"ஒவ்வொருவருக்கும் வரலாறு என்பது உண்டு. நம் அதற்கு கொடுக்கும் முக்கித்துவம் பொறுத்து தான் அது பேசப்படும் அளவானது அமையும்".
Hungaryயில் 1910இல் பிறந்தார். இவர் 1910-1976 வரை வாழ்ந்தார். இதற்கு இடைப்பட்ட காலம் தான் இவருக்கான தனி ஒரு வரலாறு பதியப்பட்டது. காரணம் அதற்காக அவரின் உழைப்பு மட்டுமல்ல, அவரின் வயதையும் வாழ்வையும் சேர்த்தே அர்ப்பணித்தார். இவர் வளர்ந்த பிறகு Hungary இராணுவத்தில் வீரராக பணிபுரிந்தார். துப்பாக்கி சுடுதலில் இவருக்கு மிக ஆர்வம் என்பதால் பல பயிற்சிகளுக்கு பிறகு தலைசிறந்த வலக்கை துப்பாக்கி சுடுவீரர் ஆனார். பல இராணுவ பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்று துப்பாக்கி சுடுதலில் பிரசித்தி பெற்றார். பல தேசிய விளையாட்டுகளில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கங்களை வென்றார். இதன் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றார்.
ஆனால் 1939ல் நடைபெற்ற இராணுவ பயிற்சி முகாமில் ஏற்பட்ட விபத்தில் இவரின் வலக்கையில் நான்கைந்து எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. ஆனால் இவரின் ஒரே ஆசை என்னவென்றால் ஒலிம்பிக்கில் தங்கம் பெற வேண்டும். உலகின் தலைச்சிறந்த துப்பாக்கி சுடுவீரராக ஆக வேண்டும் என்பதே. இப்பொழுதே அவை எல்லவற்றிற்கும் முற்றுப்புள்ளியாக அமைந்தது இந்த விபத்து. மனமுடைந்த இவர் எந்நிலையிலும் தன் இலட்சியத்தை விட்டுவிடக்கூடாது என ஒரு மாத மருத்துவ சிகிச்சைக்கு பின் மீண்டும் இடக்கையில் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சிகளை மேற்க்கொண்டார். தற்போது இவருக்கு வயது 28. அடுத்ததாக 1940ல் நடைபெற இருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற விடாமுயற்சியோடு பயிற்சி பெற்றார். ஆனால் 1940ல் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டியானது இரண்டாம் உலகப்போர் காரணமாய் ரத்து செய்யப்பட்டது. சற்றும் மனம் தளராத இவர் 1944ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கிற்கு பயிற்சியினை மேற்கொண்டார். ஆனால் அதுவும் ரத்து செய்யப்பட்டது. காரணம் இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரை நடைபெற்றது.
வயதும் கடந்து கொண்டே சென்றது. ஆகிலும் சற்றும் மனம் தளராத இவர் தன் இலட்சியத்தின் மீது கொண்ட காதலின் காரணமாய் 1948 ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சியை மேற்க்கொண்டார். 1948 ஒலிம்பிக்கின் போது இவருக்கு வயது 38. 1948 ஒலிம்பிக்கில் கலந்துககொள்ள சென்ற இவரிடம் அங்கு பங்கு பெற வந்த இளம் வீரர்கள் "எங்களை வாழ்த்த வந்தீர்களா?" என ஏளனமாய் சிரித்தனார். அதற்கு அவர் "வாழ்த்த அல்ல , உங்களை வீழ்த்தி பதக்கம் வெல்ல வந்திருக்கிறேன்!" என்றார். அதே போல் அவர் தங்கம் வென்றார்.
ஏளனம் செய்த வீரர்கள் அவரிடம் வந்து "தேவையான அளவு கற்று வைத்துள்ளீர்கள்" என வாழ்த்தினர். ஆகிலும் அவருடைய தாகம் அதிகரித்ததேயன்றி, குறையவில்லை. 1952 ஒலிம்பிக்கிலும் கலந்துக்கொண்டு தங்கம் வென்றார். அப்பொழுது வந்த இளம்வீரர்கள் "நீங்கள் தேவைக்கு அதிகமாய் கற்றுக்கொண்டுவிட்டீர்கள், இப்பொழுது எங்களுக்கு கற்று கொடுங்கள்" என வாழ்த்தினார்கள். தொடர்ந்து 2 தங்கப் பதக்கங்களை வென்ற பெருமை பெற்றார். மேலும் உலகின் தலைசிறந்த வீரர் என பாராட்ட பெற்றார். இவர் 1976 ல் இயற்கை எய்தினார்.
இவர் பெயர் தான் Karoly Takacs
"முடியாத சூழ்நிலை என்பது நம் மனம் முடிவு செய்யும் வரை தான்.....
முடியும் என்று எண்ணினால் மலைகளும் இங்கே குன்றுகளாகும்.....
நன்றி.....
Comments
Post a Comment