மூன்றாம் உலகப்போர் - செல்லமுத்து

"தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த சகத்தினை அழித்திடுவோம்".
                          _ பாரதி
மனிதன் விவசாயத்தை மறைமுகமாக தாக்குகிறான் என்று கூறியிருந்த நாம் தற்போது நேரடியாகவே தாக்குவதை பார்க்கிறோம். விவசாயம் என்றில்லாமல் அதில் நம் வாழ்க்கையே அடங்கும்.
கோடை வேளையில், நாம் அனைவரும் குளிர்ச்சியை விரும்புவோம். அதற்காக குளிர்சாதன பெட்டி (fridge), குளிர்விப்பான் (A/C), வீட்டில் இருக்க வேண்டியது அவசியம் என்று எண்ணுவோம்.ஆனால் அதிலிருந்து வெளியேறும் Chloroflurocarbon(CFC), Hydrochloroflurocarbon(HCFC), மிகவும் கொடுமையானது.
சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதா கதிர்கள் (UV rays) நேரடியாக நம் உடலில் படுமானால் புற்றுநோய் உண்டாக்கக்கூடும். இதை தடுப்பதற்காக இயற்கையால் படைக்கப்பட்ட பிராண வாயுவின் ஒரு வகை (Ozone layer) படலம் உள்ளது. ஆனால் CFC, HCFC பிராண வாயு படலத்தில் துளையிட்டு UV கதிர்கள் நேரடியாக பூமியில் விழும் வாய்ப்பினை உருவாக்குகிறது. அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து ஏரி, குளம், ஆறுகள் வறட்சியை சந்திக்கின்றன. மழை பெறும் வாய்ப்பினையும் தடுக்கின்றன.
இதனால் உணவுகளுக்கும் பாதிப்பு உண்டு. முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது, அதில் சால்மோனெல்லா (Salmonella) என்ற நோய்காரணி வளரும். இதன் பாதிப்பு அழுகிய முட்டையை உண்பதற்கு சமமாகும்.
சில நேரங்களில் CFC/HCFC உயிரையும் பறிக்கும் அபாயம் உள்ளது. மகிழுந்துகளில் (Car) செல்லும்போது A/C அளவை அதிகரித்தால் CFC/HCFC அளவு அதிகமாகி மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்ற கொடூரங்கள் நிகழலாம்.
குளிர்சாதன பெட்டி இல்லாமல் உணவு வீணாகும் என்றால் ?... நீங்கள் ஒரு புள்ளிவிவரத்தை அறிய வேண்டும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) அறிக்கையின்படி தெற்காசிய (South Asia) மற்றும் கிழக்காசிய (East Asia) நாடுகளில் உணவில்லாமல் இறக்கும் நிலை அதிகமாக உள்ளது. இதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பரிதாபம் என்னவென்றால் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 2000-ல் 30% ஆகவும் 2017-ல் 52% ஆகவும் உணவில்லாமல் இறந்திருக்கின்றனர்.
"பல தன்னார்வ நிறுவனங்கள் உங்கள் வீட்டில் உணவு மீதமானால் சொல்லுங்கள், நாங்களே எடுத்துகொள்கிறோம்" என்று செயல்பட்டு வருகின்றனர். உணவு வீணாக கூடாது என்று நினைக்கும் உள்ளங்கள் இதனை செய்யலாம்.



இதற்கும் மூன்றாம் உலகப் போர்க்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால், இந்தியாவில் 2000-ல் 60% இருந்த விவசாயம், தற்போது 20% ஆக குறைந்துள்ளது. அதனால் உணவு உற்பத்தியில் ரசாயண உணவு உற்பத்தி அதிகரித்து கொண்டே இருக்கும். அதனை சாப்பிடும்போது உடல்நலம் மாற்றம் ஏற்படும். பெரும்பாலும் இயற்கை உணவை சாப்பிட சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் 20% விவசாயத்தை வைத்துக்கொண்டு அனைவருக்கும் இயற்கை உணவு என்பது சாத்தியமில்லை. அவ்வாறே உற்பத்தி செய்தாலும் உணவு தட்டுப்பாடு (Demand) அதிகமாகும். உணவின் விலை உயரும். அதனால் சமமின்மை (Inequality) காரணமாக உணவுக்காக பெரும் நாடுகளுக்கிடையே போர் மூண்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
தண்ணீரால் உயிர் வாழலாம் என்று நினைக்கும் அறிவாளிகள் Day Zero என்று Capetown-ல் நடந்த நிகழ்வினை யோசிக்க வேண்டும். இந்நிலையே 2018-ல் பெங்களுரிலும் Day Zero உருவானது. நெருங்கிக்கொண்டே வரும் இந்நிலை நமது வீட்டு வாசலையும் எட்டக்கூடும் நாள் வெகுதொலைவில் இல்லை.
அனைத்திற்கும் முடிந்த ஒரே தீர்வு...
"விவசாயம் காப்போம்"

Comments

  1. தன்னலம் குறிக்கோளான
    தரித்திர மனிதர்களால்
    பூலோக விவசாயமிங்கே
    பாதாளம் நுழையிது

    விஞ்ஞான வளர்சியென்ற
    வியாபார நுணுக்கத்தால்
    விண்வெளி ஓசோனிங்கே
    விரக்தியில் விலகுது

    ஒன்றைமட்டும் சொல்கிறே
    உள்ளத்தில் எழுதிகொள்
    விவசாயம் இல்லாமல்
    விடியாது இனிபகல்

    ReplyDelete

Post a Comment