வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் - சுஜித்தா


"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும் "
    என்ற கண்ணதாசனின் வரிகளோடு என் உரையை தொடங்குகிறேன் வாசகர்களே.ஆயிரம் நேர்மறை எண்ணங்கள் தோன்றினாலும் நம் மனதில்   தோன்றும் ஒரு எதிர்மறை எண்ணத்தை நோக்கியே நம் மனம் தேடி  அலைகிறது..தப்பிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் திறக்க  முடியாத ஓரு கதவையே நம் கைகள் திரும்ப திரும்ப தட்டுகின்றது.நேர்மறை எண்ணங்களை நம் மனம் நம்பி அதன் வழியே நடக்க நான் ஒரு யோசனை சொல்கிறேன்.ஈர்ப்பு விதி.ஆங்கிலத்தில் இதை attraction law என்பார்கள்.நாம் எதை அதிகமாக நம் மனதில் நினைக்கிறோமோ அதே விஷயமே நம் வாழ்வில் நடக்கிறது.  ,அது நல்லதோ கெட்டதோ. இதற்கு எடுத்துக்காட்டாக நம் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம்.சிறுவயதில் நம் பள்ளி சென்று விட்டுவந்த களைப்பில் அப்பா chocolate வாங்கிகொண்டு வரமாட்டர்களா என வாசலையே எதிர்பார்த்த நாட்கள் அப்பா அந்த  chocolate  ஐ அன்றே வாங்கிவந்ததும் நம் வாழ்விலும் நிகழ்ந்தது அல்லவா.அதே போலத்தான் நமக்கு தெரியாமலே நம் மனது அதிகமாக நினைக்கும் ஒரு நிகழ்வு நம் வாழ்வில் நடக்கறது.இன்னும் சொல்லப்போனால் நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுமே என்றோ நம் மனதில் அதிகமாக நினைக்கப்பட்ட நிகழ்வுகளே என்பது மறுக்கமுடியாத உண்மை.சற்று பின்னோக்கி உங்கள் வாழ்விலும் இதுபோல நடந்திருக்காத என்று யோசித்து பார்த்தால் நிச்சயம் நடந்திருக்கும் .இதுவரை நமக்கு ஈர்ப்பு விதியை பற்றி தெரியாது நம் வாழ்வில் எதேதோ நடந்துவிட்டது .சரிவிடுங்கள் .இப்போது புரிந்துவிட்டது.நாம் நினைத்ததுதான் நம் வாழ்வில் நடக்கபோகிறது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ...ஆனால் அந்த ஈர்ப்பு விதியிலும் ஒரு சூட்சமம் ஒளிந்துகொண்டிருக்கிறது.இந்த விதி நாம் மனதில் நினைக்கும் விஷயங்களின் subject  ஐ புரிந்துகொண்டு அதுபடியே நடக்கும்.எ.கா..நான் தேர்வில்  fail  ஆகிவிடக்கூடாது என்று அதிகமுறை மனதில் நினைக்கிறேன் இங்கு subject  என்பது fail ஈர்ப்பு விதியின்படி நான் fail ஆகிவிடுகிறேன்.நான் தேர்ச்சி அடைவேன் என்று அதிகமுறை என் மனதில் நினைக்கிறேன் அந்த விதியின்படி subject தேர்ச்சி அதனால் நானும் தேர்ச்சி அடைகிறேன்.அதிக மதிப்பென்னும் பெறுகிறேன்.ஈர்ப்பு விதியின்படி நினைத்த எல்லா விஷயங்களும் நடக்க என் வாழ்த்துக்கள்
  "வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை" வாசகர்களே உங்கள் வாழ்வு வண்ணமயமாக இறைவனை வேண்டிக்கொண்டு என் உரையை முடிக்கிறேன் வாசகர்களே அதுவரை உங்களிடமிருத்து விடைபெற்றுக்கொள்வது உங்களின் நான்.


Comments

Post a Comment