மாமேதை ஆட்சியாளர்கள்:
நாம் அனைவரும் பெரும் புண்ணியம் செய்தவர்கள் காரணம் இத்தகைய பேரறிஞர்களை ஆட்சியாளர்களாக பெற்றதற்கு. அவர்களை காண வேண்டுமா?இதோ,
=முதலில் விஞ்ஞானி, இவர் நீர்வளம் பாதுகாவலர் என்று செல்லமாக அழைப்பார்கள். 'தெர்மாகோல் கிங்' என்றால் தெரியாதவர் எவரும் இல்லை.
=அடுத்தது இவர் தமிழகத்தில் டெங்கு எப்படி பரவுகிறது என்றால் டெல்லியில் இருந்து கொசுக்கள் தொடர்வண்டி பேருந்தில் பயணித்து இங்கு வந்து நோயை பரப்புகிறது என்று வியக்கத்தக்க பதிலைக் கூறி அனைவரையும் வியப்படைய செய்தவர்.
=மற்றொருவர் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவது எப்படி என்றால் அங்குள்ள மக்கள் நிறைய சோப்பு போட்டு குளிப்பதால் வருகிறது என்று அசாதாரணமாக பதிலை பதிவிட்டவர்.
=மேலும் ஒருவர் குடிமக்கள் மீது பெரும் அக்கறை கொண்டவர். மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தினால் குடிமக்கள் குடிக்க முடியாமல் நரம்புத் தளர்ச்சி பாதிக்கப்படுவார்கள் என்று கூறிய மாமனிதர்.
=இது மட்டுமல்ல டான்சர் சிங்கர் என பல்வேறு துறையில் சாதித்த பெரும் தலைவர்கள் அமைச்சராக உள்ளார்கள். =எதிர்க்கட்சியை பார்த்தால் அவர் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேச மாட்டார் கலைஞரின் மகன் அவர் பல மொழிகளை மாற்றி புது மொழியை மொழிந்தவர், (எடுத்துக்காட்டு:யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே), அவர்தான் ஜப்பான் முதல்வர் மன்னிக்கவும் தமிழ்நாட்டின் முதல்வராக துடிப்பவர்.
நலத்திட்டங்களும் அறிக்கைகளும்
=மக்கள் 8 வழி சாலை வேண்டுமென்று தெருத்தெருவாக போராடியதும் 8 வழி சாலை இல்லை என்றால் கிணற்றில் விழுந்து விவசாயி தற்கொலைக்கு முயன்றதாக அதன் விளைவாக சேலம்-சென்னை வழியில் 8 வழி சாலை அமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் முதல்வர் கொசுps அவர்கள்.
=ஸ்டெர்லைட் ஆலை மூடி அதன் விளைவாக காப்பர் இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர் மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்துவதால், கூட்டத்தை கலைப்பதற்காக மட்டுமே போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு அவர்கள் தெரியாமல் 13 பேர் கொல்லப்பட்டனர்.
=இது மட்டுமல்லாமல் ஹைட்ரோகார்பன், கதிராமங்கலம், நெடுவாசல், கெயில் எரிவாயு குழாய் பதித்தல் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை அமல்படுத்தி உள்ளன.
= செய்ததை சொல்லி ஓட்டு கேட்க மாட்டோம் என்று மத்தியில் 'டாடி' அவர்கள் செய்ததை சொல்லி ஓட்டு கேட்டால் அது தற்பெருமை என்பது தான் காரணம், ஆனால் செய்தால்தானே சொல்வார்கள் என்று சிலர் விமர்சித்துள்ளனர். மக்களுக்கு மேலும் மேலும் பல நல்ல திட்டங்களை யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் அறிக்கை யோசிக்க நேரம் இல்லாததால் 1977 இல் வெளியிட்ட அறிக்கையை அப்படியே நகலெடுத்து 2019 இருக்கு வெளியிட்டனர். கூடுதலாக கேபிள் டிவியில் சீரியல் பார்ப்பதற்காக கட்டணம் குறைக்கப்படும் என்று தளபதி விஜய் மன்னிக்கவும் கழகத்தின் தளபதி ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். எழுதுவதற்கு ஒன்றும் இல்லை என்பதால்... மீண்டும் மன்னிக்கவும் எழுதுவதற்கு இடமில்லை என்பதால் ஓபிஸ் இபிஸ் அவர்கள் அறிக்கைகளை கூகுளில் சென்று தேடிக்கொள்ளவும்.
வாழ்க தமிழக அரசு...வளர்க இபிஸ் ஆட்சி...
இதுவரை சிரிக்க..இனி சிந்திக்க...
=நமக்கு சில இலவசங்களை கொடுத்து விட்டு தமிழ்நாட்டை கமிஷனுக்கு கார்ப்பரேட் கொடுத்துவிட்டார்கள். அனைத்தையும் இலவசமாக நம்மிடம் விலை பேசும் இவர்கள் தண்ணீரை இலவசமாக தர முடியுமா? அம்மா உணவகம் நல்லதுதான் இலையில் சாப்பிடும் இட்லி ஒரு ரூபாய், இடையில் குடிக்கும் தண்ணீர் பத்து ரூபாய்.
நியாய விலை கடையில் மாதம் இரண்டு லிட்டர் தண்ணீர் தரப்படும் என்று தேர்தல் அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சீமான் கூறுவது போல போன் பேட்டரி முழு சார்ஜில், bike full tank பெட்ரோல், கார் full tank டீசல், டிக்கியில் காலி குடங்கள் - இந்நிலை வந்து விட்டது. தொழில்நுட்பத்தால் தண்ணீரை உருவாக்க முடியாது.
ஏன் நீரைப் பற்றி மட்டும் கூறுகிறேன் என்றால் மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் அது நீருக்காக மட்டும்தான் இனியும் கவனக்குறைவாக இருந்தால் நம்மை காப்பாற்ற கடவுளாலும் முடியாது.
கேப்டவுனுக்கு தயாராகும் இதற்கு முன்பு, கேலி பொழுதுபோக்கை விட்டுவிட்டு புதியது படைக்க சித்தமாக்குவோம்.
"இளைஞர்கள் ஒன்றாவோம்
இலக்கை வென்றாவோம்"
அருமையான பதிவு அன்னா..
ReplyDeleteநன்றி 😊
Deleteபணத்தை இலக்காய்
ReplyDeleteகொண்டோரை
பதவியில் நாமும்
அமரவைத்தால்
பட்டினியில் மக்கள்
சாவதைத் தவிர
புதிதாய் நல்வழி
பிறக்காது.....
Good information .way of writing is sprrrrr
ReplyDelete