அன்பே அனைத்தும் - சுஜித்தா


வாழ்க்கை இன்னும்
     அழகாகும் கொஞ்சம் அன்பு இருந்தால்.
      நேர்மறை எண்ணங்களில் தொடங்கிய நம் இதழ் பயணம் இன்று அழகான வாழ்க்கையில் வந்துநிற்கிறது.நாட்கள் அவ்வளவு வேகமாக நம்மை நகர்த்துக்கொண்டிருக்கிறது.நேர்மறை  மட்டும் யோசித்து நம் குறிக்கோளை அடைந்துவிட்டால் நமக்கு வாழ்க்கையில் சந்தோசம் கிடைத்துவிடுமா என்றால் நிச்சயமாக கிடையாது .நம் மனம் எல்லா சூழ்நிலையிலும் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே.நம் மனம் என்றும் எதிர்பார்ப்பது பிறரின் அன்பை மட்டுமே.நாம் சந்தோசமாக இருக்கும்போது அதை பகிர்ந்துகொள்ள ஒரு அன்பான உள்ளம் .நாம் கஷ்டத்தில் இருக்கும்போது அந்த கஷ்டத்தை யாராலும் சரிசெய்ய முடியாது என்பது நமக்கே தெரியும் இருந்தாலும் நமக்கு அன்பானவர்கள் வந்து நான் இருக்கிறேன் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லும்போது நம் கஷ்டம் சரியானது போல ஒரு உணர்வு.கடைசிவரைக்கும் நம் உள்ளம் எதிர்பார்ப்பது அன்பு மட்டுமே.அந்த அன்புக்காக ஏங்கிகிடக்கும் நாம் அந்த அன்பை பிறரிடம் காட்ட மறந்துவிடுகிறோம் என்பது என்றும் எவராலும் மறுக்கப்படாத உண்மை.அன்பு என்பது இவர் நமக்கு தெரிந்தவர் இவர் நமக்கு உதவி செய்வார் என்ற எண்ணத்தில் நாம் யார்மீதும் காட்டப்படுவதில்லை.இறைவனால் படைக்கப்பட்ட இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது.அதேபோல இறைவனால் படைக்கப்பட்ட அத்துனை பிறவிகள் மீதும் பாரபட்சம் இல்லாமல் அன்பு செலுத்தப்பட வேண்டும்.ஒருவரிடம் நாம் வெறுக்க வேண்டியது அவருடைய தீமையான குணங்களையே அன்றி அந்த மனிதரை அல்ல.கரைப்பவர் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல எல்லோரிடமும் அன்பு செலுத்தினால் நிச்சயமாக எல்லோரும் நம் மீதும் அன்பு செலுத்தவர் என்பதும் மறுக்கப்படாத உண்மை.


அன்பு செலுத்தினால்
   அழகாவது நீங்கள்மட்டுமல்ல
   உங்கள் பெற்றோர்களும் கூடத்தான்
    அன்பு செலுத்தினால் மற்றவர்களும்
    நமக்குரியவர்கள் ஆவார்கள்
     அன்பு ஆனவத்தை குறைக்கும்
     அழகுக்கு அழகு சேர்க்கும்
  தங்களின் அன்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...அதுவரை உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்வது உங்களின் நான்...



Comments

Post a Comment