வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தர சாதாரன குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா அம்மாவின் செல்ல மகன், தவறே செய்தாலும் கோபத்தை சட்டென்று காட்டிவிட மாட்டார்கள். அவர்கள் படிப்பறிவு இல்லாமல் நவீன உலகத்தோடு பெரிதும் தொடர்பு இல்லாதவர்கள். அதனால் அவன் எதை செய்தாலும் சரிதான் என்று நம்புவார்கள். எனினும் அவன் முற்போக்கான சிந்தனைகளைப் பற்றி எடுத்துக் கூறினாலும், அதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை மகனிடம் மறுக்கவும் முடியவில்லை.
நெடுநாளாக விடுமுறைக்கு வீட்டுக்கு வாராமல் இருந்தவன் வந்திருந்தான். இரவு 8 மணியாகிவிட்டது, சாப்பாடு கூட சாப்பிடாமல் பயணத்தின் அசதியால் அப்படியே படுத்துவிட்டான், அவனை சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தவும் இல்லை. காலையில் வழக்கம்போல அவனை எழுப்ப சுப்பிரபாரதத்தைப் போட்டுவிட்டார்கள். கண்ணை சுழித்துக்கொண்டு எழுந்தாலும் காப்பியை குடித்துவிட்டு, அவன் மாடு கன்றுகளை பிடித்துகட்டி அவன் வேலையைச் செய்தான். அவன் வீட்டிற்கு வந்தாலே, மற்றவர்களுக்கு வேலை பழு குறைந்துவிடும். நீண்ட நாட்கள் கழித்து வேப்ப மரத்தடியில் கயித்து கட்டிலிலே படுத்து உறங்கினான். மாலையில் வழக்கம் போல வேலைகளைச் செய்துவிட்டு, அம்மாவிடும் திட்டுவாங்கி கொண்டே சாப்பாடு கூட சாப்பிடாமல் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டு இருந்தான். சட்டென்று தொலைப்பேசியை பிடுங்கிவிட்டு சாப்பாட்டு தட்டை நீட்டினார்கள் "ஏன் மா இப்படி பன்னுற?", என்று கத்தி கொண்டே சாப்பிட்டான். அம்மாவிடம் இருந்த தொலைப்பேசி சப்தமிட்டதும் " யாரு மா?", என்று கேட்டான். "சத்தியா னு போட்டு இருக்குடா", என்று கூறிக்கொண்டு அவனிடம் தந்தார்கள். "ஹலோ, சொல்லு சத்யா, ................, இப்போ எங்க இருக்க?", என்று கேட்டபடியே சாப்பிடாமல் எழுந்தான். "பிரண்டு தான் மா, பஸ் ஸ்டாண்டு வரைக்கும் போய்ட்டுவரன்", என்று சொல்லிவிட்டு அவசரமாக கிளம்பி பைக்கில் புறப்பட்டான். அவன் வீட்டில் இருந்து 20நிமிடம் தான், அதற்குள் மூன்று முறை போன் அடித்து விட்டது. உண்மையில் என்னவென்று கூட அவனுக்கு தெரியாது, பஸ் ஸ்டாண்டுக்கு வர முடியுமா? என்று கேட்டவுடன் கிளம்பிவிட்டான். பஸ் ஸ்டாண்டில் சத்யாவை தேடித்கொண்டே போன் பன்னினான். அதற்குள் ஒரு குரல் "டேய் தேவ்", என்று அழைத்தது. சட்டென்று திரும்பிப் பார்த்தால், சேரும் சகதியுமாய் சத்யா. தேவ்வுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சத்யாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான். சத்யாவை பார்த்ததும் தேவ்வுடைய அம்மாவின் மனதில் "யார்? என்னாச்சி?",என்ற கேள்விக்கு பதில் தேடியது. அதற்குள் "சத்யா முதல்ல போய் குளிச்சிட்டு வா" என்றான் தேவ். சத்யா குளித்துவிட்டு வருவதற்குள் தேவ் கடைக்குச் சென்று கொத்து பரோட்டாவும், ஒரு கப் பிளாக் பாரஸ்ட் ஐஸ்கிரீமும் வாங்கி வந்தான். "இரவு 9 மணி ஆச்சி, இப்போ எதுக்குடா ஐஸ்கிரீம்?" என்று அவனிடம் கேட்டதற்கு, "சத்யாவிற்கு பிடிக்கும் மா, இந்த ஐஸ்கிரீம் சாப்ட்டாலாம் ஒன்னும் ஆகாது மா", என்றான். சத்யா குளித்துவிட்டு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, "சத்யா உங்க வீட்ல சொல்லிட்டன் பொறுமையா போலாம், நல்லா சாப்பிடு", என்றான். சாப்பிட்ட பின்னர் இருவரும் புறப்பட்டார்கள். தேவ்வுடைய அம்மாவிற்கு இரவு நேரத்தில் அனுப்பவும் மனதில்லை, சத்யாவை தங்கும்படி நிர்பந்திக்கவும் வாய் வரவில்லை. "பத்திரமா போய் வீட்லவிட்டுட்டு, பத்திரமா சீக்கரமா வா" என்று சொல்லி அனுப்பினார்கள்.
சத்யா யார்? ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால் சத்யா என்ற பெயரை பார்த்ததும் பெண்ணாக இருக்குமோ? என்றும், சத்யாவை பார்த்ததும் தோழியா? காதலியா? என்ற கேள்விகளுக்கு பதிலாக, யாராக இருந்தாலும் இருவரும் நண்பர்கள் என்ற எண்ணமும் நம்பிக்கையும் மேலோங்கி இருந்ததால், மற்ற கேள்விகள் உதிக்காமலே போய்விட்டது.
Comments
Post a Comment