காற்று, நிலம், நீர் மூன்றும்
கடவுள் கொடுத்த வரம் நமக்கு
இவையால் இனிதாய் இத்தனையாண்டும்
உலகில் உயிர்கள் நிலைத்திருக்கு
நிலத்தை பங்குபோட்டு விட்டோம்
நீரினை உறையிட்டு விற்றோம்
காற்றுக்கு கலங்கம் இல்லையன்றா
காட்டினை கடுந்தீக்கு இரையாக்கிவிட்டோம்
உலகின் நுரையீரல் தீயால்
உருக்குலைந்து கருகுகிறதே
விஞ்ஞான வளர்ச்சி நோயால்
வாழுங்காலம் சுருங்குகிறதே
ஆக்சிசன் அள்ளித்தரும் அமேசானை
அழித்து எதற்கடா விவசாயம் ?
மொத்த உயிர்களை ஓழித்துவிட்டு
நாம்மட்டும் வாழ்வதில் என்னநியாயம் ?
பசுமை யனைத்தும் சுரண்டிவிட்டோம்
பச்சை
ஆடை கலட்டிவிட்டோம்
சாம்பல் ஆடை அணித்துவிட்டோம்
சாவுக்கு மணி அடித்துவிட்டோம்
இயற்கைமீது அழிவை திணிக்க
யார் கொடுத்தது அதிகாரங்கள்
மரங்களுக்கு கால் முளைத்துவிட்டால்
மிஞ்சிருக்காது மனித தடயங்கள்
நிலம் இல்லாவிடில்
செவ்வாயில் குடியேறிடலாம்
நீர் தீர்ந்துவிடில்
நிலவில் தஞ்சமடையலாம்
காற்று காலியாகிவிட்டால்
தாயின் கருப்பையில்
அடைபுகுவோமோ ?
Comments
Post a Comment