொஞ்ச நாளைக்கு முன்னாடி நியூஸ்பேப்பர்லயும் டிவிலயும் பரபரப்பா பேசிக்கிட்ட ஒரு பெயர்.
கணவன் மனைவி இருவரும் மரம் நடுதல் மற்றும் அதனை
பராமரிப்பதற்காகவே தங்களை அர்பணித்தவர்கள்.
கர்நாடக மாநிலத்தின் டுமகூர் மாவட்டத்தில் பிறந்து
ராமநகர் மாவட்டத்தில் உள்ள குளிக்கல் கிராமத்தில் சிக்கையாவை திருமணம் செய்துக கொண்டார்.
ஆரம்ப காலத்தில் இன்று இனிமையாக தொடங்கிய இருவருக்கும் திருமணமான பின்பு பக்கத்தில்
உள்ள கல்குவாரியில் வேலையாட்களாக தங்களது வாழ்க்கையை தொடங்கியவர்கள், தங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லை என்று எண்ணி கவலை கொள்ளாமல் மரம் நடுவதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்.
இதுவரை 8000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு
சாதனை படைத்துள்ளனர். எண்ணிக்கைக்கு மரம் நடுவது எல்லாம் நம்ம ஊரு வழக்கம். இவங்க
8000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டது மட்டுமில்லாமல் அதை பராமரித்து மரமாக வளர்த்து
பலன் கொடுக்கும் அளவிற்கு உருவாக்கி உள்ளனர்.
அதற்கு உறுதுணையாக ஆரம்பகாலங்களிலிருந்து அவருடைய
கணவரும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். மரக்கன்றுகளுக்கு தன் சைக்கிளிலேயே
தண்ணீர் சுமந்து சென்று மரமாக வளர உதவி செய்துள்ளார்.
கணவர் இறந்த பின்னும் அந்த பணியை மனம் தளராமல்
அதே தெம்புடன் செய்து வருகிறார் இவர்.
இவரை பாராட்டி மாவட்ட மற்றும் மாநில நிர்வாகம்
10க்கும் மேற்ப்பட்ட விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.
மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி
கௌரவித்துள்ளது.
குழந்தைப்பேறு இல்லை என்றவுடன் மனம் தளர்ந்து
இனி வாழ்வில் எந்த பிடிப்பும் இல்லை என்று எண்ணும் பெண்கள் வாழும் இச்சமூகத்தில் தான்
இப்படி ஒரு பெண்மணி வாழ்ந்திருக்கிறார்.
பெற்றிருந்தால்கூட ஒரு பிள்ளை தான்!
பெறாததால் என்னவோ இத்தனை மரப்பிள்ளைகள்!
Comments
Post a Comment