அன்று மதிய உணவு வேளையில்...
அவனும் அவளும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தொடங்கினார்கள்.
"டேய், என்ன டா கொண்டு வந்த? "
"இன்னைக்கு புளிக்குழம்பும் ரசமும் எடுத்து
வந்திருக்க!!!"
"சரி, எனக்கு ரெண்டையும் குடு"
"அப்பறம், எனக்கு...???"
"என்னோடது தரேன் டா..."
என்றபடி உரையாடிக் கொண்டு உணவை பகிர்ந்து சிரித்துக்
கொண்டே சாப்பிட்டார்கள்.
முடிந்து திரும்பிய அவனிடம்... அவனது நண்பர்கள்
இவனிடம் கோவித்துக் கொண்டார்கள்.
"டேய், நீ ஒன்னும் எங்க கூட லா பேச வேண்டா..."
, என்றான் ஒருவன்.
"உனக்கு புதுசா வந்த அவ பெருசா போயிட்டால???"
, என்றான் இன்னொருவன்.
"ஆமா, பா அவருக்கு நாம லா சும்மா தான்டா"
, என்றான் மற்றொருவன்.
"டேய், ஏங்க டா இப்படி லா பேசுறீங்க...நீங்க
லா எப்படியோ அப்படியே தான் அவளும்... நான் அப்படி தான் பாக்கற...உங்களையும் அவ அப்படித்
தான் பாக்கறா...நீங்க தான்டா சீன் போடுறீங்க..." , என்று சத்தமா பேசிட்டு வந்துட்டான்.
........"சத்தமா அந்த டிவி-ய போடாதீங்க னு
சொல்லிட்டு தான வந்த னு " ,பாதி தூங்கிய நிலையில் வந்து நின்றாள் அவன் மனைவி.
"ஏங்க! ஏங்ககக!!! ஏங்கககககக!!!!! "
, சத்தமாய் அவளின் வாயில் இருந்து வர....
நினைவில் மூழ்கி இருந்த அவன்...
"ஹான், சொல்லுமா..." என்றான் ஹஸ்கி
வாய்ஸ்-ல்.
"உங்கள டிவி போடாம போய் தூங்க தான சொன்னேன்..."
"போங்க போய் படுங்க..." , என்றாள்
.
தூக்கத்தில் கலை ஆடிய கண்களை தேய்த்தபடியே....
"சாரி மா...அசந்து தூங்கிட்டேன்....பாப்பா தூங்கிடாலா???" , என்றான்.
"தூங்கிட்டு தா இருக்கா... டிஸ்டர்ப் பண்ணாம
போய் படுங்க...", என்றாள் அவள்.
மெத்தை மேலே படுத்தவனுக்கு உறக்கம் கண்ணில் வரவில்லை...
புரண்டு புரண்டு படுத்தும் நேரம் போனதே தவிர தூக்கம் இல்லை.முடியாமல் குப்பரக்க படுத்தவனுக்கு....
நினைவில் வந்ததோ... அன்று சத்தமாக பேசி விட்டு சென்றவன் அன்று முழுதும் அவர்களுடன்
பேசவே இல்லை.
மறுநாள் பள்ளி வந்ததும்...
"டேய், ரொம்ப பண்ணாத டா"
"ம்ம்ம்க்கும், இவரு பெரிய ஆளு கோவிச்சுகிட்டாரு..."
"எங்களையும் அவட்ட அறிமுகம் பண்ணி வைத்தால்
நல்லா இருக்கும்ம்ம்ம்ம்ம்", மூவரும் முறையிட்டனர்.
"இத்தன நாளா தோனல?", என்றான்.
"ஆமாண்டா....அதா இப்ப கேக்குரோம் ல
"
"கூட்டிட்டு போ டா"
"ஆமா டா... வாடா...போலாம்", என்று அவர்கள்
அவனை இழுத்தனர்.
"சரி டா..... கூட்டிட்டு போறேன்....விடுங்கடா...",
என்று கூறிவிட்டு... நால்வரும் அவளோடு சேர்ந்து உணவு உண்ண சென்றார்கள்.
