பொள்ளாச்சி - அவிரதன் பேராணந்தம்


சமீபத்தில் நாம் அனைவரையும் உலுக்கிய செய்தி என்றால் நம் நினைவுக்கு வருவது பொள்ளாச்சி நடந்த பாலியல் வன்கொடுமை தான்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக திருநாவுக்கரசு ,சதீஷ்குமார் வசந்தகுமார், சபரிராஜன் இவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த பெரும் முக்கிய புள்ளிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக பலரும் புகார் எழுப்பினர். அந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 28 முதல் சிபிஐ க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இந்த நால்வர் அல்லது பலரும் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி இருவரின் தாயாரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
    அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும், குண்டர் சட்ட விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. இது பற்றிய சரியான தகவல்கள் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்படவில்லை, எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார். வழக்கில் குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சதீஷ்குமார், சபரிராஜன்இவர்களை காப்பாற்ற பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் போலீசார் பெரும் முனைப்புக் கொண்டுள்ளனர்.
       அரபு நாடுகள் போல் இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்கப்படுகிறதோ அப்போது தான் இதற்கெல்லாம் முடிவு தோன்றும். இந்த வழக்கில் குற்றம் செய்த நால்வரை விட அவர்கள் பெற்றோர்கள் முக்கிய குற்றவாளிகள். பெற்றோர்கள் தன் குழந்தையை பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும்.

"அண்ணா" என்று அவள் அழைத்தும்...உன் தங்கை உன் நினைவுக்கு வராதது எதனாலோ...?
அவள் தெய்வமாய் போற்ற வேண்டிய நாட்டிலே...
அவளை அஞ்சி நடப்பது முறைதானோ...?



Comments

Post a Comment