நிலம் அதிகம் உள்ளவர்கள் மேல்தட்டு
மக்களாகவும், நிலம் இல்லாதவர்கள் கீழ்த்தட்டு மக்களாகவும் உள்ளனர்.கீழ்த்தட்டு மக்களான
தாழ்த்தப்பட்ட மக்கள் களைஎடுத்தல், பயிர் நடுதல், விளைநிலங்களை அறுவடை செய்தல், இல்லையென்றால்
நிலக்காவலாளிகளாகவும் வேலை செய்கின்றனர்.அவர்களுக்கான ஊதியமும் நிலையாக கிடைப்பதில்லை.இல்லையென்றால்
தினக்கூளிகளாக வேலை செய்கின்றனர்.நிலம் உள்ளவர்கள் குடியானவர்களாகவும், நிலம் இல்லாதவர்கள்
தாழ்த்தப்பட்ட மக்களாகவும் இருக்கின்றனர்.சேரிவாழ் மக்கள் அதிகமாக குடிசைகளிலும்,வாழ
வீடு இல்லாமல் தெருக்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.இந்தியாவிலுள்ள மடங்களையும், புனித
தளங்களையும் கணக்கிட்டு மக்களுக்கு பிரித்துக் கொடுத்தாலே இந்த பிரச்சினை தீர்ந்து
விடும்.பல்வேறு மன்னராட்சி காலத்தில் இருந்து நிலம் அவகரிப்பு செய்யப்பட்டது.ஆனால்
அந்த நிலமீட்புக்கு அரசாங்கம் இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுவரையில்
தேசிய தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் துணைத்தலைவர்
தான் 60 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளார்.அந்த 60 ஏக்கரும் கோவை மற்றும் திருப்பூரில் தான்
மீட்கப்பட்டுள்ளது.இவை அனைத்தும் பஞ்சமி நிலங்களே.அனைவருக்கும் கழிவறை என்று சட்டம்
கொண்டு வரப்பட்டது அதை விட அடுத்து வாழ வீடுதேவை அதற்கான நடவடிக்கைகள் எடுத்தால் நன்றாக
இருக்கும்.உணவு,உடை, இருப்பிடம் இந்த மூன்றும் இருந்தால் மக்கள் தங்களை பார்த்துக்கொள்வார்கள்.
Comments
Post a Comment