இராவணா - அவிரதன் பேரானந்தம்



  
     இராவணன் என்று பெயர் சொன்னாலே சிலர் அரக்கன்,அசுரன்,பிறர் மனைவியை கவர்ந்து வந்தவன், பத்து தலை கொண்டவன் என்று பலர் பல விதமாய் அவர் அவர்கு  ஏற்றார் போல் கூறுவர்.
ஆம் இராவணன் கதையிலும் அவ்வாறே நதந்தது.
வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை  தழுவி தமிழில் கம்பர் கம்பராமாயணம் எழுதினார் என்பது நமக்கு தெரிந்தவை.மொத்தம் 300 இராமாயணம் உள்ளது என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்காது.ஒருவர் ஒரு நூலை  தழுவி மற்ற நூலை எழுதினால்  அதை தனக்கு ஏற்றவாறு சற்றே கூட்டியும் குறைத்தும் எழுதுவார்கள்.இராவணன் கதையில் முன்னூறு பேர் எழுதியுள்ளனர் அவன் கதி என்ன ஆகும்.இராவணன் என்ற தமிழ் சொல்லுக்கு அழகு நிறைந்த அல்லது எழில் உள்ளவன் என்று  பொருள் படும் ,இதுவே வடமொழியில் ராவன்  என்ற சொல்லுக்கு அழுகுரல் என்று பொருள் படும் .யாராவது தான் ஈன்ற குழந்தைக்கு இப்படி ஒரு கோரமாக பெயர் சூட்டுவார்களா?.
 இவ்வாறு பலர் பல விதமாய் சித்தரிக்க அனைவர் மனதிலும் அசுரனாய் தென்படுகிறான்.



        சரி அதெல்லாம் ஒரு புறம் இருக்க இராவணன் யார் என்று புரிந்து கொள்வோம்.நிஜமாகவே இராவணனுக்கு பத்து தலை உள்ளதா?
    எந்த குழந்தையும் பத்து தலைகளுடன் பிறக்காது.ஏன் பத்து தலை கொண்டவன் என்று கூறினார்கள்?
     இராவணன் பத்து துறைகளில் சிறந்தவன் அல்லது பத்து பேரின் திறனுக்கு இணையாக நிற்பவன் இதுவே காலப்போக்கில் பத்து தலை கொண்டவன் என்றானது. அதனாலேயே  பத்து தலைகளுடன் அசுர தோற்றத்துடன் சித்தரிக்கபடிகிரான்.     
  இராவணன் அரசியல்,மனோதத்துவம் ,மந்திரம்,ஜோதிடம்,வானவியல்,இலக்கியம்,தந்திரம்,இசை,அறிவியல்,
அனைத்திற்கும் மேலாக மருத்துவம் போன்ற பத்து துறைகளின் சிறந்தவன்.
          இராவணன் வழங்கிய மருத்துவத்தை இரண்டாக பிரிக்கலாம். நம் நடைமுறையில் பயன் படுத்துபவை,மற்றொன்று சித்த மருத்துவம்.
இராவண குமார தந்தரா என்னும் மருத்துவ முறையை மக்கள் பயன்படுத்துகின்றனர்.அதாவது இதை கண்டுபிடித்தவர் இராவணன்,குமாரா என்றால் குழந்தை .இது முற்றிலும் குழந்தைகளுக்கான மருத்துவ முறை.
டேவிட் கோர்டன் ஒயிட் என்பவர் (The Al chemical Body sidha tradition in India)  எழுதிய  படைப்பில் 11 அம் நூற்றாண்டில் குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான நோய் தாக்கியதாகவும்.பல குழந்தைகள் இதனால் இறந்து போயினர்.இதற்கு எந்த மருத்துவமும் அதை குணப்படுத்த முடியவில்ல. வட இந்தியாவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ராவணா குமாரா தந்த்ரா என்னும் நூலில் அந்த நோய்க்கு மருந்து தயாரித்து தந்ததாக கூறுகிறார்.இது இராவணன் வழங்கிய ஒரு மருத்துவ முறை ஆகும்.
 இந்த ராவணா குமாரா தந்ரா என்னும் படைப்பு இராவணன் மண்டோதரி இடம் நடத்தும் உரையாடல் போல் உள்ளது. அதில் குழந்தை கருவில் இருக்கும் போதும் அல்லது பிறந்து குறிப்பிட்ட காலம் வரை வரும்  நோய்களுக்கு உண்டான மருத்துவத்தை இராவணன் கூறியதாகவும் உள்ளது. இவ்வாறு இராவணன் கூறியதாக பல படைப்புகள் உள்ளன மனித உடலில் உள்ள நரம்புகள் பற்றி நாடிப்பரிக்ஷா,நாடிவிஜனா என்னும் நூல்களில் ஒவ்வொரு நரம்பு பற்றி கூறியுள்ளார்.
        அரக்க சாஸ்திரம் என்னும் நூலில் வேர்கள் பற்றி அதாவது எந்த நோய்க்கு எந்த வேர் மருந்தாகும் என்பது .அந்த காலத்தில் ஆயிரம் பேரைக் கொன்றவன் அறை வயித்தியன் என்பார்கள். அது ஆயிரம் பேரைக் கொன்றவன் அல்ல ஆயிரம் வேரைக் கொண்டவன் அறை வாயித்தியன் அது காலப்போக்கில் கொன்றவன் என மாறியது. 
           இராவணன் நாம் எப்போதும் உண்ணும் உணவுகளில் சில பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார். அதை நம் அப்படியே சாப்பிட முடியாத சில பொருள்கள். இஞ்சிபூண்டு,மிளகு,சீரகம் இது நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவுகளில் இருக்க வேண்டும் என்கிறார். அவர் கூறியதை நாம் இன்றும் பின் பற்றி வருகிறோம் .
        இது எவ்வாறு இராவணன் கூறியது என்று சிலர் கேட்கலாம்.அதை அவர் எப்போது கூறினார் என்றால் . இராமாயண போரில் அவர் சாவதற்கு முன்பு அவர் ஆண்ட இலங்கை மக்களிடம் நான் என்றாவது உங்களை காண வருவேன் அப்போது நீங்கள் எனக்கு படைக்கும் உணவில் இந்த பொருள்கள் இல்லையென்றால் நான் உங்களிடம் கொபித்துகொள்வேன் என்கிறார்.இராவணன் கூறிய சித்த மருத்துவத்தில் 110க்கும் மேற்பட்ட நோய்களுக்கு மருத்துவ முறை உள்ளது என்று கூறுவர்.
            இதெல்லாம் ஒரு புறம் இருக்க இராவணன் மாற்றான் மனைவியை கவர்ந்தவன் தானே என்பவர் உண்டு.சமண மதத்தின் சங்கதாசன் என்பர் எழுதிய இராமாயணத்தில் இராவணனும் பத்து தலையோடும் பிறக்கவில்லை,அனுமனும் மலையை தூக்கி பறக்கவில்லை  அனைவரும் சாதாரண மனிதர்களாகவே சித்தரிக்க படுகிறார்கள். சங்கதசன் கூறிய இராமாயணத்தில்
சீதை ராவணனின் மகள் என்று கூறுகிறார்.இராவணன் தான் தன் தந்தை என்று சீதைக்கு தெரியாததாகவும் குறிப்பிட்டுள்ளார். என்ன செய்வது 300 பேர் கையில் அகப்பட்ட இராவணன் அல்லவா பாவம் இன்றும் நமது நோய்களுக்கு மருந்தாகி நம் மனதில் அசுரனாகி பாவபடுகிறான் இராவணன்.


                                                  

Comments