National register of Citizen
ஆகஸ்ட்
31 அன்று அசாமின் NRC பட்டியலை மத்திய அரசு வெளியிட உள்ளது. அசாம் மாநிலத்தில் சட்ட
விரோதமாக குடியேறியவர்களை அகற்றும் மத்திய அரசின் செயல் முறை இது.
அசாமில் NRC
அசாமானது
100க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்களிளை கொண்ட வடகிழக்கு மாநிலமாகும். காலனி ஆதிக்கத்தின்
போது பீகார்,உத்திர பிரதேசம்,மேற்கு வங்காளம், வங்காள தேசம் போன்ற பகுதிகளில் இருந்து
தேயிலை தோட்ட பணிக்காக வேலையாட்களை அசாமிற்கு கொண்டு வந்தனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்.
1951 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் NRC கணக்கெடுப்பும்
நடைபெற்றது.
1947 ஆம் ஆண்டு பிரிவினை வாதத்தின் போதும் 1971 வங்காள தேசம் சுதந்திரம் அடைந்த
போதும் அதிக அளவிலான மக்கள் அசாமில் குடியேறினர். இதனால் அசாம் பூர்வீக பழங்குடி இன
மக்கள் தங்களின் வாழ்வுரிமை மற்றும் குடியுரிமை குறித்து கவலை கொள்ள ஆரம்பித்தனர்.
அசாம் ஒப்பந்தம்
அதிக
படியான குடியேற்றங்களினால் 1979 ஆம் ஆண்டு அசாம் மாணவர் அமைப்பு (All Assam
students Union) மற்றும் அசாமின் அரசியல் கட்சிகள் இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.ஆறு
வருட போராட்டத்திற்கு பிறகு ஆகஸ்டு 15, 1985 அன்று அசாமின் அரசியல் கட்சிகள் மற்றும்
மாணவர் அமைப்பிற்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது(Assam
Accord). இதன் படி மார்ச் 15, 1971 பிறகு அசாமிற்கு
புலம் பெயர்ந்தவர்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் சொந்த நாட்டிற்கே திருப்பி
அனுப்பப்படுவார்கள் என்றும் அசாமின் பூர்வீக பழங்குடி இன மக்களின் சமூக பொருளாதார காலாச்சார
உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மார்ச் 15 1971 ஆனது வங்காள தேசம் சுதந்திர அடைந்த தினமாகும். இதன் பின்னர் அதிக படியான மக்கள் அசாமில்
குடியேறினர். இதன் காரணமாகவே இந்த குறிப்பிட்ட தேதிக்கு பிறகு அசாமிற்கு வந்தவர்கள்
சட்டவிரோதமாக குடியேறியவரியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலையீடு
அசாமில்
40 இலட்சத்திற்கும் அதிகமான அந்நிய மக்கள்
வாக்காளர் பட்டியலில் சேர்த்திருப்பதாக கூறி 2009 ஆம் ஆண்டு அசாமின் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும்
1951 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட NRC கணக்கெடுப்பை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியது. அதன் பின் 2013 ஆம் ஆண்டு முதல் NRC கணக்கெடுப்பில்
உச்ச நீதிமன்றம் தலையிட தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் NRC கணக்கெடுப்பு
நடைபெற்றது.
டிசம்பர்
31 ,2017 அன்று வெளியிட்ட NRC வரைவு பட்டியலில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின்
பெயர்கள் இடம் பெறாதது அசாம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிறகு
ஜூலை 31 ,2018 அன்று வெளியிட்ட பட்டியலில் 1.02 இலட்சம் நபர்கள் இடம் பெறவில்லை. மக்கள்
தங்களின் குடியுரிமையை நீரூபிக்க தக்க ஆவணங்களை
அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க அன்று. ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்படும் பட்டியலில்
20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் பெயர்கள் இடம் பெறாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாக
NRC அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
மனிதாபிமானம்
வரலாற்று
வழக்கமாக தொடர்ந்து வந்துள்ள சட்ட விரோதமான குடியேற்றங்களை அகற்றுவது, பூர்விக பழங்குடி
இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது போன்றவை அரசின் பிரதான கொள்கையாக உள்ளது.
இதன் காரணமாகவே புலம் பெயர்ந்தவர்களை அகதிகளாக ஏற்காமால் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்று வெறுக்கிறோம். மனிதாபிமான அடிப்படையில் செயல்
படும் போது இலட்ச கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.மேலும் பூர்விக பழங்குடி
இன மக்களின் சமூக பொருளாதார நிலை சரிய நேரிடும். பட்டியலில் இடம் பெறாமல் இருக்கும்
நபர்களின் நிலைமை என்ன என்பது கேள்வி குறியாகிறது. இந்தியாவில் புலம் பெயர்ந்தவர்களை
எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வங்காள தேசம் கூறிய நிலையில் அம்மக்கள் எங்கு
குடியமர்த்தப்படுவார்கள் என்பது சற்று அதிர்ச்சி தரும் கேள்வியாகும். மனிதம் காக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா.
உலக அரங்கில் சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு மத்தியில் அமைதியையும் மனிதநேயத்தையும்
மட்டுமே விரும்பும் நாடு.
பட்டியலில் இடம் பெறாத மக்களுக்கு நீதி வழங்கப்பட
வேண்டும் மேலும் அவர்கள் இந்திய மக்களிடையே கண்ணியமாக நடத்த வழிவகை செய்ய வேண்டும்.
மனிதநேயத்தால் தான் இவ்வுலகம் உயிர் பித்து கொண்டிருக்கிறது.
மனிதனால்
மனிதம் வளரட்டும்
பயனுள்ள தகவலை அளித்தமைக்கு நன்றி ஜெயம்
ReplyDeleteநல்வரவு பறவையே
Deleteநாட்டின் நகர்வுகளையும்,நடப்பு நிகழ்வுகளையும் , அறிவியலையும் தாய் மொழியில் அளிப்பது பெருந்தொண்டு,மிக்க நன்றி சகதோரரே,
Deleteஉம் பணி வளர்க!!
நன்றி நண்பரே
Deleteஅந்த Vishnu நா இல்ல ஜெயம்...😂😂😂😂😂😂😂
ReplyDelete