தங்கமயிலுக்கு தகப்பனின் மடல் - இவன் அ சரத்குமார்

சித்திரம் பேசுமடி என் செல்ல மயிலே  நின் சீனிச்சிரிப்பினி தந்திரம் வேனுமடி என் தங்க மயிலே தப்பிப் பிழைக்க இன்னல் சூழ் இவ்வுலகிலே பத்திரம் தேவையடி என் செல்ல மயிலே இந்த இன்னல் நிறை உலகத்திலே நின் மழலை வாய்மொழி கண்டு மகளே நான் மயங்கி தான் போனேனடி என்னை அடக்கி ஆளத்தானோ உன் அம்மா உன்னை பெண் பிள்ளையாய் பெற்றாளோ தன் பிறப்பின் அருமையை கூட அறியா இவன் நின் பிறப்பின் அருமையை உணர்ந்தான் செவிலி உன்னை நீட்டி பெற்றுக் கொண்ட முதல் தருணம் உன் அன்னையோ அப்போது மயக்கத்தின் பிடியில் நானும் ஒரு புறம் தயக்கத்தின் பிடியில் என் மனம் பட்ட வேதனையடி மகளே என் கடவுள் அன்றி எவரும் அறியார்.நின் அலறல் சத்தம் கேட்டு .கண்ணாடி துணி விளக்கி  எட்டி பார்த்தேன் நின் உடன் இருந்து நீ கூட்டும் அழுகையை ஆசுவாசப் படுத்திய போது கூட வராத உடல் அயற்சி .. நின் முகம் காணா இந்நாட்களில் தான் அதிகம் உணர்ந்தேன்
நித்தமும் நின் நினைப்பு தான் என் தங்கமே நித்திரை கூட நிம்மதி இல்லை என் தங்கமே



 உன் அப்பன் இருக்கிறானடி என் மகளே ! எள்ளளவும் ஐயமில்லை அன்பு மகளே                   எதையும் சாதிக்கலாமடி என் மகளே ....நீ கோட்டையை கோட்டையை பிடிக்ககூட கூட வருவேனடி அன்பு மகளே
பெண் பிள்ளைகள் என்றுமே அழகு தான்..நீ கொழுசு பூட்டி நடக்கும் வேளையில் நின் பாதம் படும் சுவடுகளின் சத்தம் கேட்டு மகிழ்வேனடி என் தங்க மயிலே........

Comments

Post a Comment