நானும் கலக்டர் ஆகவேண்டும்…..-செசாந்த் அகமொழியன்


நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், பொதுத்தேர்வுக்கு ஒரு மாதகாலம் தான் இருந்தது. அனைவரின் மனதிலும் ஒருவித பதற்றம் உருவாகியிருந்தது. எப்பொழுதும் பாஸ்மார்க் மட்டுமே எதிர்பார்க்கும் மனதில், அதன் பிறகு என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வி  சற்றே ஆழமாக எழுந்தது.  எங்கள் கணக்கு ஆசிரியர் அனைவருக்கும் பிடித்தமானவர். எங்கள் அரண்ட விழிகளை கண்டு எங்களுடன் உரையாட வந்தார். பள்ளி பருவத்தை கடந்து இருக்கும் வாழ்க்கைகான சில அறிவுரைகளை சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் குறிக்கோளை பற்றி கேட்டார். 
என் நண்பன் ஒருவன் “நான் அம்பானி போல மிகப்பெரிய பணக்காரனாக வேண்டும் “, என்று கூறினான். அவன் அப்படிக் கூறியதும் அனைவரும் சிரித்தனர், கேலி பேசினார்கள். ஆனால் அவன் அப்படிக் கூறியதற்குக் காரணம், அவன் வீட்டில் யாரும் மூன்று வேலையும் நல்ல உணவு சாப்பிட இயலாதவர்கள் என்றும், வாரம் முழுவதும் கூலி வேலைக்குச் சென்றால் தான் வாழ முடியும் என்றும், பண்டிகைகளைப் கூட பக்கத்து வீட்டில் தான் பார்க்க வேண்டும் என்ற நிலமை அவனுக்கு மட்டுமே தெரியும். என் தோழி ஒருத்தி “நான் கலக்டர் ஆகவேண்டும்”, என்று கூறினால். மீண்டும் ஒரு கேளிச்சிரிப்பு, ஆனால் தாழ்ந்த சமூகம் என்ற பெயரில் ஊரில் அவள் குடும்பம் ஒதுக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதும் பார்த்ததால் அதிகாரத்தில் இருந்தால் அனைவரும் மதிப்பார்கள் என்று அவள் எண்ணியதே யாரும் அறிந்திராத உண்மை. அடுத்து என்னைக் தான் கேட்டார், என்ன கூறுவது என்று தெரியவில்லை. அவர்களைப் போல ஆடம்பரத்தையும் அதிகாரத்தையும் எதிர்பார்க்கவில்லை. என் குடும்பத்தில் எப்பொழுதும் பிரச்சனைகள் தான் அப்பாவுக்கும் அம்மாவுக்கும், அம்மாவுக்கும் பாட்டிக்கும், சித்தாப்பா பெரியப்பாவுடன் சொத்து பிரச்சனை. இதையெல்லாம் சரிசெய்ய என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே சொன்னேன்  “நானும் கலக்டர் ஆகவேண்டும்”.



Comments

  1. "அவர்களின் சிரிப்பு..உங்கள் கனவிற்கு உரமானது.." Advance வாழ்த்துக்கள் #future IAS officer...

    ReplyDelete
  2. Best wishes to become a collecter...!

    ReplyDelete
  3. Appo neenga chumma vaai warthaiku tan sonningala gopaaal ..

    ReplyDelete

Post a Comment