அன்று அவனை அடைந்து....
"ஏன் மூஞ்சிய இப்படி வெச்சிருக்க???"
"நீ கொடுத்தது காணாம போயிருச்சு??"
"அதுக்கு ஏன் அழற...??"
"யாரோ எடுத்துட்டு போயிட்டாங்க..."
"ஓகே, ஒன்னும் பிரச்சினை இல்ல...நீ முதல
சரி ஆயிட்டு வீட்டுக்கு போ..."
என்று இருவரும் உரையாடி விட்டு அவளை அனுப்பி வைத்தான்.
அவனும் தன்னுடைய மிதிவண்டியில்... ஏனோ நினைவில்...
செல்ல!!
டயர் சரசரவென மண் சாலையில் மிதந்து செல்கிறது...
தென்றல் தெளிந்து இதமாக வீசியது...
அந்த கால்வாய் வழி செல்லும் நீரின் சலசலப்பு...
கதிரவனின் கடை நேரம் அது...
சென்றடைந்தான் வீட்டிற்கு...
"என்ன பண்ணலாம்...??"
"நாளைக்கே தரனும் ....ஆனா எப்படி??"
"ய்யோ.... ஒன்னும் தோன மாட்டேங்குது!!!"
"ஆ.... ஐடியா..."
என கேள்விகளை தனக்குள்ளே எழுப்பி கொண்டவன்....
சட்டென்று,
தன் மேசையின் டிராவை திறந்தான்.
வெள்ளைத் தாளொன்று எடுத்தான்.
பென்சில் ஒன்று எடுத்து தொடங்கினான்.
முடிவில்...
அழகிய முகம் கொண்ட ஒர் அழகிய ஓவியம்!!!
விடிந்ததும்... விரைந்தான் பள்ளி நோக்கி...
அவள் வரும் முன்பிருந்தே ஆனந்தமாய் காத்திருந்தான்.
அவள் வந்தாள்....
"ஹலோ, மேடம்... வணக்கம்", என்றான்.
"ஆ... சொல்லுடா..." என்றாள் அவன் முகம்
காணாது.
"இங்க என்னைய பாரு லூசு ..." என்று
அவன் அழைக்க...
கவலை கணம் கொண்ட அவள் முகம்....
"ஏன் இப்படியே இருக்க... நான் தா அது லா
ஒன்னும் இல்லே னு சொன்னேன் ல..."
"இந்தா..." , என்று தான் வரைந்த ஓவியத்தை
நீட்டினான்.
"ஹே...என்னடா...இது..."
"அய்யோ...சத்தியமா எதிர்பாக்கல டா..."
"தேங்க்ஸ்.... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்
"
என மகிழ்ச்சியில் வார்த்தைகள் கொட்டிவிட்டு விரைந்து
விட்டாள் அதை அணைத்தபடி....
இவனும் மனமகிழோடு தன் வகுப்பைச் சேர்ந்தான்.
நாட்கள் ஓடின.... விரைந்து வந்தது அவர்களின் இறுதி
தேர்வு...
நால்வரும் ஒன்றாகவே படித்து...
தேர்வுகளை முடித்து...
விடுமுறை தான் என்று எண்ணிய போது...
"நாளை மறுநாள் முதல் உங்களுக்கு சிறப்பு
வகுப்புகள் தொடங்கப்படும்" , என்ற அறிவிப்பு பள்ளி முதல்வரிடம் இருந்து...
ஆம்... அவர்கள் இப்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பில்
அடிவைக்கிறார்கள்...
......புர்புர்புர்..... காலையில் சத்தம் வர....
அவன் மனைவி வந்து ...
"ஏங்க ...எந்திருங்க!!!"
"பாப்பா...குளிச்சாச்சு... நான் குளிக்க
போறேன்"
"சீக்கிரம் கிளம்புங்க...வெளிய போகனும் ல",
என்று மெத்தையில் மதமதனு அரைக்கண் விழித்த நிலையில் உள்ள அவனிடம் கூறினாள்.
அவனும் கிளம்பினான்... அவளும் கிளம்பினாள்...
பாப்பாவும் ரெடி...
மூவரும் காருல ஏறி கிளம்பினார்கள்...
பாப்பா வழக்கம் போல் குறும்புகளை செய்ய தொடங்கினாள்...
அந்த பாட்டுப்பெட்டியை அழுத்தினாள்...
பாட்டும் வந்தது... மீண்டும் அழுத்தினாள்...
பாட்டும் நின்றது... மீண்டும் அழுத்தினாள்...
பாட்டும் வந்தது....கூடவே அவனின் குரலும் வந்தது....
"அம்மு...அதுலா நோன்ட கூடாது..."
"சரி டா....இங்க பாரு...அப்பா உனக்கு கதை
சொல்லுவனாம்.... நீயும் கேட்டுடே...வருவியாம்..."
என்று உறக்கத்தில் மறைந்த தன் பள்ளி சிறப்பு வகுப்பின்
நாட்களை ஆர்வமாய் ஆரம்பித்தான்....
......அந்த ஒரு நாள் விடுமுறை கழிந்து....
அனைவரும் பள்ளி வந்தார்கள்... அனைவரிடமும் சற்று
சோகம் இருந்தாலும் நண்பர்கள் கூட்டம் அதை மறைத்தது.
நிசப்தம் நிறைந்த நிலை....
காற்றும் கதை பேசியது ....
மணி ஓசை மங்கியே கிடந்தது...
இலைகளும் மரம் விட்டு மண் கிடந்தது...
யாரும் இல்லா வெறிச்சோடி கிடந்த பள்ளிக்கு இவர்களே
ஆதரவாக வருகை தந்தார்கள்.
ஒவ்வொருவரும் வந்தமர்ந்து வகுப்பறை நிரம்பியது.
காக்கைகள் கரைக்கும் இசைச் சத்தங்களின் உடன் அவர்களின்
ஆரவாரமும்...
நால்வரும் ஒன்றாகவே அமர்ந்திருந்தார்கள். ஆனால்
மனம் ஏனோ சிந்தனையில்....
"அவ வர மாட்டாலா....ச்சே அவளுக்கும் ஸ்கூல்
வெச்சிருக்கலாம்...."
"இன்னும் ஒரு மாசம் ஆகுமா...."
"ஹய்யோ.... ச்சே...மிஸ் பண்றேன் டா.. அவள..."
"ஏன்டா ... ஃபீல் பண்றீங்க.... அவ என்ன நம்மல
விட்டுட்டா போயிட்டா..."
என்ற உரையாடல்களின் முடிவில்...
மனம்
ஏக்கம் நிறைந்ததாய்...
அவன் அவளின் நினைவுகளோடு!!!
அருமை
ReplyDelete