நம் உடல் ஆரோக்கியம் பற்றிய பல கேள்விகள் நம் மனதில் தினம் தினம் தோன்றுகின்றன. அதற்கு பிள்ளையார் சுழி போட்டு விடையை ஆரம்பித்து வைப்பது வேளாண்மையே. வேளாண்மையில் பயன்படுத்தும் உரங்களும் பூச்சிகொல்லி மருந்துகள் மட்டுமே நம் ஆரோக்கியத்தை கெடுத்துவிட்டன என்று சொல்லிவிட முடியாது. பாரம்பரிய மரபு ரகங்கள் அழிந்துவிட்டது, மண்ணின் வளம் கெட்டு விட்டது, தினம் தினம் பலவிதமான நோய்கள் தோன்றுகின்றன இதற்கெல்லாம் பசுமைப்புரட்சிதான் காரணம் என்று பசுமைப்பிரட்சி மீது பழி போடும் நம்மில் எத்தனை பேர் அழிந்துவரும் மரபு ரகங்களையும் வேளாண்மையையும் காப்பாற்ற முயற்சி எடுத்துள்ளோம்? முதலில் அந்த முயற்சியை எடுப்போம். அதன் வழிகளை பின்னர் கூறுகிறேன். இன்றைய மக்கள் தொகைக்கு இயற்கை வேளாண்மையால் சோறுபோட முடியுமா என்பது கேள்வி குறியே. ஆனால் அங்கக வேளாண்மையால் முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. அது என்ன அங்கக வேளாண்மை? அதனைப்பற்றிதான் இந்த கட்டுரை முழுவதும் பார்க்கப்போகிறோம். பொதுவாக நாம் ஒரு இலக்கை அடைய பல வழிகள் இருக்கும். அதனால் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நம் இலக்கை அடைவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். அது போலவே நம் வேளாண்மை முறையின் மூலம் சுற்றுச்சூழலுக்கோ மற்ற உயிரினங்களுக்கோ எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் உணவு பொருட்கள் உற்பத்தி செய்வதே அங்கக வேளாண்மை ஆகும். ரசாயன வேளாண்மையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு சரியான எடுத்துக்காட்டு தற்போது தெருவுக்கு தெரு காணப்படும் கருத்தரிப்பு மையங்கள். இருபது வருடங்களுக்கு முன்புவரை "நாம் இருவர் நமக்கு இருவர்" என்று அனைத்து இடங்களிலும் எழுதப்பட்டிருக்கும். இது எழுதப்பட்டிருந்த சுவர்களிலும் பேருந்துகளிலும் தற்போது கருத்தரிப்பு மையங்களின் விளம்பர பதாகைகளே....
நாம் பூச்சிகளுக்கு அடிக்கும் பூச்சி மருந்துகள் பூச்சிகளை மட்டுமல்லாது நம் தலைமுறையையும் சாவடிக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புவேறு ஒரு பக்கம். இதனை எல்லாம் சமாளிக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழியே அங்கக வேளாண்மை ஆகும். இயற்கை வேளாண்மை என்பது நிலத்திற்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சாகுபடி செய்வது. இதற்கு உழுதலோ, இயற்கை உரங்களோ, பூச்சி விரட்டியோ தெளிக்க கூடாது. விதை விதைத்தல் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால் அங்கக வேளாண்மை என்பது அப்படியல்ல. நிலத்தை உழலாம், பலதானிய விதைப்பு, நுண்ணுயிர் உரங்கள், பூச்சி விரட்டிகள், பசுந்தாள் உரங்கள், இயற்கை முறை நோய் மற்றும் பூச்சி மேலாண்மை என்று நீண்டு கொண்டே போகிறது அங்கக வேளாண்மை முறை.
நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது உழவுத்தொழில். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நஞ்சில்லாத உணவு உற்பத்தியை பெருக்குவதிலும் நம் விவசாயிகளுக்கு பெரும் பங்கு உண்டு. ரசாயன உரங்களையும் பூச்சிமருந்துகளையும் பயன்படுத்தியதன் விளைவு தற்போது மண்ணில் அங்கக பொருட்கள் அளவு மிகவும் குறைந்துவிட்டது. இதனை நிவர்த்தி செய்து மண் வளம் பாதுகாக்கவும், மண்ணில் உள்ள சத்துக்கள் பயிருக்கு கிடைக்கவும், மண்ணில் அங்கக பொருட்களின் சதவீதத்தை அதிகரிக்கவும், நஞ்சில்லாத உணவை மக்களுக்கு வழங்கவும் அங்கக வேளாண்மைக்கு மாறுவது மிகவும் அவசியமானதாகும்.
முற்றும்

அருமையான கட்டுரை அண்ணா..
ReplyDeleteஇயற்கை விவசாய ஆர்வலர் 👌
ReplyDeleteVery Nice👍
ReplyDelete