சந்திரயான் சந்திரயான் சந்திரயான்(பிரத்தியேக பதிவு)....-விஷ்ணு


சந்திரயான் சந்திரயான் சந்திரயான்!!! இப்படி ஒரு மாதம் முழுவதுமே ப்ளாஷ் நியூஸ் இது தான்அப்படி சந்திரயான் என்ன தான் பன்ன போகுது?? அதனால நமக்கு என்ன பயன்??? நம் நாட்டின் வல்லரசை நிரூபிப்பதற்கு தான் இந்த மிஷனா ன்னு ஏகப்பட்ட கேள்வி கனைகள். இதுக்கெல்லாம் பதில பாக்குறத்துக்கு முன்னாடி ஒரு எஸ்டிடிக்கு (history) போய்ட்டு வந்துருவோம்.
1945
இரண்டாம் உலகப் போருக்கு பின்பு, இருபெரும் நாடுகளுக்கிடையே ஒரு cold war துவங்கியது. Cold war பொருத்த வரை ஒருவரையொருவர் நேரடியாக தாக்க மாட்டார்கள். டெக்னாலஜி மற்றும் பொருளாதார அளவீடுகளை கொண்டு இது நடக்கும். இந்த பணிபோர் சோவியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்தது. இதை புரிந்துகொள்வதற்கு முன் 2 அளவீடுகளை பார்த்துவிட்டு வருவோம். Bomb Gap and Missile gap. இதென்ன புதுசா Bomb gap, Missile gap. Generation gap கேள்வி பட்டிருக்கோம். அதாவது, பாம்ப் கேப் னா அணு குண்டு உற்பத்தியில எந்த நாடு எந்த ரகம் வரைக்கும் போயிருக்கு, எவ்ளோ அட்வான்ஸ்டா இருக்குனு அளவீடுறது. உதாரணத்திற்கு ரஷ்யா அமெரிக்கவ விட 3 வருடம் பாம்ப் கேப்ல பின்தங்கி இருக்குனு சொல்றாங்க. அதே போல Missile gap னா அணு சோதனையை வைத்து அளவீடு பிரிப்பாங்க. இந்த கேப்ல தான், இராக்கெட் பரிசோதனை யும் ஆரமிச்சாங்க. அமெரிக்காவை விட நாங்க வல்லரசு என்பதை உலகிற்கு காட்ட இரஷ்யா முதன்முதலில் 1959 ஆம் ஆண்டு LUNA 2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது. அதை தொடர்ந்து LUNA 9 என்ற விண்கலத்தையும் 1966 ஆம் ஆண்டு அனுப்பியது. இதை பார்த்தும் 🔥 பற்றி எறிந்த அமெரிக்கா , எல்லாவற்றிற்கும் ஒருபடி மேலே போய் நிலவிற்கு மனிதர்களையே அனுப்பி வைத்தது. அது தான் இன்றுவரைக்கும் மனிதகுலத்தின் மைல்கல்லாக கருதுகின்ற APOLLO 11 MISSION. அதன் பிறகு நிறைய நாடுகள் தம் பலத்தை நிரூபிக்க நிறைய விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பின. அந்த வகையில் தான் இந்தியா 2008ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் 22 ஆம் நாளன்று தனது முதல் நிலவு பயனத்தை ஆரம்பித்தது. அதை செயல்படுத்தி வெற்றியும் கண்டது. அது தான் சந்திரயான் 1 . சந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதை வெற்றிகரமாக கண்டுபிடித்தது. அது எப்படி கண்டுபிடித்தது என்பதை அடுத்த இதழ்ல பார்ப்போம். இப்போ அந்த சிட்டியோட குட்டிய பற்றி பார்ப்போம். CHANDRAYAAN 2. இது ஒன்னும் புதிதா கண்டு பிடிக்கப்பட்ட ராக்கெட் லாம் இல்ல. சந்திரயான் 1 ஓட மேம்படுத்தப்பட்ட ஒரு செயலி தான் இந்த சந்திரயான் 2. Version 2.0 upgraded.
இந்த சந்திரயான் 2 இதுவரைக்கும் யாருமே போகாத நிலவோட தென் துருவத்திற்கு சென்று ஆராய்ச்சி பன்னப்போகுது.
இந்த சந்திரயான் 2 மூனு காம்போனன்ட்ஸ் (Components) இருக்கு, Orbiter – Lander – Rover . சந்திரயான் 1 வெறும் Orbiter மட்டும் தான் வச்சிருந்தாங்க. இந்த சந்திரயான் 2 பற்றி விரிவா அடுத்த இதழ்ல பாக்குறத்துக்கு முன்னாடி ஒரு டீசர் விட்டரேன். இந்த சந்திரயான் 2 , orbiter நிலவுக்கு மேல சுத்த விட்டு, lander நிலவோட தென் துருவத்தில இறக்கி, அந்த lander இருந்து ஒரு ரிமோட் கார் மாதிரி 6 சக்கர வாகனமான rover வெளிய வந்து ஆராய்ச்சி பன்ன ஆரம்பிக்கும்.
இதையெல்லாம் எப்படி பன்னுதுனு அடுத்த வாரம் பார்போம்.




Comments

  1. சிட்டியோட குட்டி 😂
    Informative and interesting writing..

    ReplyDelete

Post a Comment