காதலா ..? மோதலா...?...- நவீன தமிழச்சி சாரா



         இவளின் சிந்தனையில் அவனுக்குத் தோன்றிய ஒரு காதல் கவிதை...💝
         
கண்ணுக்குள் இருக்கும்  காவேரி போல காத்திருக்கும் பொண்ணே ,
பக்கம் ஓடிவாடி என் கண்ணே ,
நான் காத்து காத்து நின்னு மனசு வாடி போச்சு ஏங்கி ,
என்னை வாட்டுவதேனோ பாங்கி  ,

பெய்யும் மழையில மின்னலைப் போல முகத்தை நீயும் காட்டி ,
என் உசுர கொஞ்சம் வாட்டி ,
நான் செத்து செத்துப் பிழைக்க
நீயும் போகுரியே நில்லு ,
என்னை கொள்ளுவதேனும் சொல்லு ,

நுன் வாசலில் வளஞ்சி நெலிஞ்சி
கோலம் போட்டு பழக ,
அத்தான் ரசிக்க அந்த அழக,
உன் கொலுசு சத்தம்
 குளுங்க குளுங்க ஏங்குதடி நெஞ்சு ,
வந்து நீயும் என்னை கொஞ்சு,

என் மாமன் வீட்டு மயிலே நீயும் மாறிப் போகலாமா ,
என்னை வாட்டி வதக்கலாமா ,
நான் கொஞ்ச கொஞ்ச வஞ்சி நீயும் மிஞ்சி போகலாமா ,
மனச போட்டு மிதிக்கலாமா ..?

நீ காலு மேல காலப் போட்டு அலஞ்ச தண்ணீ மேல ,
என் மனசு பதிஞ்சதால ,
நான் ஓட்டப் போட்ட ஓடம்போல ஆடுறேன்டி சாலம் ,
நம்ம கூடுவது எந்தக் காலம்.....?      💞

    இவனின் இந்த கவிதைக்கு அவளின் எதிர்வினை என்ன.....?❣


     - பயணம் தொடரும் 🙏🙏🙏...


Comments

Post a Comment