லவ் யூ டாடி - செசாந்த் அகமொழியன்


Love you #daddy💙💙
அவர் பெயர் செல்வம்.....
முதலில் ஆவின் பாலகத்திற்கு பால் ஏற்றுமதி செய்யும் பொருப்பில் இருந்தார். உள்ளூரிலேயே வேலை சொந்தங்களின் இடையே நன் மதிப்பு. போதுமான வருமானம் அழகிய குடும்பம் நிம்மதியான வாழ்க்கை. விதி யாருக்காகவும் விதிகளை மாற்றிக்கொள்வது இல்லை, இவருடைய வாழ்க்கையிலும் விதி விளையாட ஆரம்பித்தது. அவர் தந்தை அ.பழனிமுத்து கவுண்டரின் மரணம்.(கர்வத்தினால் சாதியை சொல்லவில்லை, அவருடைய கவுரவத்திற்காக சொல்கிறேன்). சொத்து பிரிக்கப்பட்டது உடன் கடன் பொறுப்பும் பிரிக்கப்பட்டது, யார் மேல் தவறு என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது சொந்தங்களுக்கிடையேயும் பிரிவு வந்தது. பத்து வயது கூட நிரம்பாத தன் பிள்ளையை தாய்வழி தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு தொழில் நகரமான திருப்பூருக்கு தன் மனைவியுடன் சென்றார். தன் பிள்ளை, தன் மாடுகள், தன் காடு, தன் வீடு,தன் சொந்தம் என்று அனைத்தையும் விட்டுச் சென்றார். பின் பனியன் தொழிற்சாலையில் இரவு பகல் என்று வேலை செய்தார், பின் ஜமாய் ஐஸ்கிரீம் கம்பெனியில் டிஸ்ட்ரிபியூட் வேலை செய்தார். பின் மகனை பார்த்துக்கொள்ள ஆல் இல்லாத சூழ்நிலையில் சொந்த ஊர் திரும்பினார். வேலையில்லை வீடுயில்லை, பின் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். எந்த வேலை என்றாலும் பரவாயில்லை என்று தேடி அழைந்தார், ஒரு வேலை கிடைத்தது மரியாதையாக சொல்லவேண்டும் என்றால் செக்கியூரிட்டி, சாதாரனமாக சொன்னால் வாட்ச்மேன். உடல் வேலை இல்லை என்றாலும், மனஅழுத்தம் உண்டாகும் வேலையாகும். பின் அவ்வேலையையும் கைவிட நேர்ந்தது. பின் தன் மாமனார் காட்டிலேயே பருத்தி சாகுபடி செய்தார். மறுபடியும் பணக்கஷ்டம், வேலைக்காக அழைந்தார், வீட்டிற்கு பெய்ன்ட்டு அடிக்கும் கான்டிரேக்டரிடம் வேலை கிடைத்தது. மீண்டும் பல பிரச்சனைகள் தன் சொந்த ஊருக்கே திரும்பினார், வேறு ஒரு வாடகை வீடு. தன் நலத்தில் விவசாயம் செய்து கொண்டே பெய்ன்ட்டு அடிக்கும் வேலைக்கும் சென்றார். பல பிரச்சனைகளுக்கு இடையே, கடன் வாங்கி சொந்த நிலத்தில் ஒரு வீடு கட்டினார்.
8 வருடம் ஆவின் பாலகம், 2 வருடம் பனியன் கம்பெனி, 1 ஐஸ்கிரீம் கம்பெனி, 4 வருடம் செக்கியூரிட்டி, 6 வருடமாக பெய்ன்ட்டு வேலை, மொத்தமாக 21 வருடம்.
அவருக்கு ஒரே ஒரு மகன் செ.செசாந்த், வயது 21.
ஆயிரம் குறைகள் அவர் மீது இருக்கிறது,  இருந்தும் அன்போடு சொல்லுவேன் "அப்பா" என்று.


Comments