நாள் தள்ளி போனபோது நானூறு கனவு கண்டா,
அது நடக்காதுன்னப்போ நார் நாரா நஞ்சுப்புட்டா...
தத்தெடுக்க ஆசை பட்டு,
வெளிய வந்தா வீட்ட விட்டு,
பிள்ளைய தத்தெடுத்தா, பிஞ்சுப்பூ நெஞ்சுக்காரி,
சந்தோசம் பொங்குதடி செவ்வந்தி பூ மாரி,
உச்சி வெயில் நேரத்துல,
ஊதக்காத்து வீசயில..
ஊருமக்க ஓடிப்போயி ஊட்டுக்குள்ள அடங்கயில,
யாரு அது போகுறது? உடம்பு என்ன ஆகுறது?
கூட ஒன்னு இடப்பக்கம்
குழந்தை ஒன்னு வலப்பக்கம்...
சுமந்து கொண்டு போறவளே, சூடு உன்னை தாக்கலயோ?
அம்மாவுன்னு புள்ள சொல்ல, சொல்லின் அர்த்தம் புரிஞ்சிகிட்டு...
தான் புள்ள நலனுக்காக சீலபோர்த்தி நிழல் கொடுத்தா..
புள்ளையோட பிஞ்சு முகம்
பார்த்தபடி அவ நடந்தா...
பச்ச ஒடம்புக்காரியெனு பாக்க ஒரு நாதி இல்ல...
வறுமையில வாழ்ந்தாலும், வயல் வேலை செஞ்சாலும்...
தான் புள்ள பசிதீர்த்து, பட்டினியில் அவ இருந்தா..
கூழு வித்து பொழச்சாலும் கூவி கூவி அழைச்சாலும்...
கூட்டம் பெருசா சேரலயே... காசு பெருசா தேரலையே...
சிறுக சிறுக சேத்துவச்சி சின்ன குடிசை கட்டிக்கிட்டு...
புள்ள, சத்துணவு சாப்பிடும்னு பள்ளிக்கூடம் அனுப்பிவச்சா...
தன் பசிய பாக்காம சோறூட்டி வளத்த புள்ள..
வளந்து ஆளாகி வேளைக்கி தான் போயிடுச்சு...
வெளிநாட்டு மோகத்துல வீட்ட விட்டு பறந்துடுச்சி...
புது புது உறவு தேடி, பெத்தவள மறந்துடுச்சி...
புள்ள முகம் பாக்காம ஏக்கத்துல இறந்துடுச்சி...,
மூச்சி முடிஞ்சிடுச்சி, முடிவின்றி தூங்கிடுச்சி,
கொள்ளி வைக்க வந்த புள்ள,
கோ........னு அழுதப்போ,
முந்தானை கொண்டு முகம் தொடைக்க கை வரல,
சொல்லி அழுத புள்ள, சோகம் தீர்க்க முடியலனு,
எரியும் நேரத்திலும் எந்திரிக்க ஏங்கிடுச்சி,
கரைச்ச சாம்பலுல கரையாம கரை வந்து, மறுபடி காத்திருக்கு மகன் வந்து பாப்பான்னு..!

அருமை
ReplyDelete❤
ReplyDelete