கானா பாட்டு - செல்வேந்திரன்


           தெருக்களிலும்,கடைக்கோடிகளிலும் தங்களின் பசியை மறந்து அனைவரின் மனதையும் சந்தோசப்படுத்துவதற்கு ஏற்ப பாடும் இசைதான் கானா.ஊரும் சேரியும் போல, தெருவும் காலணியும் போல கர்நாடக இசையும் கானா இசையும் ஏற்றத்தாழ்வு பார்க்கும் விதத்தில் தான் உள்ளது.கர்நாடக இசைக்கச்சேரிகளில் கானா இசைக்கலைஞர்களை இசைஅரங்கின் உள்ளே அனுமதிப்பதில்லை.கர்நாடக இசைக்கலைஞர்களைப் பொருத்தவரையில் கானா என்பது இழிவான இசையாகவும், இறந்தவர்களின் மயான ஊர்வலத்தில் பாடும் இசையாகவும் இருக்கின்றன.இதையெல்லாம் கானா இசைக்கலைஞர்கள் தவிர்த்து தங்களுக்கான மேடையும், மிடுக்கான உடையும் அணிந்து பாரம்பரிய இசையான கானாவை பாடினால் அதையும் சர்ச்சையாக்குகின்றனர் கர்நாடக இசைக்கலைஞர்கள்.இசை என்பது பொதுவானது.இசையில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் மனிதர்களடத்தில் இசைஞானம் எப்படி இருக்கும்.ஒப்பாரி பாடல் அதில் உள்ள கருத்துக்களும், வார்த்தையின் அர்த்தங்களும் எந்த மனிதருக்கும் புரிவதில்லை.தெருக்கூத்து நாடகங்களில் பாடும் இசையும், அதில் நடிக்கும் கலைஞர்களும் போற்றப்படவேண்டியவர்கள்.ஆனால் இங்கு சினிமா நடிகர்களும்,நடிகைகளும்தான் போற்றப்படுகின்றனர்.தெருக்கூத்து நாடகங்களிலிருந்து சினிமா வந்தது என்று கூறுகின்றனர்.ஆனால் எத்தனைபேர் நடிகர்களுக்கு கொடுக்கும் பாராட்டையும், மரியாதையும் தெருக்கூத்து நாடக நடிகர்களுக்கு நாம் தருகின்றோம்.ஏற்றத்தாழ்வு என்றால் சாதி,மதம் மட்டும்தானா.அனைத்திலும் ஏற்றத்தாழ்வு உள்ள சமூகமாகத்தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.கானா 90களில் இசையமைப்பாளர் தேவா என்பவரின் மூலமாக சினிமாக்களில் பாடப்பட்டு அனைத்து இசைக்கும் சமமான முறையில் அர்த்தமளிக்கப்பட்டது.அதன்பின் சில வருடங்களில் கானா முற்றிலும் மறைய ஆரம்பித்தது.சில வருடங்களுக்கு பின்னர் அறிமுக இயக்குனர் பா.ரஞ்சித் தனது அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலமாக கானா இசையை கானா பாலா மூலமாக அறிமுகப்படுத்தினார்.கானா இசைக்கலைஞர்களுக்கு தனிமேடை அமைத்து இசையிலும் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை வெளிப்படையாக உரக்கச் சொன்னார்.தங்களுடைய உரிமைகளை பேசும்பொழுதுதான் அது சர்ச்சையாகிறது.அதுபோலத்தான் இசையிலும் சாதி புகுத்துகிறாரா பா.ரஞ்சித் என்ற விவாதம் வெடிக்கத்தொடங்கியது.தங்களுடைய உரிமைகளை விவாதத்தின் மூலமாகத்தான் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் , நான் விவாதத்திற்கு தயார் என்ற நிலையை ஏற்படுத்தினார்.பின்னர் கானா அனைத்து சினிமாக்களிலும், இசைக்கச்சேரிகளிலும் முதன்மையாக்கப்பட்டது.கானா வளர்ச்சி பெற ஆரம்பித்தது.கானா கலைஞர்களும் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் முன்னேறத்தொடங்கினார்கள்.உலகில் அனைத்தும் சமம், அனைவரும் சமம் என்ற கூற்றுடன்  முடிக்கிறேன்



Comments

  1. இன்னும் நன்றாக எழுது ...
    எழுத்தும் ... வாசிப்பும் என்றும் இணைந்தே இருக்கட்டும்

    ReplyDelete

Post a Comment