அம்பேத்கரின் பெண் விடுதலை - செல்வேந்திரன்


Dr.Br.அம்பேத்கர் சிறந்த ஆளுமை கொண்ட தலைவர்.சிறந்த பன்முகம் கொண்ட மானுடவியலாளர்.இத்தனையும் அறிந்த அம்பேத்கர் ஆணின் சுதந்திரத்திற்கு சமமாக பெண் ஏன் இல்லை என்று யோசிக்கத் தொடங்கினார்.பெண்ணடிமையிலிருந்து பெண்களை விடுவிக்க இந்துசட்ட மசோதாவை கொண்டு வந்தார்.இந்த இந்துசட்ட மசோதாவில் ஆண்களுக்கு எவ்வளவு சொத்துக் கொடுக்க வேண்டுமோ அதே அளவு மகளுக்கும் சொத்துக் கொடுக்க வேண்டுமென்று சட்டம் இயற்றினார்.விதவைப்பெண்களுக்கு கணவரின் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமென்று சட்டத்தை இயற்றுகிறார்.விதவைப் பெண்ணின் மகள், மகனுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சட்டத்தை இயற்றினார்.இந்துமத சட்டப்படி ஆணுக்கு மனைவியை பிடிக்கவில்லை என்றால் வேறு திருமணம் அல்லது எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.ஆனால் பெண் அப்படி கிடையாது என்று இந்துமத சட்டம் கூறுகிறது.இதனை அம்பேத்கர் எதிர்த்து இந்துமத சட்ட மசோதாவில் பெண்களுக்கும் விவாகரத்து செய்யும் உரிமை உண்டு என முன்மொழிந்தார்.இந்துமத சட்டப்படி ஒரு ஆண் ஒரு பெண்ணை விட்டுச்சென்றால் ஆணின் சொத்தில் பெண்களுக்கு பங்கு கிடையாது என்று கூறுகிறது.ஆனால் அம்பேத்கர் இதனை எதிர்த்து பிரிந்து சென்ற பெண்ணுக்கு ஜுவனாம்சம் என்ற ஒரு பகுதி கொடுக்க வேண்டுமென்று முன்மொழிந்தார்.இந்துமத சட்டத்தில் வயது முதிர்ந்தோர் இளம் பெண்களை அதாவது 12,13 வயது பெண்களை திருமணம் செய்து கொண்டனர்.இந்துமத சட்ட மசோதாவில் இதை எதிர்த்து ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயது குறிப்பிட்ட வயது இருக்க வேண்டுமென்று நிர்ணயித்தார்.குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டும் தான் இருந்தது.அம்பேத்கர் 1956ல் பெண்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என இந்துமத சட்ட மசோதாவில் முன்மொழிந்தார்.இது மட்டுமில்லாமல் சமூக போராட்டங்களை முன்னெடுக்க பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு, அதாவது கர்ப்ப காலங்களில் விடுமுறை அளிக்க வேண்டுமென அரசுப்பணி பெண்களுக்கு விடுமுறை வாங்கி கொடுத்தார்.அம்பேத்கர் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தனிமனித உரிமைக்காக குரல் கொடுத்தார்.ஆணும் பெண்ணும் சமம் என்ற சம உரிமையை நிலைநாட்டினார்.எல்லா சமூக மக்களின் அடிப்படை உரிமைகளை சட்டத்தின் மூலமாக நிறைவேற்றினார்.அனைத்து தரப்பினருக்குமான தலைவராகத்தான் அம்பேத்கர் இருந்தார்.இங்கு இருக்கக்கூடிய சமுதாயமும், இங்கு இருக்கக்கூடிய அரசாங்கமும் அரசியல் சுயலாபத்திற்காக ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராக சித்தரிக்கின்றனர்.

என்னுடைய பார்வையில் இந்த சமூகத்தில் பெண்களின் நிலை;

                 பெண் என்றாலே பலமானவள்.ஆனால் இன்னும் ஆண்கள் எல்லாருமே பெண்களை பலவீனமாகவே பார்க்கிறோம்.அன்பு செலுத்துவதில் பெண்ணுக்கு நிகர் யாருமில்லை.ஒரு குடும்பத்தின் முன்னேற்பாடுகளை எடுத்து நடத்துபவள் பெண்.ஒரு பெண்ணோட கனவை நிறைவேற்றுவதுதான் ஆணோட வேலை.அதை சுற்றி ஓடுவதுதான் உலகத்தின் இயக்கமாகவும் இருக்கிறது.பெண் ஒரு ஆணின் வாழ்க்கையில் முக்கியமானவள்,வலிமையானவள்.ஆனால் இந்த சமூகத்தில் பெண்கள் காட்சிப்பொருளாகவும்,சதைப்பிண்டமாகவும் பார்க்கப்படுகின்றனர்.தற்போது சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலத்தில் 6மாத குழந்தையை ஒரு ஆண்  கற்பழித்திருக்கிறான்.இதைக்கண்டு ஒவ்வொரு ஆணும் வெட்கப்பட வேண்டும்,அவமானப்பட வேண்டும்.இந்த  ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் நடிகர் சங்க தேர்தலையும்,BIG BOSS என்ற நிகழ்ச்சியையும் தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளியை(TRP) அதிகரிக்க இதை நோக்கி ஓடி கொண்டிருக்கின்றன.இந்த குழந்தையின் பிரச்சினையை ஒரு ஊடகமும் பெரிய அளவிற்கு எடுத்து எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை.எல்லா ஆண்களும் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.இதனை உணர்ந்து ஒவ்வொரு ஆணும்  பெண்களின் பார்வையிலிருந்து திருத்திக்கொள்ள வேண்டும்.

Comments

Post a Comment