திக்...திக்...திக்...-நவீன தமிழச்சி சாரா


       
          அங்கு பாட்டி சென்று பார்த்தபோது ராதிகா தனது பள்ளித்தோழனுடன் மரக்கிளையில் அமர்ந்து கொண்டு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள் . கோபத்துடன் அருகில் வந்த பாட்டி , அடியேய் ராதிகா...............என்னடி இது ?.. . அபச்சாரம்...அபச்சாரம்...கண்டவாளோடு என்னடி அரட்ட வேண்டிகெடக்கு.....?
     திடீரென்று பாட்டியின் குரலைக் கேட்டதும் ராதிகா மரத்திலிருந்து தொப்பென்று கீழே குதித்தாள் . அவள் அருகில் சென்ற பாட்டி காதை திருகியவாறு இழுத்து சென்றபடியே ....என்னடி உனக்கு ஆம்பள பையனோட பேச்சு வேண்டி கெடக்கு..... என பாட்டி அவளைத் திட்டித்தீர்த்தாள். சிறிது நேரம் கழித்து பாட்டி அவளுக்கு அறிவுரைக் கூறினாள் .
         பிறகு வழக்கம் போல் ராதிகா படிப்பில் தனது ஆர்வத்தைக் காட்ட தொடங்கினாள் . பனிரெண்டாம் வகுப்பின் அரசு தேர்விலும் ராதிகா மாவட்ட அளவில் அதே முதலிடம் பிடித்தாள் . அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள் . வீட்டில் மேற்படிப்பிற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துக்கொண்டிருந்தது.  ராதிகாவிற்கு மருத்துவராக பணிபுரிய   வேண்டும் என்பது அவளது சிறுவயது கனவாகவும் ஆசையாகவும் இருந்தது . ஆனால் குடும்பத்தின் சில கட்டாய காரணத்தினால் ராதிகா , தனது கனவினை மனதோடும் மண்ணோடும் புதைத்துவிட்டாள் .
   மனதில் ஒரு போராட்டம் ...........
"பீடி வாங்க காசு இல்லை ,
பென்சு வண்டி யோசனையா "
   என்று மனம் சொன்னவுடன் மறந்தேன் உடனே இறந்நேன் ...
      என சில வரிகள் ......

ஐந்து நாட்களுக்கு பிறகு , தங்கம்பாட்டி ராதிகாவை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து படிக்குமாறு கூறினாள் . ராதிகாவும் பாட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க அதே படிப்பை படித்து வந்தாள் . இப்படியே நாட்கள் கடந்தன . ராதிகாவின் படிப்பும் முடிவடைந்தது. இதிலும் ராதிகா நல்ல மதிப்பெண்களுடன் வெளியேறினாள். படித்து முடித்தவுடன் ராதிகா பள்ளி மாணவர்களுக்கு சாயங்கால நேரத்தில் தனது வீட்டிலேயே டியூசன் எடுத்துக் கொண்டிருந்தாள். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராதிகாவின் தாயார் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது சொந்த ஊரான மதுராந்தகத்திற்கே வந்துவிட்டாள். ஆறேழு மாதங்கள் கடந்து ராதிகாவிற்கு கண்டாச்சிபுரம் என்னும் ஒரு ஊரில் அரசு உத்தியோகம் கிடைத்தது. அனைவரும் மற்றற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ராதிகா மகிழ்ச்சியுடனும்  மனதிருப்தியுடனும் அப்பள்ளியில் பணிபுரிய தொடங்கினாள்.  ராதிகா பள்ளிக்கு தினமும் பேருந்தில் சென்று வருவதையே வழக்கமாக கொண்டிருந்தாள்.

   தற்போது கதையின் முக்கிய கட்டம்....
    கதாநயகன் அறிமுகம்  ..
"யாரைத் தேடுகிறீர்கள்..........?"
  "பேருந்தில் உள்ள கதாநாயகனையா..........?"



உங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக..........அந்த பேருந்தில் உள்ள நடத்துனரே கதாநயகன்...
 சுவாரசியம் என்னவென்றால் நடத்துனர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.

எக்காரணத்தை கொண்டும் ஆண்களிடம் பேசக் கூடாது என்பது பாட்டியின் அறிவுரை ... ராதிகாவிற்கு பாட்டியின் அறிவுரை ஒருபக்கம்... பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்பது மறுபக்கம். ஆனால் என்ன செய்வது "விதி செய்த சதி". வேறு வழியின்றி முகத்தை சுழித்தபடியே...ராதிகா பயணச்சீட்டு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். இப்படியே ஒரு மாதம் கடந்தது.
     ஒருநாள்.....
 எப்பொழுதும் வழக்கமாக பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் அப்பேருந்து அன்று மட்டும் நிற்காமல் சற்று தூரம் கடந்து சென்று நின்றது. அந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டியது வேறு யாருமில்லை....ராதிகா தான்.இதை கண்டதும் ராதிகாவின் முகமோ சிவப்பு மிளகாய் வெடித்தது போல் சிவந்தது...
  இதைப் பார்த்த நடத்துனரின் முகமோ மகிழ்ச்சியில் மலர்ந்தது..



   இனிவர போகும் காலங்களில் இவர்களுக்குள் நடக்கப்போவது என்ன.......?
     காதலா ....??மோதலா......???
                       
                   - பயணம் தொடரும்   🙏🙏🙏.

Comments

Post a Comment