சிறப்பான நாளாக அமைந்தது அன்று...
அன்று முதல் நால்வர் அணி ஐவர் கூட்டணி ஆக அமைந்தது.
"டேய், நம்ம கேங்-க்கு ஒரு பேர் வெக்கலாமா?",
என்றாள்.
"என்ன வெக்கலா?", என்றான்.
ஐவரும் தீவிரமாக யோசித்தார்கள்.
"ஆ... நான் சொல்லட்டா?", என்றாள் அவளே.
"ம்ம்...சொல்லு, சொல்லு...", என்றார்கள்
நால்வரும்.
"ரெடி, ஒன்...டூ..... த்ரீ...நம்ம கேங் பேரு
இன்னைல இருந்து 'பைவ் ஸ்டார்' என்றே அழைக்கப்படும்", என்றாள் ஆனந்தமாய்.
இப்படியே....அவர்கள் ஐவரின் நாட்கள் கலகலப்பாகவும்
சிறப்பாகவும் மட்டும் அல்லாமல் வேகமாகவும் நகர்ந்தது. அவளுக்கு பிறந்தநாள் வரவிருக்கிறது.
"என்ன பண்றது?"
"ஏதாச்சும் கிஃப்ட் வாங்கலாமா?"
"அவளுக்கு என்ன புடிக்கும்?"
"நாமலே.... நம்ம கையால ஒன்னு செஞ்சு தந்தா...
நல்லா இருக்கும் ல..."
என்று மனதில் நினைத்து ஓடிய வினாக்கள் அவனுள்.
ஒரு மாவிலை எடுத்தான். அதை ஒரு புத்தகத்தில் வைத்தான்.
சுமார் ஒரு மூன்று நாட்கள் வைத்து எடுத்தான். அந்த ஒரு இலை நல்லா காய்ந்து இருந்தது.
ஒரு ப்ளேடு எடுத்தான். அதை வைத்து அவ்விலையில் செதுக்கி ஒரு வடிவம் வரவைத்தான். அதுவென்னவோ?
'ஹேப்பி பர்த்டே' என்று அந்த இலையில் ...
அதை ஒரு அட்டையில் ஒட்டி, அதற்கு அருகில் ஒரு
ஆர்ட் டயாகிரம் வரைந்தான். அழகாக ஒரு கிஃப்ட் ரெடி பண்ணி வைத்துவிட்டான்.
இன்று...
அவள் பிறந்தநாள்...
தான் படைத்த கைக்கலையை அவள் கை சேர்த்திட ஏங்கியே
நின்றிருந்தான்.
"ஹே....விஸ் யூ மெனி மோர் ஹேப்பி பர்த்டே
டி அன்ட் ஆல்சோ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி...", என்றான் ஆனந்தக்களிப்பில்...
"தேங்க் யூ சோ மச் டா..."
"என்ன டா வெறும் விஸ் மட்டும் தானா???",
என்றாள்.
"அது எப்படி முடியும்.... உனக்கு கிஃப்ட்
இல்லாமயா...."
"நானே என் கையால செஞ்சு எடுத்துட்டு வந்திருக்க...",
என்று கூறி அவனோட கிஃப்ட்-ஐ கொடுத்தான்.
வாங்கி அப்பவே பிரிச்சு பார்த்த அவள்...
"ஹே.... சூப்பர் டா...அழகா இருக்கு... இதுவரைக்கும்
இந்த மாதிரி கிஃப்ட் எனக்கு யாருமே தந்தது இல்ல..."
"எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு...'
"ஐ அம் வெரி ஹேப்பி பை யூ டா...", என்று
அதை நெஞ்சோடு அணைத்தபடி ஓடினாள் வகுப்பிற்கு...
மாலை நேரம்.... அவன் யோகா கிளாஸ் ல இருக்கான்.
அவள் அங்கிருந்து அவனை சைகையால் கூப்பிட்டாள். கிளாஸ் முடிய போது வரேன் இரு-னு சைகை
காட்டினான்.
கிளாஸ் முடிந்தது....
Comments
Post a Comment