வியர்வைத் துளி - பூமணி



     "சிறுதுளி பெருவெள்ளம்" என்பர். ஆனால் இங்கு சிறுதுளி தான் நம் உடலிற்கு நாம் பெறும் ஆரோக்கியம்.
     
"நின்பெயர் சரித்திரம் பெற....
விழுந்தாலும் மீண்டும் எழ......
உடலின்துளி தரையில் விழ.....
வெறிகொண்டு செய்க பல....."
         என என்னுடைய பகுதியைத் தொடங்குகிறேன்.
   
       நம் உடலின் அனைத்து பாகங்களையும் சீராக வைத்துக்கொள்ள சீரான உழைப்பு அவசியம். அதில் செய்யும் வேலைதான் நமக்கு அசதியைத் தரலாம். ஆனால் விளையாடும்  விளையாட்டு தான் அசதியைக் கொடுத்தாலும் அதனுடன் இன்பத்தைக் கொடுக்கும். ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் தான் பெறும் பதக்கங்கள் மட்டும் பாராட்டு அல்ல. தன்னுடைய கடின உழைப்பினால், இமயத்திலிருந்து பனிச்சறுக்குவது போலத் தன் உடலில் இருந்து சறுக்கித் தரையில் விழும் ஒவ்வொரு துளியும் பாராட்டுக்கள் தான்.
 
    ஆனால் இங்கு பல தலைச்சிறந்த வீரர்கள் அங்கீகரிக்கப்படாமல், அறியப்படாமல் இருக்கின்றன. இதற்குக் பல்வேறு அரசியல் நோக்கங்கள் தான் காரணமாய் உள்ளன.
       ஆனால் நம் கதையில் வரும் நாயகன் உலகின் தலைச்சிறந்த ஒரு துப்பாக்கி சுடு வீரன். அவர் சந்தித்த துன்பங்களையும்,நேர்ந்த சூழ்நிலைகளையும் , கடந்த பாதைகளையும் இனிவரும் அடுத்தடுத்து இதழ்களில் காண்போம்........🙏🏻

Comments

  1. அருமையான பதிவு.... 👏👏

    ReplyDelete
  2. வீணாகிபோவதில்லை
    வியர்வைதுளி ஒருபோதும்-அவை
    ஊற ஊற ஒருநாளில்
    வெற்றிகள்பல
    வந்துமோதும்

    வரலாற்றை மாற்றிடலாம்
    உழைப்பாலே மாத்திரமே
    வெற்றிகள் பெற்றிடலாம்
    வியர்துளியே சூத்திரமே

    ReplyDelete

Post a Comment